Wednesday, April 2, 2014

ஐ மெட் இளையராஜா அண்ட் வீ ஹேட எ டாக்?


மேஸ்ட்ரோவைப் பார்ப்பதற்கு முன் சற்று பின்னோக்கி முப்பத்திமூன்று வருடம்.......

கோடையில் மழை வரும் ......எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ...

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ

சராசரி இசை ரசிகனாக அப்போதைய இசையமைப்பாளர்களான எம்எஸ்வி கே.வி.மகாதேவன்,வி.குமார்,சங்கர்கணேஷ்,கோவர்தன்,விஜயபாஸ்கர்,ஷியாம் ஜி.கே.வெங்கடேஷ் மற்றும் பலர் இசைகளை மேலோட்டமாக கேட்டுக்கொண்டிருந்தவன்.பிறகு வந்த இளையராஜாவையும் மேலோட்டமாக கேட்க ஆரம்பித்து பிறகு உள்நோக்க ஆரம்பிக்க அவரின் பாடல்களின் இனிமையும் இடையிசையும் ஆச்சரியமும்  பிரமிப்பும் ஏற்படுத்தியது.

கங்கையில் என் மனம் பங்கு வைக்க

முக்கியமாக பழைய நெடிபோய் ஒரு லேட்டஸ்ட் ஸ்டைல் இருந்தது.முக்கியமான பாட்டுக்கள் ”பனிவிழும் மலர்வனம்”."எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”.வழக்கமான கேட்ட பழகிப்புளித்துப்போன இசைக்கருவிகளின் நாதங்கள் எல்லாம் புதுசாக “உருவாக்கப்பட்டிருந்தது”.

இசை அடுத்தக்கட்டத்திற்கு  நகர ஆரம்பிக்கிறது என்று தெரியாமலேயே பல வருடம கேட்டுக்கொண்டிருந்தேன்.(இவர் ஆர்.டி.பர்மன் மற்றும் சலீல் செளத்ரியின் தாக்கத்தில் இருக்கிறார் என்று சொல்வார்கள் எதிர்பார்ளர்கள்)

ஆனால் இரண்டு பேரையும் தாண்டி இருக்கிறார் என்று அடுத்தக் கட்ட புரிதலில் தெரிந்தது

எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை...

ரொம்ப முக்கியமாக  பாடல்களில்  மையமாக இருக்கும் ஆத்மா படுத்தி எடுத்தது.அடுத்து விதவிதமான  சம்பிரதாயத்தை உடைத்த  ஹம்மிங்குகள் (காற்றினிலே வரும் கீதம்) என்னை ரொம்பவும் வசீகரித்தது.இவை  மேல் இனம் புரியாத நெருக்கம் ஏற்பட்டு கேட்பது போய் சில பாடல்களோடு வாழத்தொடங்கினேன்.

“காற்றில் எந்தன் கீதம்” (ஜானி) இடையிசைகள் மெலடி மிகவும் போட்டுத் தாக்கியது.இப்படியெல்லாம் ஆத்மாவை குழைத்து இசைக்கமுடியுமா என்று இன்றும் எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

இப்படியாக தீவிர ரசிகனானேன்.இவை எல்லாம் அந்தக் கால சோனி,பயனிர் கேசட்டில்  டூ இன் ஒன் ஸ்டிரியோவில் கேட்கப்பட்ட பாடல்கள்.

நீங்காத நெஞ்சின் அலை ஓய்ந்தால் போதும்

தெரு நண்பர்கள் சேட்(அனந்தகிருஷ்ணன்),சுந்தரராஜன்,அன்வர்கான்,கிருஷ்ணன் கூடும்போதெல்லாம் பாடல்களை ”மயக்கமான” நிலையில் கேட்டு முழுகித் திளைத்தோம்.பிறகு அதே அலைவரிசையில் வந்த அலுவலக நண்பர்கள் பாலாஜி,ஸ்ரீதர்,முருகானந்தம்,கணேசன் ”ரூம் போட்டு” மயக்கமாகி பாடல்களை விடிய விடிய பிரித்து மேய்ந்தோம்.

(1983)ஸ்ரீதர்(கையில் பை) பாலாஜி(நடுவில்) நான் பாலாஜிக்கு இடது

இசையமைப்பில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது.இது மாதிரி உயர்தர இசை கேட்பதில் எங்களுக்கு ஒர் பெருமிதம் இருந்தது.இசை நாதங்கள் சேரும்போது அசட்டுத்தனம் ஒட்டு இல்லாமல் வழுக்கிக்கொண்டுபோவது ஒரு பெரிய பிரமிப்பு. ஹிந்திப்பாடல்களை ஓரம் கட்டினோம்.

அடுத்து இதுவரை கவனிக்கப்படாத படத்தின் பின்னணி இசை இவர் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தது.இதற்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.சிவப்பு ரோஜாக்கள் ஒரு உதாரணம்.

Nothing..... nothing....

ஓவ்வொரு பாடலும் ஒவ்வொரு பரவசநிலையைக்கொடுத்தது.எல்லாம் பாடல்களும்  Farm fresh.சந்தித்தவுடன்  “மொட்ட  லேட்டஸ்ட் பாட்ட கேட்டய” என்றுதான் ஆரம்பிப்போம்.”Mind blowing" " Absolutely Divine" "Absolutely  bliss" "Stunning" "What a soulful song" "Out of the world" என்ற சொற்கள் அடிக்கடி உபயோகப்படுத்தியது இவரின் பாடல்களுத்தான் அதிகம்.

முன்னோடிகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரிந்தது.இடையிசைகள் மிகவும் மென்மைப்படுத்தப்பட்டிருந்தது. இனிமைப்படுத்தப்பட்டிருந்தது.பல அடுக்குகள் இருந்தது.அடுக்குகள் பலவித காம்பினேஷ்ன்களில் தொடுக்கப்பட்டிருந்தது.நாதங்களின் உணர்ச்சிகள் மொழிகள் வேறுபட்டது. மனதிற்கு  நெருக்கமானது.புதுவித முயற்சிகள் தெரிந்தது.

 
நாங்கள் கேசட்டில் போட்டு தேய்த்து தேய்த்துக் கதறிய பாடல்கள்:

1.ஒரு குங்கும செங்கமலம் 2.சிறிய பறவை 3.சந்தக் கவிகள் பாடிடும் 4.காற்றில் எந்தன் கீதம் 5.தாமரைக்கொடி 6.பூவே செம்பூவே 7.பனிவிழும் மலர் வனம் 8.பள்ளியறைக்குள் 9.எங்கெங்கோ செல்லும் 10.அந்தரங்கம் யாவுமே11.புத்தம்புது காலை 12.அந்திமழைப்பொழிகிறது13.தேன் பூவே பூ 14.தெய்வீக ராகம்(heavenly humming)15.என்றென்றும் ஆனந்தமே

பாடல்களை கவனித்தால் ஒன்று புரியும்.கிராமிய மெட்டு பாட்டுக்கள் குறைவு.காரணம் நகரம் சார்ந்து வளர்ந்த இளைஞர்கள் நாங்கள்.அடுத்த ரசிப்பு மேற்பாடல்களில் சிக்கலான இசைக்கோர்ப்பு. எல்லாம் புத்தம்புதுசு.

எல்லாம் 1979-1988 இடைப்பட்ட காலத்தில்

பாடல்களில் லயித்துப்போய்  எப்படி இவரால இப்படி மாஜிக்காக  பாடல்களை  கம்போஸ் செய்ய முடிகிறது என்று மண்டை காய்ந்து இவரை மறைமுகமாக  (அப்போது கெடிபிடி ஜாஸ்தி)சந்திக்க முடிவெடுத்து (1988) பிரசாத் ஸ்டியோவிற்குப் போனோம்.

கதவருகில் ஒளிந்தவாறு இடுக்கு வழியாக பார்த்தோம். திருப்பதி பெருமாள்  தரிசனம் மாதிரி சில வினாடிகளே கிடைத்து.அன்றைய பாடல் கம்போசிங் “ மலையோரம் மயிலே”ஒருவர் வாழும் ஆலயம்.

அதற்கு பிறகு நண்பர்கள் பிரிந்தோம்.சில பேர் தொடர்பில் இருந்தோம். பலபேர் தொடர்பில் இல்லை.பிரிந்தாலும் அவரவர்கள் ராஜாவின் பாடல்களோடு தொடர்பில் இருந்தார்கள்.ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிமனதில் இருந்தாலும் முயற்சி எதுவும் எடுக்காமல் “அவரைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்” என்ற எண்ணமும் அடுத்து அவர் ரசிகர்களை அவ்வளவாக சந்திப்பதில்லை என்றும் கேள்வி.

கடைசி ஆறு வருட இடைவெளியில் (2008-2014) இணையதளத்தில் இளையராஜாவின் இசைப் பற்றிய அறிவு வேறு ஒரு தளத்திற்கு விரிந்தது.இணையதள ரசிகர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதும் போட்டோ எடுத்துக்கொள்வதும் நானும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நிறைய சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியதும் தவிர்க்கமுடியாத காரணங்களால்(அம்மாவின் உடல்நிலை) போக முடியவில்லை.

என் அபார்மெண்டில் குடியிருக்கும் சினிமா மற்றும் கமல் பிஆர் ஓ  நிகில் முருகனிடம் என் ஆர்வத்தைச் சொல்ல  “ சொல்லுங்க ... நான் அழைச்சுட்டுப்போறேன் ...”  என்று ஒரு நாள் சொன்னார்.அதற்குப்பிறகு பாலோ அப் செய்யவில்லை.

பிளாஷ் பேக் ஓவர்........

இருபத்தி மூன்று வருடம் கழித்து என்னைச் சந்தித்தார் பழைய அலுவலக நண்பர் முருகானந்தம்.அவர் கோயம்புத்தூர்.மீண்டும் ராஜா பாடல்களைப் பற்றி அலசல்.”ரெடியா இரு... அவரைப்போய் பார்க்கலாம்” மண்டைகாயும் வெய்யிலில் என் வீட்டிற்கு வந்து  ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘எப்படி அப்பாயிமெண்ட் இல்லாமல்....” இழுத்தேன்.’கிளம்புப்பா” என்றார்

முருகானந்தம் (குறும்பட  அப்பா கேரக்டர் நடிகர்?)

பிரசாத் ஸ்டியோ:


வடபழனி எப்படி இருந்தது எப்படியோ மாறிவிட்டது.பச்சைப்போய் கல்லும் சிமெண்டும் பெயிண்டும் கான்கிரீட் காடுகள்.ஸ்டியோ இருபத்தி எட்டு வருடத்திற்கு முன் பார்த்தது.மாற்றங்கள் தெரிந்தது.வாசலில் கார்களும் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் மர நிழலில்.

ரெக்கார்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் ராஜா இருப்பார் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது.வாசல் ரிசப்ஷனில் கார்த்திக்ராஜா புன்னகையுடன் நண்பரை வரவேற்றார்.”இருக்கிறார்” என்றார்.எனக்கு உடம்பில் ஒரு குறுகுறுப்பு.பக்கத்தில் இருந்த ஆபிசில் நண்பர் தகவலை தெரிவித்துவிட்டு உள்ளே போனோம்.


  
ரிக்கார்டிங் ஹால்

ராஜாவின் இசைக்குழு வல்லுனர்கள் தம்தம் வாத்தியங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.இதை பல தடவைப் போட்டோவில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.இன்று பரபரப்பு இல்லை.லன்ச் பிரேக் மாதிரி மெலிதான அலை அடித்துக்கொண்டிருக்கும் இசை ஆற்றைக் கடப்பது மாதிரி உள்ளுணர்வு.

அதையும் கடந்து அவரின் தனி அறைக்குச்செல்லும் வழியில்.....


நான்: “ போட்டோ எடுக்கனும்... ரெடியா செல்ல வச்சுக்கோ”

நண்பர்: “ இன்னொரு நாள் எடுக்கலாம்...முதல்ல அவர பாரு”


”இன்னொரு நாளா” எனக்கு உள்ளுக்குள் “பக்” என்றது.சற்று எரிச்சல் ஏற்பட்டது.எனக்கு எப்போதுமே “அன்றே செய்... நன்றே செய்” பாலிசி.அதுவும் மேஸ்ட்ரோவை பார்ப்பது என்பது.நாளை என்பது நமக்கு தெரியாத ஒன்று.
இன்றேதான் எனது மனதில் முடிவு செய்தேன்.நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை.


“வாங்க ....செளக்கியமா....”  நண்பரைப் புன்னகையுடன் வரவேற்றார்.

பரவசத்தில் புன்னகைத்துவிட்டு அவர் காலில் விழுந்தேன்.எழுந்தப்போது மார்பில் கையை வைத்தப்படி ஆசிர்வாத போசில் இருந்தார்.

பேசுவதற்கு ஒன்றும் இல்ல்லை.எழுந்து...” சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” மேஸ்ட்ரோவிடம் கேட்டேன். நண்பர் தயங்கியபடி இருக்க மேஸ்ட்ரோ “ எடுங்க முருகானந்தம்” என்று எனக்குஆதரவாக சொல்ல புல்லரித்தேன். பக்கத்தில் நிற்க நண்பர் போட்டோ எடுத்தார்.

 முடிந்தவுடன் கண்களாலேயே "டைம்  முடிந்தது" என்று சொல்லி மாரில் கைவைத்தப்படி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைப்பெற்றோம்.

பரவசத்துடன் ரூமை விட்டு வெளிவந்தோம்


ஜன்மாந்திர  சாபம் தீர்ந்தது.ரொம்ப லேட்டாக தீர்ந்தது.புராணக்கதைகளில் சாபம் தீர்ந்தவுடன் ஒரு வசனம் வரும்.அதுமாதிரி  “ பக்தா..... இன்றுமுதல் உன்னுடைய  ராஜா ரசிகன் என்ற வட்டம் முழுமைப் பெறுகிறது.”




 டிஸ்கி:
”போட்டோவா ... இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளலாம் எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தை

Thursday, March 20, 2014

ஆத்மா-மலேசிய விமானம்-பேய்-பீதி-தேர்தல் ஹாஹா

 மாயாமாய் போன விமானத்தைப் பற்றி வரும் ஹேஷ்யங்கள்/கதைகள்/அலசல்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கிறது.சில யூகங்கள் (ஹேஷ்யங்கள்)
விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டு ஒரு அளவுக்கு லாஜிக்கலாக இருக்கிறது. சிலது கன்னாபின்னா கற்பனையில் பீதியைக் கிளப்புகிறது.

அதில் ஒன்று:

இதுக்கெல்லாம் கன்னாபின்னான்னு ஹோம் வொர்க் செய்யனுமே?

விமானம் கடத்தப்பட்டு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ரகசியமான இடத்திற்க்கு கொண்டுச்செல்லப்படுகிறது.போகும் வழியிலேயே  ஆக்ஸிஜன் குறைப்பாட்டை இயக்கி பயணிகளை மூசசை அடக்கி உயிரிழக்கச் செய்வது.பிறகு விமானத்தை பிளான் செய்தபடி ரகசிய இடத்திற்கு கொண்டுசென்று  அதில் பண்டல் பண்டலாக வெடிக்குண்டுகளை ஏற்றி பிடிக்காத நாட்டின் மீது மோதுவது.இந்தியா பக்கத்தில் இருக்கா?

 சடன் லெப்ட் டர்னிங்.... ஏன்???

இரண்டு:

தீவிரவாதிகள் தாங்கள் தீவிரவாதத்தை உலகத்திற்க்கே வெளிச்சம்போட்டுக் காட்டிதான் எப்போதுமே  நாச வேலைகளைச் செய்வார்கள்.ஆனால் இது சிதம்பர ரகசியமாய்அல்லது கமுக்கமாய் அல்லது அமைதியாய்  விமானத்தை கடலில் இறக்கிநொறுங்க செய்திருக்கிறார்கள்.“நடந்தது என்ன?” என்று ஆளாளுக்கு ஒரு யூகம் செய்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளவேண்டும்.

மாத்தியோசி இதிலுமா? கடவுளே எல்லோரும் நல்லாபடியா திரும்பி வரணும்.
 
நம்பிக்கை-பிரார்த்திப்போம்


இது மாதிரி 83 விமானங்கள் மாயமாய் மறைந்திருக்கிறதாம்.அதில்  சிலது மாயம்.சில விபத்தில் மாட்டிக்கொண்டது.


தகவல் தொடர்பின் உச்சத்தில் உலகம்  இருந்தாலும் இன்னும் கண்டுப்பிடிக்காதது  சவாலாகத்தான் இருக்கிறது.

”மாயமாய் மறைதல்” என்ற சொல்லுக்கு தமிழில் ”அறு” “தீரு” “இல்லாமல் போ” “கண்மறைவுறு” “இன்மையாகு” என்று பல அர்த்தங்கள்.”திடீர் மறைவு” என்ற சொல் என் நினைவுக்கு உடனே வந்தது.அன்றாட வாழ்வில் புழக்கமான சொல்.

__________________________________________________________

 தேர்தல்...உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....




இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்.கூட்டணி காம்பினேஷன்கள் அல்லது ஒட்டுக்கள் சுவராஸ்யமாக இருக்கிறது. திநகர் ரங்கனாதன் தெரு கூப்பாடுகள் பேரங்கள்.உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

தேர்தல் கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பதில் ”நீயா நானா” சண்டை.இவ்வளவு ஏன் கஷ்டபடவேண்டும்.ஒரு பெரிய விளையாட்டுத் திடலுக்கு எல்லா கட்சிகளும் வரவேண்டியது. வட்டமாக நின்று ”ஷாட் பூட் த்ரி” போட்டு முதலில் கூட்டணி அமைக்க வேண்டும் பிறகு கூட்டணிக்குள் சீட்டுக்குள் முடிவு செய்ய ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டு “சிங்கமா  பொட்டா” சொல்லி முடிவு செய்ய வேண்டும்.

Facts are stranger than fiction( உண்மை நடப்புகள் கட்டுக்கதைகளை விட புதிரானவை). அது இந்த தேர்தலில் ஒரு விசித்திரம்.சொந்த மகனே தன் கட்சிக்கு எதிராக பேசி ஓட்டுக்களைக் கலைப்பார் என்று  யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு பேய்  குறும்படம்: " Lights Out"

எனக்கென்னவோ வழக்கமான பாணியில்தான் எடுக்கப்பட்டமாதிரிதான் தெரிகிறது.பீதிக்காக பயன்படுத்தும் எல்லா உத்திகளும் இதில் உள்ளது. பயத்தில் செல்லோ டேப்  லாஜிக் வித்தியாசம்.செல்லோ டேப் எடுப்பது ஏன் தொடர்காட்சியில் வரவில்லை.

டிஸ்கி:This Video Is Not For The Weak Of Heart! Don't Watch This Alonehttp://www.sharedots.com/this-video-is-not-for-weak-of-heart-don-t-watch-this-alone-163.html


பாடலின் இனிமையை மீறும் ஆத்மா:
 
கருப்பு வெள்ளையிலும் ஆத்மா(சந்திரகலா-விஷ்ணுவர்த்தன்)

 கிழ்வரும் பாட்டில் மெட்டு-உணர்ச்சி-தாளம்-குரல்-பாடல் வரிகள்-கவித்துவம் நெருக்கமாக இனிமையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆத்மாவை தொடுகிறது.இப்படி எல்லாம் அமைவது அபூர்வம்.

ஆத்மா இல்லாத பாடல் சவம்.


0.30 - 0.40  & 0.55 - 1.05 & 1.54-1.57  இடையிசை ஐம்புலன்களை மீறி  ஆத்மாவோடு  உரையாடுகிறது..

.....மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு  மல்லிகைப்பூ
யார் வருவார்
யார் பறிப்பார்
யார் அறிவார்  இப்போது....

என்ற அழகான மெட்டுடன் கவித்துவமான  வரிகளுடன் ஜெயச்சந்திரனின் குரல் மிருதுவாகஆத்மாவோடு உரையாடுகிறது.

குளிர்ச்சியான மலைவாச ஸதலத்தில் டூயட் நடப்பதால் பாடல் மிருதுவான குளிருடன் நம்மை ஆக்கிரமிக்கிறது.





படம்: அலைகள் (1973) 
பாடியவர்:ஜெயச்சந்திரன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடல்:கண்ணதாசன்
இயக்கம்: ஸ்ரீதர்

Friday, January 31, 2014

இளையராஜா-கூடு விட்டு கூடு-ஆனந்தராகம்-சாராயே ஆலம்

சொந்த மாநிலத்திலேயே ஓர் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு இடம் பெயரும்போது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மாறவேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது நம்மிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.மாற வேண்டியது அவசியமாகிவிடும்.காரணம் அங்கு நிலவும் பண்பாடு, அரசியல், உணர்ச்சிகள், உணவு,உடை மற்றும் இன்னபிற.

மனிதனைப்போல சினிமா பாடலும் புலம் பெயரும்போது தன் ஒப்பனையை உணர்ச்சிகளை மாற்றிக்கொள்கிறது.

இளையராஜா தன் பாடல் ஒன்றை இப்படி கதை, சூழ்நிலை, புலம், உணர்ச்சிகள் மாறினாலும் பாடலின் மைய இழையை ஆதார கருவை (மெட்டை) விடாமல் கூடுவிட்டு கூடு இசைத்திருக்கிறார்.

படம்: பன்னீர் புஷ்பங்கள்(1981) பாடல்: ஆனந்தராகம் கேட்கும்.பாடல்

இந்தியில் “சாராயே ஆலம்” படம்: ஷிவா(2006).25 வருடங்கள் ஆகியும் பாடலின் மெருகு கலையாமல் இருக்க அதையே ஷிவா படத்திலும் உபயோகப்படுத்த சொல்கிறார் இயக்குனர்.

கிழ் ஆடியோவில் இரண்டுபாடல்களின் குரலிசைகள் பல்லவி,சரணம் என்று மாறிமாறி கோர்ப்பட்டுள்ளது.

ஆனந்தராகம்    கேட்கும்  VS  சாராயே.... ஆலம்

கன்றுக்குட்டி வெகுளி காதல்(infatuation love)  VS  இளம்பருவ விரகதாபம்(Sensuous love)

” ஆனந்தராகம் கேட்கும்” (பன்னீர் புஷ்பங்கள்-1981)பாட்டு ”சாராயே ஆலம்” என்று ஹிந்திப் படமான  “ஷிவா”(2006).25 வருடங்களுக்குப் பிறகு வேறுவிதமாக இசைக்கப்பட்டது( ரீமிக்ஸ்?).


”ஆனந்தராகம்” வெகுளித்தனமான பள்ளிப்பருவ காதல்.மனதில் எழும் ஆனந்த உணர்ச்சிகள்...சந்தோஷதருணங்கள் - சோலோ-உமாரமணன்


”சாராயே” இளம்பருவ விரகதாபம்-ஏக்கம்-காதல். -டூயட்-ஷ்ரேயா-ரூப் குமார் ரத்தோட்.

உணர்ச்சிகள், நிகழும் இடம்,புலம்,வரிகள்,மையம் இவைகளை மனதில்கொண்டு ஆனந்தராகத்தை மொழிபெயர்த்துள்ளார்.கருவிகளின் மொழிகள் முக்கியமானவை.

 குரல்கள் மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக




சிம்மேந்திரம மத்தியமம் ராகத்தை இரண்டிலும் பாடலின் மைய்ய இழையாக அமைத்துள்ளார்.

இடையிசை  மட்டும் ஆ.ராகம்-சாராயே ஆலம் மாறிமாறி  வரிசையாக


Monday, January 27, 2014

நாலுமணி டிபனும்-புத்தகமும்-கவிதையும்

ரவா உப்புமா என்றால் அது மாலை நாலுமணி டிபன் என்பதாக நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.காரணம் 3.20க்கு பள்ளி விட்டதும்  பல தடவை சுடசுட சாப்பிட்ட சுவை நாக்கிலிருந்து மூளைக்குப்போய் உறைந்ததுதான்.அந்த நாலுமணி வெயில்,தெரு சத்தங்கள்,வெங்காய வாசனை,கிண்டும் ஓசை,மணம் எப்போதாவது வந்துபோகிறது நாலுமணிக்கு.

அன்றைய Two minutes Noodles!

இப்போது மாதிரி வீட்டு உப்புமாவில் பணக்காரத்தனம் இருக்காது.பட்டாணி, மு.பருப்பு,குடமிளகாய்,கொத்தமல்லி,நெய் இல்லாத லோயர் மிடில்கிளாஸ் லுக்குடன்தான் இருக்கும்.

இப்போது அதே பணக்காரத்தனத்துடன் உப்புமாவை 5.15 டிபனாக  செய்துபோட ஆசை இருந்தாலும் ஏதோ உப்புமா கம்பெனியைப் பார்ப்பதுபோல் என்னைப்பார்க்கிறான் என் மகன்.இதுதான் வாழ்க்கை.

கண்ணுக்கெதிரே சமையலின்  ஒரு சுவையை மகன் இழந்துக்கொண்டிருக்கிறப்பதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.



அப்போதைய  இளையதலைமுறையின் 50% விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது 20% ஆக குறைந்துவிட்டது.காரணம் காற்றடித்த உப்பிய பிளாஸ்டி பைகளில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள். உப்புமாவை உப்புமா கம்பெனிபோல்  ஒன்றும் இல்லாம ஆக்கிவிட்டது.

2011ல் இந்திய வம்சாவளி சமையல்காரர் ஒருவர் அமெரிக்காவில்  உப்புமா டிபன் செய்து ஒரு லட்சம் டாலர் பரிசுபெற்றார்.”தங்கள் வாழ்வில் பாதித்த அல்லது எப்போதும் நினைவில் ஊசலாடும் ஒரு டிபன்” என்ற பிரிவில் இவர் செய்த டிபன் உப்புமா. என் நாலுமணி டிபன்.....!

இதன் கசின் ஆன கிச்சடியும் சுவையானது.


37வது சென்னை புத்தகக் காட்சி

நான் கூட தவறுதலாக புத்தகக்கண்காட்சி என்றே எழுதுவேன் ஒவ்வொரு தடவையும்.கண் கிடையாது வெறும் காட்சிதான்.காட்சி என்றாலே கண்ணால் காண்பதுதானே.


சிறுகதைகள்,நாவல்கள், கவிதைகள் தவிர்த்து விட்டேன்.அலுப்புதான்.விமர்சனங்கள்,பக்தி,தத்துவம்,சரித்திரம்,சுயசரிதை சம்பந்தமான புத்தகங்கள் வாங்கினேன்.ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆனந்த்ராகவ் எழுதியது.எப்போதுமே தவிர்க்காமல் வாங்குவது வேடிக்கைக் கதைகள்,முட்டாள் கதைகள்,கஞ்சன் கதைகள், புதிர்கதைகள்.
இவையெல்லாம கடினப் புத்தகங்களுக்கு ரிலாக்ஸ்சேஷன்.அடுத்து சாகித்ய அகாடமி வெளியிடும் சுயசரிதை நூல்கள்.

எப்போதுமே ஒரே மூச்சில் படிப்பதில்லை.எல்லாவற்றையும் பிட்டுபிட்டாக படிப்பதால் சுவராஸ்யமாக இருக்கிறது.


புத்தகம் வாங்கிய மகிழ்ச்சியை அடுத்து  இன்னொரு மகிழ்ச்சி பதினாலு வருடம் தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர் ஸ்ரீதரை சந்தித்தது.நாங்கள் முக்கியமாக  இளையராஜா இசையில் ஒரே அலைவரிசையில் இருப்போம்.குசலங்கள் விசாரித்த பிறகு முதல் டாபிக்கே ராஜாதான்.”காற்றில் எந்தன் கீதம்”.இருவரும் ராஜாவின் பாடல்களோடு வாழ்பவர்கள்.

கவிதை

நான் பேய் அல்ல
பள்ளி மாணவிதான்
பாடங்களை மனப்பாடம் செய்ய 
தினமும் வீட்டு தோட்டத்தில் இருக்கும்
உஞ்சலில் நடுஇரவில் ஆடுவேன்

தூரத்தில்
இரண்டு கண்கள் தினமும் 
நான் ஆடுவதைப் பார்க்கும்
உடனே நிறுத்திவிடுவேன்

என் அருகில்அது வருவதில்லை


என் நிழலும் தயங்கி
பாதி தூரத்தில்  பேயோயென
பயந்தபடி நிற்கிறது


ஒரு நாள் தம் பிடித்து
மிக வேகமாக  உந்தி ஆடுவேன்
என் நிழல் அதைத் தொடும்
நான் பேய்யல்ல
பள்ளி மாணவிதான்
அதற்குத் தெரிந்துவிடும்