எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் “ஏ.ஏ.ராஜ்-காலம் கடந்து ஒரு அஞ்சலி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.ஏ.ஏ.ராஜ் என்ற தெலுங்குப்பட இசையமைப்பாளர் டி.ராஜேந்திருடன் இணைந்து இசையமைத்த திரைப்படம் “ஒரு தலை ராகம்”(1980).படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.அப்போதைய இளைஞர்கள் விழுந்துவிழுந்து பார்த்தார்கள். பாடல்களை அப்படியே கேட்டார்கள்.
நானும் விரும்பிக்கேட்டேன்.அப்போது படத்தை கடனே என்றுதான் பார்த்தேன்.பல சென்னை இளைஞர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.தஞ்சாவூர் தலையில் வைத்துக்கொண்டாடியதாக தகவல்.
இன்றைக்கும் மூன்று பாடல்களை உறுத்தல் இல்லாமல் கேட்கலாம்.
(ஜெயமோகனுக்கு விளக்கம் பின்னால் வருகிறது)
அதில் சந்திரசேகர் பாத்திரம்(டாஸ்மாக்) இளைஞர்களால் விரும்பப்பட்டது.
எப்போதும் புடவை தலைப்பைப் போர்த்திக்கொண்டு ஹோம்லியாக பெண்களை ரோடில் பார்த்துவிட்டால் உடனே ரூம் போட்டு ஒரு தலைக்காதலிப்பார்கள் அப்போதைய இளைஞர்கள்.ரொம்ப சோஷியல் பெண்களை விரும்பமாட்டார்கள்.ரூபா அப்படியான தலைப்பைப்போர்த்திய பாத்திரம்.தமிழில் அபூர்வமாக சைடு வகிடு எடுத்துவாரிய தலைமுடி கதாநாயகி.எல்லாம் மொத்தமாக இளைஞர்களைப் படுத்தி எடுத்தது.
ரயில்வே ஸ்டேஷன் பின்னணி படத்தை வித்தியாசமாக காட்டியது..
படம்? படு அமெச்சூர்தனமும் அசட்டு+அச்சுபிச்சுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.ஜெயமோகன் எழுதுகிறார்..
//ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ்//
//ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது.ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம்.பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது.ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை//
இசையின் ஜனரஞ்சகத்தை டிஆருக்கும் செவ்வியல்தன்மை மற்றும் நுட்பமான அம்சங்களை ராஜூக்கும் அர்பணிக்கிறார். செவ்வியல்தன்மை என்பதை கிளாசிக் என்று சொல்லலாம். இதற்கென்றே நிறுவப்பட்ட தரத்தில் இசை உள்ளது.அதாவது ஹை ஸ்டாண்டார்ட் அண்ட் குவாலிடி மற்றும் சாகாவரம் பெற்றவை.ஆத்மாவும் உண்டு.
படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் எல்லாமே ஜனரஞ்சகம்தான்.நுட்பமான அம்சங்கள் செவ்வியல்தன்மைகளை தேடிதேடிப்பார்த்து களைத்துவிட்டேன்.
இந்த ஜனரஞ்சகத்தினால்தான் மனதில் ஒன்றுகிறது.புதுமை என்று சொன்னால் மெல்லிசையை ரொம்ப மெலிதாக கொடுத்ததாக சொல்லாம்.
புதுவசந்தம் படப்பாடல்களும் இதே எளிமைக்காக வெற்றிப்பெற்றது.
பாடல்களின் வெற்றிக்கு காரணங்கள்:-
1.எளிமையான பாடல் வரிகள்.”வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை உனக்கேன் ஆசை” ”முந்தானைப்பார்த்து முன்னூறு கவிதை” “நான் ஒரு ராசியில்லா ராஜா”போன்ற வரிகள் அப்போதைய ஒரு தலைகாதல்,சுய இரக்க தாடிஇளைஞர்களை சுழற்றி அடித்தது.
(உணர்ச்சி உந்துதலில் ஒரு பெண்ணை பல மாதங்கள் தொடர்ந்துவிட்டு அல்லது பஸ் ஸ்டாப்பில் உற்று நோக்கிவிட்டு அவளிடமிருந்து பதிலுக்கு ஒன்றும் வராமல் போக ”இவளுக்கு இதயமே இல்லை” காதல் தோல்வி என்று தாடி வளர்க்கும் மனோபாவம் அப்போது)
எல்லா பாடல்களையும் எழுதியவர் டி.ராஜேந்தர்.அதுவும் காதல் தோல்வி-விரக்தி. விடுவாரா?பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
2.இசை ரொம்பவும் மெலிதான மெல்லிசை.சிக்கலே கிடையாது.school boyish tune என்று சொல்வார்கள். எளிமையான மெட்டை முதலாக வைத்து எளிமையான வரிகள். குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்து கோர்க்கப்பட்டுள்ளது.”வாசமில்லா மலரிது” மற்றும் இரண்டு பாடல்களும் அப்பட்டமான உதாரணம்.
அதனால் இசையில் வித்தியாசமோ,நுட்பமோ,வேறு பரிமாணங்களோ பண்டிதத்தனமோ,அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தலோ இல்லை.எப்படி அனுமானித்தார் என்பதை ஜெயமோகன் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.
படத்தில் பலருக்கு தெரியாத சில ஆச்சரியங்கள்:-
1.இரண்டு பாடல்களைத் தவிர எல்லாமே நெகடிவ் உணர்ச்சிகளைக்கொண்டது.
2.படத்தில் டூயட்டே கிடையாது.
3.உலக மகா ஆச்சரியம் படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒரு பாடல் கூட கிடையாது.
4.இளையராஜா பாதிப்பு இல்லை.கூடையிலே கருவாடு தவிர.பதிலாக எம்எஸ்வி பாதிப்பு.
டைட்டிலில் பின்னணி இசை என்று ஏ.ஏ.ராஜ் பெயர் வருகிறது.பின்னணி இசை? படு மோசம்.
வேறு ஒரு டிவிடி கவரில் இப்படி வருகிறது
வேறு ஒரு இடத்தில் ஜெயமோகன் சொல்கிறார்...
//பத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.//
அந்தப் பாடல்:(என் கலெக்ஷனில் உள்ளது)
மனதை வருடும் வரிகள்,இசைக்கோர்ப்பு,மெட்டு, இனிமை.ஆனால் இளையராஜாவின் பாதிப்பில் உருவான பாட்டு.சில இடங்களில் தாளக்கட்ட “அந்தப்புரத்தில் ஒரு மகாராணி”(1977) சாயல்.
Check this out on Chirbit
அடுத்தப்பாட்டு “அவளொரு மோகனராகம்”.
இதுவும் இனிமையான இசைக்கோர்ப்பு.இதுவும் இளையராஜாவின் பாதிப்பின் உருவாக்கம். எஸ்பிபியின் வெல்வெட் குரல் இனிமை.
Check this out on Chirbit
1970/80களில் தடுக்கி விழுந்தால் இதுமாதிரி எஸ்பிபியின் சோலோ பாடல்கள் நிறைய உண்டு.உதாரணமாக எம் எஸ்வி இசையில்” உன்விழி ஆனந்தபைரவி” படம்: ”பெண் ஒன்று கண்டேன்” (1974)
Check this out on Chirbit
ஏ.ஏ.ராஜின் மற்ற மூன்று தெலுங்குப்படங்களின் பாடல்களையும் கேட்டேன்.1.Devudichina Bartha-1968 2.Panchakalyani Dongalarani-1969 3.Vikramarka Vijayam-1971.புதுமைகள் ஒன்றும் இல்லை.அந்தக்காலகட்டத்திற்கு தோதுவாக இருக்கிறது.
Devudichina Bartha-1968 ல் ஒரு பாட்டு ”Aa Devudichina Pathivee".கிழே பதியப்பட்ட பாட்டு.ஆனால் இது எம் எஸ் வியின் “பூமாலையில் ஓர் மல்லிகை” (படம்: ஊட்டி வரை உறவு-1967) பாட்டை அப்படியே ஒத்திருக்கிறது. வித்தியாசம் ஜானகி ரொம்ப கிளாசிகளாக பாடுகிறார்.ராஜாகாலத்து கதை என்பதாலோ?
Check this out on Chirbit
நானும் ”உதயமாகிறது” பாடல்களை கேட்ட ஞாபகம்(சிலோன்?).அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை.
ஜெயமோகனின் இசை ரசிப்பு புல்லரிக்கிறது.
நானும் விரும்பிக்கேட்டேன்.அப்போது படத்தை கடனே என்றுதான் பார்த்தேன்.பல சென்னை இளைஞர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.தஞ்சாவூர் தலையில் வைத்துக்கொண்டாடியதாக தகவல்.
இன்றைக்கும் மூன்று பாடல்களை உறுத்தல் இல்லாமல் கேட்கலாம்.
(ஜெயமோகனுக்கு விளக்கம் பின்னால் வருகிறது)
ஏ.ஏ.ராஜ் |
அதில் சந்திரசேகர் பாத்திரம்(டாஸ்மாக்) இளைஞர்களால் விரும்பப்பட்டது.
எப்போதும் புடவை தலைப்பைப் போர்த்திக்கொண்டு ஹோம்லியாக பெண்களை ரோடில் பார்த்துவிட்டால் உடனே ரூம் போட்டு ஒரு தலைக்காதலிப்பார்கள் அப்போதைய இளைஞர்கள்.ரொம்ப சோஷியல் பெண்களை விரும்பமாட்டார்கள்.ரூபா அப்படியான தலைப்பைப்போர்த்திய பாத்திரம்.தமிழில் அபூர்வமாக சைடு வகிடு எடுத்துவாரிய தலைமுடி கதாநாயகி.எல்லாம் மொத்தமாக இளைஞர்களைப் படுத்தி எடுத்தது.
ரயில்வே ஸ்டேஷன் பின்னணி படத்தை வித்தியாசமாக காட்டியது..
படம்? படு அமெச்சூர்தனமும் அசட்டு+அச்சுபிச்சுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒரிஜனல் போஸ்டர் |
//ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ்//
//ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது.ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம்.பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது.ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை//
இசையின் ஜனரஞ்சகத்தை டிஆருக்கும் செவ்வியல்தன்மை மற்றும் நுட்பமான அம்சங்களை ராஜூக்கும் அர்பணிக்கிறார். செவ்வியல்தன்மை என்பதை கிளாசிக் என்று சொல்லலாம். இதற்கென்றே நிறுவப்பட்ட தரத்தில் இசை உள்ளது.அதாவது ஹை ஸ்டாண்டார்ட் அண்ட் குவாலிடி மற்றும் சாகாவரம் பெற்றவை.ஆத்மாவும் உண்டு.
படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் எல்லாமே ஜனரஞ்சகம்தான்.நுட்பமான அம்சங்கள் செவ்வியல்தன்மைகளை தேடிதேடிப்பார்த்து களைத்துவிட்டேன்.
இந்த ஜனரஞ்சகத்தினால்தான் மனதில் ஒன்றுகிறது.புதுமை என்று சொன்னால் மெல்லிசையை ரொம்ப மெலிதாக கொடுத்ததாக சொல்லாம்.
புதுவசந்தம் படப்பாடல்களும் இதே எளிமைக்காக வெற்றிப்பெற்றது.
பாடல்களின் வெற்றிக்கு காரணங்கள்:-
1.எளிமையான பாடல் வரிகள்.”வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை உனக்கேன் ஆசை” ”முந்தானைப்பார்த்து முன்னூறு கவிதை” “நான் ஒரு ராசியில்லா ராஜா”போன்ற வரிகள் அப்போதைய ஒரு தலைகாதல்,சுய இரக்க தாடிஇளைஞர்களை சுழற்றி அடித்தது.
(உணர்ச்சி உந்துதலில் ஒரு பெண்ணை பல மாதங்கள் தொடர்ந்துவிட்டு அல்லது பஸ் ஸ்டாப்பில் உற்று நோக்கிவிட்டு அவளிடமிருந்து பதிலுக்கு ஒன்றும் வராமல் போக ”இவளுக்கு இதயமே இல்லை” காதல் தோல்வி என்று தாடி வளர்க்கும் மனோபாவம் அப்போது)
எல்லா பாடல்களையும் எழுதியவர் டி.ராஜேந்தர்.அதுவும் காதல் தோல்வி-விரக்தி. விடுவாரா?பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
படத்துல ரெண்டு வரி இந்தி பாடல்தான் எனக்கு... அதான் தாடி |