Friday, December 21, 2012

லைப் ஆஃப் பையும் நானும் பின்னே அதிஷாவும்

பேஸ்புக்கில் லைப் ஆஃப் பை படத்தைப்பற்றி என் கருத்தை எழுதி இருந்தேன்.அது “ படத்தில் முக்கியமான விஷயமான புலிக்கும் அந்தப் பையனுக்கும் இடைய உள்ள ஆத்ம உணர்ச்சிகள் சரியாக வெளிப்படவில்லை மற்றபடி காட்சிகளில் ஒரு வித அமானுஷ்யத்தை என்னால் உணர முடிகிறது.’

இதற்கு அதிஷா ” சேம் பீலிங்” என்று கமெண்ட் போட்டிருந்தார்.அவர் தமிழில் இதைப் பார்த்ததாகவும் வளவளவென்று ஓவர் தத்துவம் பேசுகிறார்கள் என்றும் கூறி இருந்தார். அடடா.. தமிழில் பார்த்திருக்கலாமோ (நமக்கு கொஞ்சம் தத்துவம் பிடிக்கும்) என்று யோசனை வந்தது.ஆனால் தமிழ் பதிப்பு இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப ”தொலவு”.

பார்த்திருந்தால் ஒரு வேளை ஆத்ம உணர்வுகள் வெளிப்பட்டிருக்குமோ?

சரி விஷயத்திற்கு வருகிறேன்.பல பல வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு குளவிக்கும் இடையே நடந்த 7 நிமிட திகில் போராட்டத்தில் ஒரு ஆத்ம/ஆன்மீக உணர்வு அல்லது ஏதோ ஒன்று என் மீது படர்ந்து அமைதியாக்கியது.

அது ஒரு பிரவுசிங் செண்டர்.முடை நாற்றம் வரும் செண்டர்.மத்தியான வேளை.ரொம்ப ரொம்ப குட்டி வொர்க் ஸ்டேஷனில் நான் பிரவுஸ் செய்துக்கொண்டு இருக்கிறேன்.என் தலைக்கு மேல் சின்ன வெண்டிலேட்டர்.ஓனர் சாப்பாட்டிற்கு போய்விட்டார்.நான் மட்டும்தான்.


பிரவுசிங்கில் ஆழ்ந்து இருக்கும்போது வெண்டிலேட்டர் வழியாக விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பூச்சி என் காதருகில் அந்தரத்தில் ஹெலிகாப்டர் போல் சிறகடித்தபடி.அது குளவி (டொக்கென்று கொட்டும்)என்று தெரிந்ததும் உடம்பு உதறி தலையை திருப்பியதும் நேராகப் போய் மானிடரில் ஒரு முட்டுமுட்டிவிட்டு மீண்டும் என் முகத்தருகே அந்தரத்தில் விர்ர்ர்ரென்று  எங்கே லாண்ட் ஆகலாம் என்று யோசித்தப்படி.உயிர் பயத்தில் சட்டென்று மவுசை(மவுஸ் பேட் இல்லாத மவுஸ்) எடுத்து தலை கிழாக(பின் பக்கம் வெயிட் ஜாஸ்தி) திருப்பியபடி சூசூ சூ என்று நடுங்கிக்கொண்டேமுகத்தைத் தள்ளி வைத்துக்கொண்டு  அதை விரட்ட முயற்ச்சித்தேன்.

ஆனால் மவுஸ் எட்டவில்லை.மவுஸ் அடியில் இருக்கும் அழுக்கான ரோலிங் பாலில் கவரப்பட்டு அதை நோக்கி விர்ர்ட்டது.பயத்தில் கையை உதறியவுடன் மவுஸ் சைடில் விழுந்து தொங்கியது.ஏமாற்றத்தில்(கோபத்தில்)அதை விட்டுவிட்டு மீண்டும் என் முகத்தில் விர்ர்ட்டது.
Wasp - Gangnam Style

அடுத்து கழுத்தை பின்னே தள்ளியவாறு ஹார்டு டிஸ்கில் இருக்கும் சிடியை எடுத்து அதை ஆயுதமாக பயன்படுத்த பட்டனை பிரஸ் செய்தேன்.ஒர்க் ஆகவில்லை.அது  டம்மி  டிஸ்க் என்று தெரியவந்தது.

அடுத்த 10 வினாடி அமைதி.குளவி அதே பொசிஷனில்  அந்தரத்தில் விர்ர்ர்ர் அடிக்க நான் அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

உதட்டை ஈரமாக்கிக்கொண்டு உற்று பார்த்தபடி  “ ஏய்.. உனக்கு இப்ப என்ன வேணும்.உன்னோட மண் கூட்ட தேடறீயா.....அதோ அங்க இருக்கு பாரு” என்று வெண்டிலேட்டரை கை காட்டினேன்.

அது சற்று நகர்ந்துவிட்டு மீண்டும் தன் பழைய இடத்திற்கே வந்தது.இரண்டு பேரும் கிட்டத்தட்ட இரண்டேகால் நிமிடம் இப்படியே நேருக்கு நேர் ஆத்ம உணர்வுடன் பார்த்தபடி (என் உதட்டில் புன்னகை கொஞ்சம் தவழத்தான் செய்தது) இருக்க திடீரென்று எஸ் வடிவில் மாறி மாறி  விர்ர்ர்ட்டு  பறந்து சடக்கென்று வெண்டிலேட்டர் வழியாக பறந்தது.

வெண்டிலேட்டர் வழியாக  குளவிக்குப் பதிலாக பெங்கால் டைகர் குதித்திருந்தால்?


No comments:

Post a Comment

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!