Friday, January 20, 2012

பாண்டு,பொம்மை,அருண்மொழி,பரத நாட்டியம்

நடிகர் பாண்டு ஒரு நகைச்சுவை நடிகர் என்றுதான் பலருக்குத் தெரியும்.அவர் சிறந்த ஓவியர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.அவர் தன் ஓவியங்களை வைத்து கண்காட்சியெல்லாம் நடத்தி இருக்கிறார்.
பாண்டுவும் அவர் மகனும்
முக்கியமான விஷயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் லோகோவை வடிவமைத்தவர் பாண்டுதான்.கிழே படத்தில் உள்ள குடை லோகோவை வடிவமைத்து பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர் பல வருடங்களுக்கு முன்பு.

_______________________________________________________

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போகவில்லை.போனவருடம் வாங்கிய புத்தகங்களே(நீண்ட நாவல்கள்) இன்னும் முடித்தப் பாடில்லை.எந்த ஒரு புத்தகமும் முழு மூச்சில் படிப்பதில்லை.திடீரென்று பத்தாவது பக்கத்தில் நிறுத்திவிட்டு அடுத்த புத்தகத்திற்குத் தாவுவது.

தாவும் புத்தகம் துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.பார்ப்பவர்களுக்கு லூசுத்தனமாக இருக்கும். சத்தியமாக எனக்கு இது ஒரு ரிலாக்ஸேஷன் மாதிரி உள்ளது.தாவுதலில் சுவராஸ்யம் கெட்டும் போவதில்லை.

பள்ளி பருவத்திலும் தேர்வுக்குப் படிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சட்டென்று தாவி வேறு ஒரு பாடம் படிப்பேன்.

அடுத்து வாங்குவதற்கு முன் வைப்பதற்கு இடம் யோசிக்க வேண்டி இருக்கிறது.
_______________________________________________________

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிப் பேட்டியில் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி(நெப்போலியன்) சொன்னது:இதில் சில விஷயங்கள் தெளிவாகிறது:-

1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை??? நான் படைத்தேன் என்னும் உளவியல்...?????????

2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு

3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.

4.அருண்மொழி வேறு எந்த வெளி மெல்லிசைக் கச்சேரிகளுக்கு வாசிப்பதில்லை??
_______________________________________________________

பரத நாட்டியம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அதைப் பற்றி ஒன்றும் தெரியாது.அதில் உணர்ச்சிகள் பலவித பாவத்தில் அபிநயம் பிடிக்கப்படுவதால் ஒரு ஈர்ப்பு.மற்றும் வண்ணமயமான உடை அலங்காரம்.ரொம்ப ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கலை.

இதில் பிடிக்காதது ரொம்ப வயது முதிர்ந்த முகத்தில் சுருக்கம் விழுந்த நடனமணிகள் ஆடுவது.முக பாவங்கள் ரசிக்க முடியவில்லை.


தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு கடந்ததை ஒட்டி ஆயிரம் பேர் பத்மா சுபரமணியன் தலைமையில் நாட்டியம் ஆடுகிறார்கள். அற்புதம்.


_______________________________________________________

"பொம்மை” என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படம் 1963 ரிலீஸ் ஆகியது.சிறு வயது,கல்லூரி பருவம் மற்றும் வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.இப்படத்தை இயக்கியவர் வீணை மேதை எஸ்.பாலசந்தர்.இப்படத்திற்க்கு இசையும் இவரே.
இந்தப் படத்திற்க்கு தேவையான முக்கியமான விஷயம் மிஸ்ஸிங்.அது விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ்.இவரே முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார்.ஆனால் பொருந்தாத மிகை நடிப்பு.அந்த கால டிராமா.

பொம்மை நடந்துவருவதை வைத்து திகில் கிளப்பி இருக்கலாம்.ஒரு வேளை அந்தக் காலத்தில் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ?

படத்திற்கு தனியாக டைட்டில் கிடையாது.படம் முடிந்தவுடன்
இந்த சேரில் உட்கார்ந்தவாறே நடிகர்களை அறிமுகப்படுத்துவர்.
ஒவ்வொருவரும் மேக்கப் இல்லாமல் அவர்கள் தங்கள் பெயரைச் சொல்லுவார்கள்.
முதல் பெண் எல்.விஜயலஷ்மி வேட்டியில் இருப்பவர் வி.எஸ்.ராகவன் கடைசியில் சதன்
படங்கள் ஹாலிவுட் பாதிப்பில் இருக்கும்.பல புதுமைகளைப் புகுத்துவார்.பாடல்கள் இல்லாமல் “அந்த நாள்” படம் இயக்கினார்.”நடு இரவில்” “அவனா இவன்” போன்ற சஸ்பென்ஸ் படங்களை எடுத்தவர்.
7 comments:

 1. நகைச்சுவை நடிகர் பாண்டுவைப் பற்றிய தகவல் மிகுந்த ஆச்சர்யம்.

  ReplyDelete
 2. மற்ற விஷயங்களும் சுவராசியமாகத்தான் உள்ளன. நன்றி!

  ReplyDelete
 3. நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி

  ReplyDelete
 4. //1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை??? நான் படைத்தேன் என்னும் உளவியல்...?????????

  2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு
  //

  ஒரு சிலர் விஷயத்தில் நீங்கள் சொல்வது சரிதான்! உதாரணத்துக்கு, இளையராஜா எல்லா பாடல்களுக்கும் நோட்ஸ் எழுதித்தான் பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டது! ஆனால், அந்த நோட்ஸ்களை பாதுகாப்பதற்கு ராஜா எந்த பிரயத்தனமும் செய்யவில்லை! எல்லாம் போயே போச்! போயிந்தி!!!! ராஜாவைப் பொறுத்தவரை அதை பெரிசாகவே எடுத்துக்கொள்ளவில்லை! ஒரு வேளை அடுத்து படைக்கப்போகும் பாடல் இதைவிட நன்றாக இருக்கக்கூடும் என்று நினைத்து நோட்ஸ்களை சேகரித்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன்!

  சென்னையில் இருந்து டெல்லிக்குப் போகும் ஃப்ளைட்டில் எழுதியதுதான் மொத்த “நத்திங் பட் வின்ட்” நோட்ஸ்கள்! ஐந்து பீஸ்களையும் மூன்று மணிநேரத்தில் எழுதியிருக்கிறார் ராஜா! ஆனால் அதை இன்னொருவர் கேட்டு நோட்ஸ் எடுப்பதற்கு ஆன நேரம் சுமார் இரண்டு வாரங்கள்!! I think Raja should have been really careful and paid attention to what he was producing by saving his notes....

  //
  3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.
  //

  ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளில் பார்த்தீர்களானால், எல்லா பாடகர்களும் ஒரிஜினல் பாட்டில் இருந்த ஒரு அவுட்புட் நேரிலும் இருக்கும்! அதேபோல் இசை! மேடையின் கொண்டுவரமுடியாத பட்சத்தில் இசையை மட்டும் ப்ளே செய்து ரிக்கார்டிங் க்வாலிட்டியை கொண்டுவருவார்கள்!!!

  ReplyDelete
 5. //ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளில் பார்த்தீர்களானால், எல்லா பாடகர்களும் ஒரிஜினல் பாட்டில் இருந்த ஒரு அவுட்புட் நேரிலும் இருக்கும்! அதேபோல் இசை! மேடையின் கொண்டுவரமுடியாத பட்சத்தில் இசையை மட்டும் ப்ளே செய்து ரிக்கார்டிங் க்வாலிட்டியை கொண்டுவருவார்கள்!!!//

  ராஜா அளவுக்கு சிக்கலான இசைக்கோர்ப்பு ரஹ்மானிடம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

  நன்றி ரவிஷா

  ReplyDelete
 6. டெச்ட்

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!