Thursday, August 23, 2012

”ஆண்பாவம்” ரீமேக்??வேணாம் ..உட்ரு..பாவம்டா!

கொஞ்சம் வருடம் முன்பு பழைய பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி காவியமாக்கி இளைய தலைமுறை கேட்டு புல்லரித்து புளாங்காகிதம் அடைந்து இரும்பூது எய்தினார்கள்.

ஒரிஜினல் மான்விழியாள்

அதில் ஒன்று அன்புள்ள மான்விழியே.இந்த அற்புதமான மெலடி(எம் எஸ் வி)ஒரிஜினலில்(குழந்தையும் தெய்வமும்) அடக்க ஒடுக்கமாக காதலர்கள் பாடினார்கள்.

 ரீமிக்ஸில் (ஜக்குபாய்) பிட்டுப் பட ரேஞ்சில் பாடப்பட்டது.
அன்புள்ள மான்விழியாள் ஜட்டியோடு வந்துப் போனார்.புல்லரித்தார்கள். நானும்தான்.எவ்வளவு பேருக்கு இதன் ஒரிஜனல் தெரியும்.

இந்தப் பாட்டை அதே ஒரிஜினல் மெலடியுடன்இப்போது போட்டால் படு பத்தாம்பசலித்தனம்.போட்டாலும் நடுவில்  ah buddy...why why this a ....ah buddy...why why this a....ah buddy...why why this a" என்று கடுக்கன் போட்ட சாயத்தலைகளின் குரல்கள் வருவது மாறி போடவேண்டும்.

ஜக்குபாயின் மான்விழியாள்

பாட்டில் நடந்தது படத்திலும் நடக்கப்போகிறது.நடந்தது.


பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார்கள்.அது ஹீசைன் போல்ட் வேகத்தில்  600 நாள் ஓடி  ஒரிஜினலயே பீட் செய்தது. காரணம் படத்தின் காலக்கட்டம் மற்றும் அதன் அன்றைய மொழி(நேட்டிவிட்டி).1981ஐ  2009க்கு கொண்டுவரமுடியாமல் சொதப்பினார்கள்.28 வருடங்களில் எவ்வளவு மாறி விட்டது.அதை சுத்தமாகப் புரிந்துக்கொள்ளவில்லை.


ரீமிக்ஸின் அண்ணான ரீமேக்கில் இப்போது பல படங்கள் இருக்கின்றன.

தில்லுமுல்லு(1981),ஆண்பாவம்(1985),மன்மத லீலை(1976) படங்கள் ரீமேக் ஆகுதாம்.ஆண்பாவம் படத்தை என்ன மதிப்பில் ரீமேக் செய்கிறார்கள்?அதில் இரண்டு அண்ணன் தம்பி அராத்துக் கேரக்டர்கள் ஸோ வீ ஆர் ஆல்சோ அராத்ஸ் என்று  ரீமேக்கில்  உதயநிதியும் சந்தானமும். 2012க்கு தோதாக மாற்றி சந்தானம் வளவளவென்று பேசி இம்சைப் படுத்துவார்.

ஆனால் அந்தப் பழசில் இருக்கும் இதில் ஆத்மா வருமா?பழசை நன்றாக உள்வாங்கி அதில் இருக்கும் நேட்டிவிட்டியை இப்போதைக்கு மாற்றி வெற்றிப்பெற்றால் சந்தோஷம். ஆனால் முடியாது.இது  கதைப் பஞ்சத்திற்காக இந்த ரீமேக். ”நாங்க அராத்து” என்கிற ஒன்லைனுக்காக ரீமேக்.சார்லிசாப்ளின் படங்களை 2012க்கு ஏற்றற்போல் ரீமேக் செய்ய முடியுமா?

ரீமேக் பணால் ஆச்சுன்னா நாரோட சேர்ந்து பூவும் நாறும்.

ஆண்பாவத்தில் அராத்துத்தனம் இருக்கிறது.ஆனால் கதையோடு ஒட்டி  ஒரு மொழி பேசுகிறது.இதில் மற்றும் முக்கியமான விஷயங்கள்.

1.யதார்த்தமான நகைச்சுவை
2.கிராமப் பின்னணி
3.சிறந்த திரைக்கதை
4.வித்தியாசமான தலைப்பு(அப்போதைக்கு)
5.லொகேஷன் மற்றும் செட்டுக்கள்
6.ரேவதி/சீதாவின் இயல்பான நடிப்பு/சீதாவின் வித்தியாசமான அறிமுகம்
7.இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை


இது மிக சிறந்த தமிழ்ப் பட வரிசையில் ஒன்று.குறைகள் இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னார்கள்.200 நாளுக்கு மேல் ஓடியது.

வி.கே.ராமசாமி வாழ்ந்திருப்பார். கேரக்டர் பெயர்கள் எல்லாம் ஒரிஜினல் பெயர்களே.சீதா,ரேவதி,ராமசாமி,பாண்டியன் இப்படி.இதில் கார் ரிவர்ஸ் காமெடி (பாலத்துல முட்டுதான்னு பாரு)அப்போது ரொம்ப பிரபலம்.

அசோக்குமாரின் கேமராவில் சில கவித்துவமான காட்சிகள் உண்டு.

1.ஒரிஜனல் மாப்பிள்ளை தான் இல்லை என்றதும் சுவற்றில் உயரம் அளப்பதற்கு போடப்பட்ட கோட்டைப் பார்த்துக்கொண்டே அவமானத்தில் வெளியேறுவது.

2.கடியாரத்திற்காக சண்டைப்(வில்லனுடன்) போட்டு பிடுங்கிய அடுத்த நொடி அது ஓடுகிறதா என்று பார்ப்பது.(சீதாவிற்கு ஒரு மணிக்கு ஒரு தரம்  நினைவுப்படுத்த அலாரத்தோடு பாண்டியன் கொடுத்தது)

3.சீதா-பாண்டியன் காதல்-மோதல் காட்சிகள் அதன் பின்னணி இசை


யதார்த்தமான நகைச்சுவை:

1.(பெண் பார்க்கும் வைபவத்தில்) சீதா: யாரு மாப்பிள்ளன்னு தெரிஞ்சுகிறது?
தோழி: நெத்தில மாப்பிள்ளன்னு எழுதி ஒட்டி இருக்கும்.

2.கார் ரிவர்ஸ் எடுப்பவர்: கார் பின்னாடி பாலத்துல முட்டுதான்னு பாரு.
பாண்டியராஜன்: வாங்க... இன்னும் வாங்க...(டமால் டப்பு.கார் பாலத்தை முட்டுகிறது) முட்டிச்சிங்க.

3.சீதாவின் அம்மா: ஏண்டி  ஆத்திலந்து தண்ணீர் கொண்டு வர லேட்டாகுது?இப்பெல்லாம் உன் காலு ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிச்சு.

4.ஜனகராஜ்(ஹோட்டல் ஓனர்) சரக்கு மாஸ்டரைப்(உசிலை மணி) பார்த்து : உன் உடம்பைக் குறைக்க ஒரு சான்ஸ்... ஆயிரம் லட்டு செய்யறதுக்கு ஆர்டர் வந்திருக்கு

இளையராஜாவின் பின்னணி இசை


11 comments:

 1. itha vittuteengale..

  Ramasamy's mother : itha kettiya, un mavan enna kalyanam pannikaraanaam

  Ramasamy : Enda kizhaviya kalyanam pannikarennu sonniya??

  Pandiarajan : Ama, nee engammava kattikalaam, naan ungammava kattikka koodaatha??

  ReplyDelete
 2. ஆமாம இதுவும் நல்ல ஜோக்குதான்.ஆனால் சுடப்பட்டது.

  ReplyDelete
 3. பல தகவல்களின் அலசல்... பாராட்டுக்கள்...

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 4. பாப்போம் எப்டி பன்றாங்கன்னு

  ReplyDelete
 5. வழக்கம் போலக் குட்டிச்சுவர் ஆக்கிடுவானுக

  ReplyDelete
 6. நல்ல பதிவு. இவர்களுக்கு சொந்தமாக எதுவும் பண்ண முடியாதுதான். அதான் ரீமேக், திருட்டு என இறங்குகிறார்கள். பார்க்கத்தான் சகிக்கவில்லை

  ReplyDelete
 7. இந்த ரீமேக் இம்சைங்க தாங்க முடியல தல ;(

  ReplyDelete
 8. என்ன ஒரு மனதை மயக்கும் இசை பாருங்க...
  -பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete
 9. AanPaavam....Thanks for reminding this classic!
  Potti Vandhurichu!

  ReplyDelete
 10. நன்றி தனபாலன்,கானாபிரபா,பிரேம்குமார்

  ReplyDelete
 11. நன்றி தமிழானவன், கோபிநாத், அசடன்,மாயா

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!