Wednesday, February 15, 2012

தோனி - சினிமா விமர்சனம்

தோனி திரைப்படம் Shikshanachya Aaicha Gho என்ற மராத்திப் படத்தின் தாக்கம் என்று சொல்லப்படுகிறது.பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் முதல் படம்.வெற்றி பெற்றுவிட்டார்.சொல்ல வந்த விஷயத்தை பலமான காட்சி அமைப்புகளுடன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
பிடிக்காத ஏட்டுப்படிப்பை பிள்ளைகளின் மண்டையில் ஏற்றி அவர்களின் மற்ற துறை ஆர்வத்தை கண்டுக்கொள்ளாமல் அவர்களை சீரழிப்பதுதான் கதை.

பிரகாஷ்ராஜ மிடில்கிளாஸ் மாதவனாக வந்து பிரச்சனையை மிடில் கிளாஸ்தனமாகவே கையாண்டு நொந்து நூலாகும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நடிகராகவும் வெற்றி.அடுத்து பையன் ஆகாஷ் அற்புதம்.



முகத்தில் எப்போதும் ஒரு சோகம்.பக்கத்துவீட்டுக்காரியாக வரும் ராதிகா ஆப்தே கோலிவுட்டுக்குப் புது வரவு.தோற்றமும் அடுத்தவீட்டுப் பெண் தோற்றம்தான்.இந்தத் தோற்றத்தில் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா. நடிக்கத்தான் விடுவார்களா.பாலிவுட்டில் வேறு மாதிரி இருக்கிறார்.


மொழி படத்தின் வசன கர்த்ததான் இதிலும்.ஞானவேல்.காமெடி வசனங்கள் கலக்கல்.படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.எல்லா பிரச்சனைகளும் பாசீட்டிவாக முடிவதாக காட்டப்படுவது ஒரு புது முயற்சி.

இரண்டுமொழியில் எடுக்கப்பட்டு இருப்பதால் பாத்திரங்கள் இரண்டுக்கும் பேலன்ஸாக இல்லாமல் தெலுங்கு சாயல்.போலீஸ் ஸ்டேஷன் ஆபிஸ் எல்லாம் பளிச் பளிச்சென்று இருக்கிறது.கந்துவட்டிக்காரராக வருபவர் ஒட்டவே இல்லை.

கடைசி கால் படம் ஓவர் மிகை.விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் அடுத்த பலம் இளையராஜா. பின்னணி இசை படத்தோடு இசைந்துப் போகிறது.”விளையாட்ட படகோட்டி” பாடல் வைத்த இடம் அற்புதம்.



6 comments:

  1. ரொம்ப சின்னதாக விமர்சனம் எழுதினாலும் அற்புதம் தல ;-)

    ReplyDelete
  2. சிறப்பான விமர்சனம்///நன்றி.

    ReplyDelete
  3. உங்கள்ட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. நன்றி கோபி,குமரன்,ராஜா

    ReplyDelete
  5. மொழி படத்தின் வசககர்த்தா விஜி. ஞானவேல் அல்ல

    ReplyDelete
  6. விவரத்திற்கு நன்றி மனசாலி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!