Friday, October 18, 2013

பி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந்தா!

06-10-2008 அன்று தமிழ்மணம் வ(ம)லை ஏறினேன்.உச்சிக்கு வந்தேனா?ஐந்து வருடம் ஓடிவிட்டது.வலையேற்ற உதவிய அதிஷாவிற்கும் பதிவுகளைப் பாராட்டி/விமர்சித்து ஊக்கம் கொடுத்த தமிழ்ப்பறவைக்கும் (முதல் பாலோவர்) நன்றி.

அப்பா...
  
 Ervamatin போடுகிறரா?

வலைக்கு வருவதற்கு முன்பும் எழுத்தில் ஆர்வம் உண்டு.பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிய அனுபவம் உண்டு.சமூகவலைத் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் வரவால் எழுத்து ஊடங்களில் சிறுகதைகள் சுருங்கிப்போய்  பழைங்கதையாகியது.ஒரு கதவு மூடியது.இன்னொரு கதவு திறந்தது.அது எனக்கே எனக்கான வலைத்தளம் இலவசமாக.வடிகால் ஆயிற்று.உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


திரும்பிப்பார்த்து என்ன சாதனை செய்தேன் என்று யோசிக்கிறேன்.


கட்டட்ற சுதந்திரத்தோடும் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளிய கதைகள்,கவிதைகள்,விமர்சனங்கள்,இளையராஜா இசை ரசிப்புகள்,எல்லா சப்ஜெக்ட்டிலும் சகட்டுமேனிக்குக் பதிவுகள்,சினிமா விமர்சனங்கள் துணுக்குகள்,விளையாட்டு  etc. etc. etc., etc., என்று போகிறது.அரசியல்,மதம் லேசாகத் தொட்டுப்பார்த்ததோடு சரி.ஆர்வமில்லை.ஏன் ஆர்வமில்லை? ஏன் வம்பு என்றுதான். ஏதோ எழுதினமா... மக்கள் படிச்சாங்களா.... கமெண்ட் போட்டாங்களா... நாம சந்தோஷம் ஆனமா என்கிற சுயநலம்தான்.

புதிதாக முக்கியமாக இளையராஜா பதிவுகளை ஆத்மார்த்தமாக செய்தேன்.ரசித்தார்கள்.பின் தொடர்ந்தார்கள்.அடுத்து கவிதை எழுதப் பழகினேன்.10 நல்ல கவிதைகளும் 105 மொக்கைக் கவிதைகளும் எழுதினேன்.

சொந்தமாகவே சகட்டுமேனிக்கு ரசனை இருப்பதால் எதையும் ரசித்துப் பதிவு எழுதமுடிகிறது.தி.ஜானகிராமனின் எழுத்து வாசிப்பில் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.


ஆரம்பித்த புதிதில் கமெண்டுகளுக்கும் பாலோவர் வேண்டி பல்லிளித்ததும் உண்டு.ரூம் போட்டு மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன். பதில் மரியாதை செய்தார்கள்.பதிவர் சந்திப்பிற்கெல்லாம் போய் “காட்டி”க்கொண்டேன்.

ஐந்து வருடத்தில் பதிவுலகம் பேஸ்புக் டிவிட்டர் வந்தபிறகு மாறிவிட்டது.இதில் இண்டர் ஆக்‌ஷன் குறைந்துவிட்டது. தூரத்து உறவாகிப்போனது தமிழ்மணம்.

மறக்க முடியாதது ராஜா-ரஹ்மான் சண்டை.நான் ராஜா ரசிகன்.பிளாக் ஆரம்பித்த புதிதில் ஏதோ டீக்கடையில் நின்று கதையளப்பது போல் எழுத பிரச்சனை ஆகி டமால் டிமீல் ஆகிவிட்டது.Fuck,Asshole,Bastard போன்ற வசவுகள் தாறுமாறாக வந்தது. இதில் மன உளைச்சல் என்னவென்றால் கமெண்ட்டுக்கு பதிலிளிக்க “மறுபடியும் முதலிலிருந்து” ஆரம்பிக்க வேண்டி இருந்தது.


சினிமா இசையை நேற்று கேட்டுவிட்டு இன்று கமெண்ட் போடும் மொக்கைகள்தான் தாங்கமுடியவில்லை.இவர்கள் எந்த இசையையும் ஒழுங்காக கேட்டதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டுவிட்டேன்.எது ஆழம் எது மேலோட்டம் என்று சுத்தமாக தெரியவில்லை இவர்களுக்கு.
போறாளே பொன்னுத்தாயி....

எல்லாம் போல் இதுவும் கடந்துப் போயிற்று. 

கிழே என் முதல் பதிவு.எதையோ எதிர்பார்த்து இதைப் படித்த அதிஷா “ சரி... இவருக்கு அரை சதவீதம் எக்ஸ்டரா வட்டி கிடைக்கும்  போலிருக்கு” நெளிந்தார்.அவசரத்திற்கு பிளாக் ஆர்வத்தால் எழுதிய பதிவு.வலையேற்ற மூன்று பதிவு கட்டாயமாக எழுதவேண்டும்.எனக்கும் பிடித்துத்தான் எழுதினேன்.

இதற்கு ஒரு கமெண்ட் இல்லை.நொந்துபோனேன்.

பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:


ஸ்டாக் டேங்கில் மொத்தம் 524 பதிவுகள்.சிறுகதைகள் 50. கவிதை 115.இளையராஜா 35. 294 பாலோயர்ஸ். இது போதும் எனக்கு ... இது போதும் எனக்கு.(அய்யோ....ரஹ்மான் பாட்டா??)

நான் ரொம்பவும் சிலாகித்து எழுதிய சிறுகதை இரண்டு.சலூன் கதையைக் குறும்படமாக இயக்கலாம். சூப்பராக இருக்கும்.கதைகளுக்கு  படமாக நெட்டில் சுட்டு ஆண் பெண் போட்டோக்களைப் போடுவது உடன்பாடு இல்லை.அது படிப்பவர்களின் கற்பனையில் குறுக்கிடுவது.

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் 

எனக்குப்பிடித்த திகில் கதை
பேய் வீட்டில் விழுந்த செல்போன்

எனக்குப்பிடித்த கவிதைகள்

ஹாலில் பெய்த மழை

மொட்டை மாடி

பிடித்த ஹைகூ கவிதை

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா
 

ஹைகூக்கள்சமந்தா புராணம்

ஸ்ரீப்ரியாக்கு பிறகு என் மனதில் இடம் பிடித்தவர் சமந்தா.காரணம் நீஎபொவில் இவர் வெளிப்படுத்திய முகபாவங்கள்... குறுகுறுப்புகள்.Stunning ! கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்(?) உடல் மொழி இருப்பதாக என் யூகம்.


மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இதுபோதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா

கண்ணில் தாகம தீருமோ  மித்ரா.... மித்ரா...

ஒரு குறும்படம்  “கடிதம்”

 குறும்படம் அருமை.ஆரம்ப இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாக ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது.(படத்தின் இசையமைப்பாளர் என்று டைட்டிலில் யாரும் இல்லை.)

கடிதம் என்ற சொல்லில் உயிர் இருக்கிறது.ஆத்மா இருக்கிறது.திறந்த மனம் இருக்கிறது.நிறைய எழுத்தாளர்களுக்கு தலைப்பாக இருந்திருக்கிறது.You  Tubeல் முதல் அடி.....

ரொமப வருடமாக யூ டுயூபில் சொந்தமாக  இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிப்போய் போனவாரம்தான் கைகூடியது.

நான் வலையேற்றிய முதல் பாடல். பழைய சிலோன் ரேடியோவில் கேட்பது மாதிரி ஆடியோ. 2.22 வில் ” என்னாளும் நீ தொட்டால் அடி அம்மாடி” ஜானகி மயக்கும் குரலில் வசீகரிக்கிறார்.

1.30 -2.03 இதெல்லாம் ராஜாவைத் தவிர யாரும் மீட்ட முடியாது.

சமந்தாவின் காதலர்கள் அவர் முகத்தை பார்த்தவாறே பாட்டைக் கேட்டால் தாக்கம் இருக்கும்.
3 comments:

  1. வாழ்த்துக்கள் சார்....! இப்போதான் நுழைஞ்சமாதிரி இருக்கு:)))

    ReplyDelete
  2. அட சூப்பர்சூப்பர்!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!