Friday, January 31, 2014

இளையராஜா-கூடு விட்டு கூடு-ஆனந்தராகம்-சாராயே ஆலம்

சொந்த மாநிலத்திலேயே ஓர் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு இடம் பெயரும்போது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மாறவேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது நம்மிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.மாற வேண்டியது அவசியமாகிவிடும்.காரணம் அங்கு நிலவும் பண்பாடு, அரசியல், உணர்ச்சிகள், உணவு,உடை மற்றும் இன்னபிற.

மனிதனைப்போல சினிமா பாடலும் புலம் பெயரும்போது தன் ஒப்பனையை உணர்ச்சிகளை மாற்றிக்கொள்கிறது.

இளையராஜா தன் பாடல் ஒன்றை இப்படி கதை, சூழ்நிலை, புலம், உணர்ச்சிகள் மாறினாலும் பாடலின் மைய இழையை ஆதார கருவை (மெட்டை) விடாமல் கூடுவிட்டு கூடு இசைத்திருக்கிறார்.

படம்: பன்னீர் புஷ்பங்கள்(1981) பாடல்: ஆனந்தராகம் கேட்கும்.பாடல்

இந்தியில் “சாராயே ஆலம்” படம்: ஷிவா(2006).25 வருடங்கள் ஆகியும் பாடலின் மெருகு கலையாமல் இருக்க அதையே ஷிவா படத்திலும் உபயோகப்படுத்த சொல்கிறார் இயக்குனர்.

கிழ் ஆடியோவில் இரண்டுபாடல்களின் குரலிசைகள் பல்லவி,சரணம் என்று மாறிமாறி கோர்ப்பட்டுள்ளது.

ஆனந்தராகம்    கேட்கும்  VS  சாராயே.... ஆலம்

கன்றுக்குட்டி வெகுளி காதல்(infatuation love)  VS  இளம்பருவ விரகதாபம்(Sensuous love)

” ஆனந்தராகம் கேட்கும்” (பன்னீர் புஷ்பங்கள்-1981)பாட்டு ”சாராயே ஆலம்” என்று ஹிந்திப் படமான  “ஷிவா”(2006).25 வருடங்களுக்குப் பிறகு வேறுவிதமாக இசைக்கப்பட்டது( ரீமிக்ஸ்?).


”ஆனந்தராகம்” வெகுளித்தனமான பள்ளிப்பருவ காதல்.மனதில் எழும் ஆனந்த உணர்ச்சிகள்...சந்தோஷதருணங்கள் - சோலோ-உமாரமணன்


”சாராயே” இளம்பருவ விரகதாபம்-ஏக்கம்-காதல். -டூயட்-ஷ்ரேயா-ரூப் குமார் ரத்தோட்.

உணர்ச்சிகள், நிகழும் இடம்,புலம்,வரிகள்,மையம் இவைகளை மனதில்கொண்டு ஆனந்தராகத்தை மொழிபெயர்த்துள்ளார்.கருவிகளின் மொழிகள் முக்கியமானவை.

 குரல்கள் மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக




சிம்மேந்திரம மத்தியமம் ராகத்தை இரண்டிலும் பாடலின் மைய்ய இழையாக அமைத்துள்ளார்.

இடையிசை  மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக


3 comments:

  1. இதே மெட்டையும் இசைக்கோர்வையும் இசையமைப்பாளர் தேவா நேசம் என்ற படத்தில் உறுவிவிட்டார்.http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Nesam/Oh%20Ranganatha%20-%20TamilWire.com.mp3

    ReplyDelete
  2. தேவா.... தேவா....

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!