Tuesday, November 29, 2011

சாரகாத்து from ஹிந்தி?கேட்டதும் மயக்கம் என்ன?

ரொம்ப நாளைக்குப் பிறகு கடவுளைப் பற்றி சிம்பிளான இதமான வரிகள்.தபலா தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டுக்கள் எப்போதும் எனக்கு சுகம்தான்.அடுத்து சிதார்/வயோலா கருவிகளின் இன்பமான ஓலம்.

நான் சமீபத்தில் கேட்டு ரசித்தப் பாடல்.இதமான இசை.ஹரீஷ் ராகவேந்திரா அருமையாக பாடி உள்ளார்.


படம்:,மயக்கம் என்ன பாடல்:என்னென்ன செய்தோம் இங்கு இசை:ஜி.வி.பிரகாஷ்.


ராகம்:கல்யாணி?

என்னென்ன செய்தோம்

வாகை சூட வா
இதில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.இசை எம்.ஜிப்ரான்.

”போறானே போறானே பாட்டை நேகா பாசின் பாடி உள்ளார்.

அடுத்து “சார காத்து” பாட்டு by சின்மயி

எனக்கும் பிடித்திருக்கிறது.வித்தியாசமான கிராம மெலடி.இரண்டிலும் ஒரு மாதிரி “ஸ்டைலான மேற்கத்திய ” வாசனை வருகிறது.தவிர்த்திருக்கலாமோ?
நம்மூர் கிராமம் காணாமல் போகிறது.

Period film என்பதால் மெட்டைப் பழசாக்கப்போக அதில் மேற்கத்திய சாயல் வந்துவிட்டதோ? வாழ்த்துக்கள் எம்.ஜிப்ரான்.

”சார காத்து”  இந்திப்பாட்டு “inspiration"னா? சுட்டதா?

சார காத்து


படம்: ஆராதனா பாட்டு: Gun Guna Rahe Hai Bhanvare. சிறு வயதில் மிகவும் பாதித்த பாடல்.

கவுண்ட் 0.28 -0.54 முதல் கவனமாக கேட்கவேண்டும்.

ஆராதனா

__________________________________________________________

6.10.11 அன்று பாலிமர் டிவியில் “மைதானம்” படம் பார்த்தேன். நண்பனின் துரோகம் பற்றியது. இயக்கியவர் சக்திவேல். அருமை.உயிர் துடிப்போடு காட்சிகள். நிறைய இரவு காட்சிகள் படத்தை ஆழமாக்குகிறது.

கதாநாயகி நடிப்பு அருமை.”மைதானம்” என்ற தலைப்பு ஏன்?

குறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரொம்ப நன்றாக இருந்தது.இசை சபேஷ் முரளி.இவரிடம் நேட்டிவிட்டி இருக்கிறது.ஆனால் ராஜாவின் தாக்கம்.

இதில் ஒரு பாடல் சின்மயி பாடிய ”கனவா நெசமா” பாடல் என் மனதை கவர்ந்தது.குறிப்பாக அதை உச்சரிக்கும்போது.ஷரேயா கோஷால்/சாதனா சர்க்கம் போல் மழுப்பிப்(அழுத்தம் திருத்தம் இல்லாமை) பாடாமல்அமர்க்களமாக பாடி உள்ளார். காரணம் தாய்மொழி தமிழ்.

கனவா நெசமா10 comments:

 1. எனக்கு ”சாரக்காத்து” பாட்டு கேட்கும் போது “தில் தடப் தடப் கே கெஹ் ரஹாஹே” என்ற மதுமதி படத்தின் பாடல் ஞாபகம் வந்தது.

  ReplyDelete
 2. நீங்கள் சொன்ன பிறகு கேட்டேன்.கொஞ்சம் சாயல் வருகிறது. நன்றி.

  ReplyDelete
 3. சாயல் இருக்கிறதோ இல்லையோ இங்கே குறிப்பிட பட்ட அனைத்து பாடலும் எனக்கு மிக பிடித்தவை...:)

  அதிலும் ஆராதனா பற்றி சொல்ல வார்த்தையில்லை,பல முறை கேட்டு ரசித்த பாடல். உங்க தயவில் இப்போதும் கேட்டேன். :) ரசித்தேன்

  நன்றிகள் + வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மைதானம் அருமையாக இருந்தது..

  நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 5. மைதானம் படம் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. பார்க்கணும்...
  வாகை சூடவா பாடல்கள் பிடிக்கும்...
  மயக்கம் என்ன இப்போதுதான் கேக்கிறேன்...!
  ஸ்ரீ ராமராஜ்யம் பார்த்துவிட்டீர்களா சார்?

  ReplyDelete
 6. மயக்கம் என்ன பாடல், ‘யுவன் -செல்வா காம்போவின், ‘கனாக் காணும் காலங்கள்’ பாடலை எனக்கு நினைவூட்டுகிறது...!

  ReplyDelete
 7. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 8. நன்றி முத்துலெட்சுமி

  நன்றி கெளசல்யா

  ReplyDelete
 9. மைதானம் பாருங்க தமிழ்ப்பறவை.

  ராமராஜ்ஜியம் பார்க்கவில்லை.தெலுங்குதான்.நோ தமிழ் டப்பிங்.

  மயக்கம் என்ன மற்ற பாடல்கள் ரசிக்க முடியவில்லை.

  ReplyDelete
 10. நன்றி துளசி கோபால்

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!