Tuesday, August 16, 2011

குலேபகாவலியும் இளையராஜாவின் “சில்”லென்ற பாட்டும்

படம்: "குலேபகாவலி”(1955)  இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி.இதில் வரும் ஒரு பாட்டு “மயக்கும் மாலைப் பொழுதே”.இனிமையான பாட்டு.பாடியவர்கள் ஏ.எம்.ராஜா-ஜிக்கி. பாகேஸ்வரி ராகம். ஆனால் இந்தப் பாடலுக்கு  மட்டும் இவர்கள் இசை இல்லையாம்.


http://www.inbaminge.com/t/k/Kulebagavali/

இந்தப் பாடல் எம்ஜியார்-சிவாஜி சேர்ந்து நடித்த “கூண்டுக்கிளி” படத்திற்காக கே.வி.மகாதேவனால் போடப்பட்டதாம். வி.ராமுவின் வேண்டுகோளிற்க்காக  இதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டராம்.

இதைச்சொன்னவர் விஸ்வநாதன். சொன்னது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது.

இதெல்லாம் முன்னாடியே சொல்லுங்கப்பா. இவ்வளவு காலம்(நான் கேட்ட 25 வருஷமா)   புகழ் அனாவசியமா  விஸ்வநாதன் - ராமூர்த்திக்குப்போய் இன்னிக்குத்தான் கே.வி.மகாதேவ மாமாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணினேன்.

____________________________________________

”பனிமழை விழும்... பருவ குளிர் எழும்...”  பாட்டை முதன் முதலில்   கேட்கும் போது ஒரு வித்தியாசமான ”குளிர்ச்சி” யை உணர்ந்தேன்.மலை வாசஸ்தலத்தில் இருக்கும் உணர்வு.இசை இளையராஜா.

இந்தப் பாட்டை முதன் முதலில் சிலோன் ரேடியோவில்தான் கேட்டேன். 

”எனக்காக காத்திரு”(பாடலின் படம்) படத்தை 1981 வருடத்தின் அக்டோபர் மாத இறுதியில் பார்த்ததாக ஞாபகம்.பல்லாவரம் லட்சுமி அல்லது ஜனதா?

எனக்காக காத்திரு-1981-”பனிமழை விழும் பருவ குளிர்”


பாட்டின் ஆரம்ப இசையே  பனி படர்ந்த மலை உச்சி புத்த மடாலயம் பின்னணி உணர்வு தருகிறது.பாடலில் வரும் இசைக்கருவிகளின் ஒலிகளும் மலை வாசஸ்தலத்திற்குரியவைதான். காற்றுக் கருவிகள் அதிகம்.தந்திக் கருவிகள் குறைவு.

இசைக்கபடும் தாளமும் மலைவாழ் மக்களின் தோல் கருவி ஒலியை உணர முடிகிறது.வித்தியாசமான மெட்டு.

இதமான இசை.சில இடங்களில் அமானுஷ்ய இசை. 1.52- 2.11  மற்றும் 3.15-3.17. 

அடுத்து எஸ்.பி.ஷைலஜாவின் ”சில்லென்ற காற்றாட... சேர்ந்து மனம் ஆட” சில்லிடும் குரல்.இவருக்கு  எப்போதுமே தூரத்து அசிரீரீ குரல்.பிரமாதம்.

பாடல் காட்சிகள் தோன்றும் இடமும் மலை வாசஸ்தலம்தான்....நேபாளம்?

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாட்டு “தாகம் எடுக்கிற நேரம்”.இதுவும் மலைபிரதேச உணர்ச்சிகள் கொண்ட இசையமைப்பு.முக்கியமாக பாட்டின் தாளம்.

Enakkaga Kaathiru - Dhaagam EDukkira Neram - Panimazhai Vizhum

16 comments:

 1. ரவி சார்,
  நீங்கள் நான் நினைத்தது எல்லாம் எழுதி விட்டீர்கள் . இதில் வரும் புல்லாங்குழல் தொடங்கி ஷெனாய் வரை செல்லும் இசை அருமை.
  வாழ்த்துக்களுடன்
  தியாகராஜன்

  ReplyDelete
 2. இளையராஜாவின் இசையில் எனக்கு பிடித்த முதல் பத்து சிறந்த பாடல்களில் ஒன்று இது. படத்தின் மற்ற பாடல்களான 'ஓ ..நெஞ்சமே, ஓ..மாயா., தாகம் எடுக்கிற நேரம் ' ஆகிய பாடல்கள் பற்றியும் எழுதுங்கள். மிகவும் சிறிய பத்திகளாக இல்லாமல் இன்னும் விரிவாக எழுதினால் படிக்க இன்னும் இதமாக இருக்கும்.

  ReplyDelete
 3. இளையராஜாவின் இந்தப்பாடல் ”பனிமழை விழும்... பருவ குளிர் எழும்...” பற்றிய அறிமுகம் முற்றிலும் எனக்கு புதியது....

  இசைப்பிரியர்களுக்கான அரிய தகவல்கள்...

  ReplyDelete
 4. chandramohan said...

  // படத்தின் மற்ற பாடல்களான 'ஓ ..நெஞ்சமே, ஓ..மாயா., தாகம் எடுக்கிற நேரம் ' ஆகிய பாடல்கள் பற்றியும் எழுதுங்கள். //

  ”தாகம் எடுக்கிற நேரம்” ராஜாவின் பிரமிக்க வைக்கும் இசை.முடிந்தால் எழுதுகிறேன்.

  //மிகவும் சிறிய பத்திகளாக இல்லாமல் இன்னும் விரிவாக எழுதினால் படிக்க இன்னும் இதமாக இருக்கும்//

  பத்தி பிரித்தால் படிக்க லகுவாக இருக்கும் என்ற எண்ணம்தான் காரணம்.எல்லாம் கவர் பண்ணி விட்டதாக எண்ணுகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 5. பாட்டு ப்ளே ஆக மாட்டேங்குது சார்....!
  தாகம் எடுக்கிற நேரம் எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு....!

  ReplyDelete
 6. பிளே ஆகுது.இது சூப்பர் பிளேயர்.உங்க சைட் செக் பண்ணுங்க.

  ReplyDelete
 7. தமிழ்ப்பறவை:

  பிளேயரில் ஆங்கிலத்தில் இருக்கும் sound cloud அல்லது info கிளிக் செய்து சைட்டுக்குச் சென்று கேட்கலாம்.

  ReplyDelete
 8. //இதெல்லாம் முன்னாடியே சொல்லுங்கப்பா.இவ்வளவு காலம் நான்கேட்ட 25 வருஷமா புகழ் அனாவசியமா விஸ்வநாதன்-ராமமூர்த்திக்குப்போய் இன்னிக்குத்தான் கே.வி.மகாதேவ மாமாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணினேன்// இந்த விஷயத்தை விஸ்வநாதன் ஏற்கெனவே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதில்லாமல் பலமுறை பல பத்திரிகைகளில் நிறையப்பேர் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள். 25 வருடங்களாக வேறு பக்கங்களிலும் கவனம் செலுத்தி பத்திரிகைகளும் படித்திருந்தால் இந்தக்குழப்பம் வந்திருக்காது. இவ்வளவு நாட்களும் தெரியாமல் இருந்ததும் இப்போதுதான் முதல்முறையாகத் தெரிந்துகொண்டதும் குற்றமோ தவறோ அல்ல; ஆனால் ஒரு எள்ளல் தொனி தொனிக்கிறதே அதற்காகத்தான் சொல்லவந்தேன்.இது ரொம்ப ரொம்ப பழைய தகவல்தான்.

  ReplyDelete
 9. Amudhavan said...

  அமுதவன் அய்யா நானும் இந்த செய்தியை படித்ததில்லை.

  ReplyDelete
 10. நன்றி நெல்லை ராம்

  நன்றி மனசாலி

  ReplyDelete
 11. அமுதவன்: எள்ளல் தொனி அல்ல.நகைச்சுவை தொனியில்தான் சொன்னேன்.இசைப்பேட்டிகளை விடாமல் பார்பவன்தான்.இந்த செய்தி விட்டுபோய்விட்டது.

  நன்றி.

  ReplyDelete
 12. இப்பக் கேட்குது சார்...:)

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!