Saturday, May 16, 2015

கொம்ப வச்சுக்கிட்டு....எமோஷன்...மோஷன்... பிடிச்சிருக்கு அன்னக்கிளிஆண்டாள் கொண்டை


எங்க தலவிதி(கொம்பு) அவ்வளவுதான்


ஹல்லோ.... டிஸ்கவரி சானல் கொம்புள்ள அனிமல்ஸ்...!என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறீர்கள்.கொடூரமான கொம்ப வச்சுகிட்டு உங்க இனத்தோட சண்டை போட்றீங்க. மரத்துல சொறிஞ்சுகிறீங்க.குட்டி அனிமல்ஸ்ஸ பயமுறுத்திறீங்க. ஆனா ஒவ்வொரு வாட்டியும் உங்களை வேட்டை மிருகங்கள் ஹைஸ்பிடில் துரத்தும்போது சடார் என்று திரும்பி(cricket reverse sweep கணக்கா)கொம்பால கொத்துபரோட்டா போடுவீர்கள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் பொசுக்குன்னு மாட்டிட்டு கையும் காலையும் உதறுவீர்கள்.
கொஞ்சம் கொம்பையும் ஆட்டுவீர்கள். இப்ப ஆட்டி என்ன பிரயோஜனம்.


எல்லாம் பந்தாதான்.

பல கோடி வருட பரிணாம வளர்ச்சில இந்த ஐடியா ஜீன்ல வர சான்ஸ் இல்லையோ?Survival of the fittestக்கு எல்லா தகுதியும்(கொம்பு) இருக்கு. ஆனா.....ஏதோ ஒரு தடவை பல எறுமைகள் சேர்ந்து சிங்கத்த கொன்னத பார்த்தேன்.நீங்க எப்படி?

மோஷன்.... எமோஷன்..... கான்ஸிடிபேஷன் பின்னே கமோஷன்.....

இந்திப் படங்கள் நிறைய மாறி வருகிறது.தமிழ்ப் படங்கள்? ”சூதுகவ்வும்” ஹேங்ஓவரிலேயே இன்னும் இருக்கிறது.

PIKU நம்ம ஊர் கிரா அல்லது புதுமைப்பித்தன் டைப்பான சிறுகதை.”வெளிக்கு” சரியாக போகாத ஒரு “மூலசூடு”அப்பாவை வைத்துக்கொண்டு மகள் குப்பைக் கொட்டுவதுதான் கதை.இதை சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள் PIKU படத்தில்.

கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டால் யார் தன் (மலச்)சிக்கலை கவனிப்பார்கள் என்று She is not a virgin, sexually independent என்று மற்றவர்களிடம் சொல்லி அவள் கல்யாணத்தைப்பற்றி கண்டுக்கொள்வதே இல்லை.அவளும் அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

வழக்கமான ஷோபீஸ்ஸாக வரும் தீபிகா படுகோனுக்கு இது வரப்பிரசாதம்.முதலில் படத்தில் என்னைக் கவர்ந்தவர் இவர்தான். பின்னுகிறார்.அடுத்து இம்பிரஸ் செய்பவர் டிராவல்ஸ் உரிமையாளராக வரும் இர்பான்.இருவரும் அடிக்கடி மோதிக்கொள்வதும் பின்னர் புரிதலும் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அமிதாப் கொடுத்துவைத்தவர்.கிழடு தட்டினாலும் கிழட்டுத்தனத்திற்கு ஏற்றமாதிரி ரோல்கள் வந்து அமைகிறது. செட் ஆகி பின்னுகிறார்.முன்பு ”இளைஞன்” ஹீரோ.இப்போது “கிழட்டு” ஹீரோ.
படத்தில் நிறைய ஆங்கில உரையாடல் வருவதால் படத்தின் போக்கைப் புரிந்துக்கொள்ளலாம்.
இசை அனுபம் ராய் என்ற புதியவராம்.இந்த மாதிரி படத்திற்கென்றே stereotyped சிதார் வைத்திருக்கிறார்கள்.பின்னணியில்”சும்மா”  டொய்ங் டொய்ங்க்னு சிதாரை மீட்டினால் போதுமா? Soul இருக்க வேண்டாமா?.பாடல்கள் ரஹ்மான் சாயல்.

காட்ச் ”பிடி”ச்சிருக்கு

ஐபில் என்பது டிவி சீரியல் கணக்காக வணிக நோக்காக இருந்தாலும் சில சுவராஸ்யங்கள் இருக்கிறது. கடைசி ஓவர்களில் இதயதுடிப்பை எகிற வைக்கிறார்கள். ஒரு மாட்சில் சிஎஸ்கேயை “ஊத்தி மூடிட்டாங்க”  என்று பாதியிலேயே டிவி ஆஃப் பண்ணி படுத்து காலையில் எழுந்தால் சிஎஸ்கே வின் பண்ணிட்டாங்க.
சர்க்கஸ் கணக்காக பல்டி அடித்து வாயைப் பிளக்க வைக்கும் அற்புதமான காட்சுகள் பிடிக்கப்படுகின்றன.Stunned.... awesome.....!இன்னும் கூட பிரமிப்பு அடங்கவில்லை.நேற்று வாட்சன் அடித்த பந்தை சி எஸ்கே டீம் Dwayne Bravo காட்ச் பிடித்த காட்சி. வாட்சன் (ராஜஸ்தன் ராயல்ஸ்)ஆடிபோய்விட்டார்.நகைமுரண் என்னவென்றால் அதே மேட்சில் சாதாரண காட்ச் ஒன்றை சொதப்பி கைவிட்டார் Dwayne Bravo.

ஆண்டாள் கொண்டையுடன் அன்னக்கிளி ஹம்மிங்…..!

அன்னக்கிளி படத்திற்கு (ரிலீஸ் 14-05-1976) 39 வயது ஆகிவிட்டது.இந்தப் படத்தின் மாஸ் ஹிட்டிற்கு இன்னொரு முக்கிய காரணம் சுஜாதாவின் யதார்த்தமான பாத்திரப்படைப்பு.கொஞ்சம் உன்னிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.
”அன்னக்கிளி” படத்தின் முதல் காட்சியில் கிராமத்து பட்டிக்காட்டுப் பெண்ணான அன்னக்கிளி டெண்டு கொட்டகையில் “ஆண்டாள்” படம் பார்க்கிறாள்.காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டில் தன்னை மெய் மறக்கிறாள்.அதில் பத்மினி ஆண்டாளாக மணப்பெண் கோலத்தில் தோழியர்கள் படைசூழ தான் தினமும் பூஜிக்கும் நாராயணனை கைப்பிடிப்பதாக கனாக் கண்டதை மகிழ்ச்சிப் பொங்க பாடுகிறாள்.



”வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து .......………………………..
மைத்துனன் நம்பி மது சூதன் வந்தென்னை கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி நான்”
தன்னுடைய நீண்ட நாள் ஏக்கத்தயே கனவயே ஆண்டாளும் பிரதிபலிப்பதில் தாக்கம் உண்டாகி ரொம்ப உருகிபோகிறாள்.அவளும் ஒரு நாள் ஆண்டாள் மாதிரி தன்னுடைய காதல் கணவனை நினைத்து மெய்மறந்து கிராமத்து இயற்கை சூழ் நிலையில் எந்தவித லஜ்ஜையில்லாமல் சுதந்திர பறவையாக.....
காதலும் காமமும் ஏக்கமும் சோகமும் கலந்து வளைந்து நெளிந்துவரும் ஹம்மிங்கில் அழகாக ஆரம்பித்து…………..(பாட்டில் ஒரு வித சோகம் மைய்ய இழையாக ஓடுகிறது)
”உறங்காத……………………………..
.உறங்காத கண்களுக்கு ஓலைக்கொண்டு கையெழுதி
கலங்காம காத்திருப்பேன் கைப்பிடிக்க வருவாரோ?”
பாடுகிறாள்.தலையலங்காரம் கூட ஆண்டாள் ஸ்டைலில் இருக்கிறது.(கோயமுத்தூர் ஸ்டைல்?)

ஒரு கிராமத்துப் பெண்ணின் காதலை மிகைப்படுத்தாமல் இவ்வளவு இயல்பாக இதுவரை சொல்லவே இல்லை.இதுதான் ரசிகர்களை குறிப்பாக கிராமத்து ஜனங்களை பாதித்திருக்கிறது.அன்னக்கிளி சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.அப்போதைய வழக்கமான கிராமப் படங்களில் இருக்கும் மிகை உணர்ச்சிகள்,அபத்தக்காட்சிகள்,வசனங்கள்,பாடல்கள்,வில்லன்கள் 85% குறைவு.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியாக இருப்பதால் மனோரீதியாக தனக்கும் திருமணம் ஆகி காமம்*காதல் வயப்பட்டு சேர்ந்து இது மாதிரி வலி எடுத்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையின் அடைப்படையில் காதலில் கைப்பிடிக்க துடிப்பவளாக இருக்கலாம்..
சிவகுமார் –சுஜாதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதுவும் இருவரும் மனசுக்குள் இருக்கும் காதல் ரொம்ப அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் பாத்திரம் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக படைக்கப்பட்டிருக்கிறது.யாரிடமும் வில்லத்தனம் இல்லை

அன்னக்கிளி பாடல் பற்றி இளையராஜா பேசுகிறார்.

எல்லோருக்கும் “ அம்மாடா” பட் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் “அப்பாடா”