Sunday, December 4, 2011

எம்.எஸ்.விஸ்வநாதன் -மெல்லிசை வித்தகர்

வலது கை விரல்களால் ஹார்மோனியப் பற்களை அழுத்தி இடது கை விரல்கள் இரண்டை உயர்த்திச் சொடுக்குப்போட்டு ரெடிமேடாக மேஜிக் மெட்டுக்கள் போட்டு திரையுலகத் தமிழ் இசையை மெல்லிசைத்து 50 வருடம் ஆண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.முடி சூடா மெல்லிசை மன்னர்.

இவருடன் டி.கே.ராமமூர்த்தி இணைந்து பின்னால் பிரிந்தவர்.

இவரின் பல பாடல்களில் நடுநடுவே stunner(பிரமிப்பு) இசைத் துண்டு வந்து போகும்.லட்சணமாக இருக்கும்.

என்னால் மறக்க முடியாத பாட்டு “ அம்மம்மா கேள் ஒரு சேதி” ”பவள கொடியிலே”இதன் காட்சியும் நம்மை ஒன்ற வைக்கும்.தாளத்திற்கு “ஒரு பெண்ணைப் பார்த்து" " நீயேதான் என் மனவாட்டி” “அவளுக்கென்ன அழகிய” இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம.பல நாட்கள் ஆகும் முடிப்பதற்கு.

ரூமை(அதுவும் இரவில்) இருட்டாக்கி ஒரு திகிலுடன் “எங்கே நிம்மதி” பாட்டை ரசித்ததுண்டு.”ஆயிரம் கரங்கள்
போற்றி”(கர்ணன்),”நாம் ஒருவரை ஒருவர்(குமரிக்கோட்டம்),”நான் காற்று வாங்க”(கலங்கரை விளக்கம்) அடிக்கடி கேட்டு ரசிப்பதுண்டு.

இவரின் குரலில் பல அருமையான பாட்லகள்.”கண்டதை சொல்லுகிறேன்”
(சில நேரங்களில் சில மனிதர்கள்) ,”சொல்லத்தான் நினைக்கிறேன்””சிவ சம்போ” “இன்பத்திலும் துன்பத்திலும்” (சிவகாமியின் செல்வன்”""அல்லா அல்லா”(துக்ளக்)”பயணம்” (பயணம்).

பின் வரும் இசை பிரமிப்புக்களை கேளுங்கள்:-



மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்.பிறப்பு 24-06-1928.இன்றும் பல சேனல்களில் தன்னுடன் ஒட்டிப் பிறந்த தோரணையுடன் ஹார்மோனியத்தை செல்லமாக அணைத்தவாறு தன் இசையை சிலாகிப்பார்.

பன்முகத் திறமை இல்லாமல் இவ்வளவு வருடம் குப்பைக்
கொட்டமுடியாது.
பண்டித இசையை மெல்லிசையாக்கி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய முக்கியமான ஆளுமைகளில் முதன்மையானவர்.

அதுவும் சிவாஜியின் உதட்டுக்கும்/நடைக்கும் எம்ஜியாரின் கைஆட்டலுக்கும் கொள்கைக்கும் பாடல் எழுதப்படுகிறது.அதற்கு தன்னை உலுக்கிக்கொண்டு மெட்டுக்கள் போட்டு இளைத்துப்போனவர் மெல்லிசை மன்னர்.அவர்களுக்குத் தெரியாமல் நவீனத்தை மறைத்துக்கொடுத்தவர்.

இவர் காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு பொறுப்பு அதிகம். ஏன்? பல படங்களில் பாட்டிலேயே கதைச் சொல்ல வேண்டும்.வெயிட்டுஜாஸ்தி.சமூகம்,பக்தி,மாயஜாலம்,
சரித்திரம்,புராணம்,மேற்கத்திய நாட்டு கதை,திகில்,பேய்,கிரைம்,கர்நாடகம் என்று பல வித கூறுகளில் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்.

அயல் நாட்டு இசையை தமிழில் புகுத்தியவர். ”ஆட வரலாம்”(கறுப்புபணம்),”நினைத்தை நடத்தியே”(நம் நாடு),”மலரென்ற முகம்”(காதலிக்க நேரமில்லை)”என்னைத் தெரியுமா”(குடியிருந்த கோவில்).

அப்போது முக்கியமானது நேரலை இசை( live orchestra) அமைப்பு. எல்லா வாத்தியகாரர்களயும் கட்டி மேய்த்து இசை உருவாக்க வேண்டும். இடையில் தப்பு நேர்ந்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.

இவரின் தாக்கம் அவரின் சமகாலத்து இசையமையப்பாளர்களான வி.குமார்,சங்கர்கணேஷ்,
ஜி.கே.வெங்கடேஷ்,தேவராஜன்,விஜயபாஸ்கர்,ஆர்.கோவர்தன்,ஆர்.சுதர்ஸனம் இருந்தது.

இளையராஜா பாடல்களிலும்பார்க்கலாம்(நினைத்தால் போதும் பாடுவேன்(கலைக்கோவில்).ஆர்.ரஹ்மானுக்கு ரொம்ப செல்லமானவர்.தாக்கத்தில் ரிமிக்ஸ் போட்டதுண்டு.

பயணம் பாட்டைக் கேளுங்கள்.ஒல்டு இஸ் கோல்டு.

http://www.raaga.com/player4/?id=230558&mode=100&rand=0.031038899207487702

எம்.எஸ்.வி தமிழ்த் திரையுலகில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி விலகியவர்.


8 comments:

  1. மெல்லிசை மன்னரின் விசிறி இல்லை என்றாலும், ரசிக்கும் பலப் பல இசை அனுபவங்களைத் தந்தவர். மேற்கத்திய இசையின் தாக்கத்தை முதன் முதலில் என் கவனத்திற்கு கொண்டு வந்தவர். ஆரம்ப இளையராஜாவும் எழுபதுகளின் முடிவில் மெல்லிசை மன்னரையும் நான் குழப்பிக்கொண்டதுண்டு.

    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  2. மெல்லிசை மன்னரின் அருமையான பாடல்களின் தொகுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  3. pathivukku migavum nanri !!!!!!!!!

    ReplyDelete
  4. நான் உங்களை எம்.எஸ்.விசுவநாதன் இசையை கொஞ்சம் விமர்சிப்பவர். (நான் உங்களது பதிவுகளை அனைத்தும் படித்திருக்கிறேன் முக்கியமாக இளையராஜா பற்றி) என்று நிணைந்திருந்தேன். ஆனால் அதை துடைத்தெறியும் விதமாக நல்லதொரு பதிவிட்டிருக்கிறீர்கள்.நன்றி. என் பால்யத்தில் இளையராஜாவின் இசைஅடிப்படை இசை ரசனை ஊட்டியதென்றால். இப்பொழுது முதுமையின் அன்பை போல இருப்பது எம்.எஸ்.வியே அவரிடம் உள்ள மேதமை தனித்துவமானது. மாபெரும் இசைசரித்திரமாக இப்பொழுது எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  5. எம்எஸ்வியை குலதெய்வமாகக் கருதும் சிலரை நானறிவேன். நிம்மதியைத் தரும் அவருடைய இசையை நன்றியோடு நினைக்காத நாளே இல்லை எனலாம்.

    ReplyDelete
  6. நன்றி ஷக்திப்ரபா,ராமலஷ்மி,Unknown,அப்பாதுரை

    ReplyDelete
  7. ராஜா..

    //நான் உங்களை எம்.எஸ்.விசுவநாதன் இசையை கொஞ்சம் விமர்சிப்பவர்//

    இவர் இசையில் வளர்ந்தவன்.ராஜாவால் கடத்தப்பட்டவன்.எம்எஸ்வி ஜீனியஸ்.அவர் போட்ட பாதையில்தான் பின் வந்தவர்கள் நடக்கிறார்கள். இது உண்மை.அதில் ராஜா தனித்துத் தெரிகிறார்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி திரு ரவிஷங்கர்...நீங்கள் இன்னும் நிறைய பதிவுகளை எம்.எஸ்.வி பற்றி போடவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!