Wednesday, August 28, 2013

நான் மெட்ராஸில்தான் இருக்கிறேன்.

நான் மெட்ராஸில் இருந்துக்கொண்டே மெட்ராஸில்தான் இருக்கிறேன் என்று ஐந்து அல்லது ஆறு வயதில்தான் தெரியும்.

மெட்ராஸுக்குத் தள்ளி நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்து ஊர்காரர்கள் ஆவலோடு ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்கிற மாதிரி சும்மா 10 கி.மீ தள்ளி அதே சென்னை பின்கோடில் குரோம்பேட்டைக்காரர்களில் (வசித்த ஊர்) படிக்காதவர்கள் சிலர்  ”மெட்ராஸ்” போகிறேன் என்று சொல்வதுண்டு.படித்தவர்கள் “சிட்டி” போகிறேன் என்று சொல்வார்கள்.எங்களுக்கும் அவ்வளவு மோகம் மெட்ராஸ் மேல்.


மெட்ராஸின் நிறுவன நாள் 22-08-1639 என்று சொல்லப்படுகிறது.மெட்ராஸூக்கு 374 வயது முடிந்து 375 வயது ஆரம்பித்துவிட்டது.22-8-13முதல் 25-08-13 வரை மெட்ராஸ் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஈஸ்ட் இந்தியா கம்பேனி தெலுங்கு (அரசர்)நாயக்கர்களிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள்.அதனால்தானோ என்னவோ சென்னையின் நிலப் பத்திரங்களின்(Parent document) ஓனர்கள் நாயுடு அல்லது நாயக்கர் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வாங்கினால் சென்னையின் விலை என்னவாக இருக்கும்?ஒரு கொசுகூட இல்லாத 15 வருஷம் கேரண்டி கொடுத்தால் நான் வாங்குவதற்குக் தயார்.

மெட்ராஸ் எத்தனை மெட்ராஸடி..!

மின்சார ரயிலில் 15வது நிமிடத்தில் குரோம்பேட்டையிலிருந்து கிண்டியை நெருங்கும்போது மெட்ராஸ் வந்துவிடும்.ஆனால் சினிமாவில் மெட்ராஸ் என்றால் சென்ட்ரல் ரயில்வே அல்லது எல்.ஐ.சி. கட்டிடம்.

பள்ளிச்சுற்றுலாவில் மீயூசியம் (செத்த காலேஜ்),ஜு(உயிர் காலேஜ்),அடையாறு ஆலமரம்,அண்ணா சமாதி,செயின் ஜார்ஜ் கோட்டை.

வீட்டோடு பார்த்த மெட்ராஸ் ரங்கநாதன் தெரு,நல்லி,குமரன்,பாட்டா,மிதிலாபுரி,ஆனந்தவல்லி கல்யாண மண்டபம்,அடஞ்ஞான் முதலி தெரு,அறுபத்துமூவர் மைலாப்பூர்,அயோத்திய மண்டபம் மேற்கு மாம்பலம்.

தலைவர்கள் இறந்துவிட்டால் தெரியும் மெட்ராஸ் மவுண்ட்ரோடு மற்றும் ராஜாஜி ஹால்.

கல்லூரி பருவத்தில் பார்த்த மெட்ராஸுக்கு ஆங்கிலம் மற்றும் இந்திப்படங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தியேட்டர் சத்யம், சபையர்,தேவி காம்ளக்ஸ்,உட்லெண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல்,புவுண்டன் பிளாசா,தி.நகர் ஐஸ்கிரீம் பார்லர்.


தேவி தியேட்டர்
தேவி தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கெளரவம்.கொடுக்கும் காசுக்கு தரமான ஜிலுஜிலு ஏசி, செண்ட்,ஒலி-ஒளி,இருக்கைகள்.உள்ளே நுழைந்தது முதல் வெளிவரும் வரை மிதந்தபடி இருப்போம்.மூன்று வகையான ஜனங்கள் கலந்துகட்டியாக படம் பார்க்க வருவார்கள்.தேவி பாரடைஸ்(தமிழ்),தேவி(ஆங்கிலம்/தமிழ்/ஹிந்தி), தேவிபாலா(ஹிந்தி/தமிழ்).
காமதேனு தியேட்டர்-லஸ் கார்னர்

1978-நான் (உட்கார்ந்தபடி வலது கடைசி)கைக்கட்டி இருப்பவரின் இடதுபக்கம்
பைக்கிராப்ட்ஸ் ரோடில் இருந்த சந்திரிகா ஸ்டியோவில் எடுத்தது.இப்போது  அங்கு இருக்கிறதா????


போட்டோவில் எல்லோரும் அப்போதைய ஹேர்ஸ்டைலான “ஸ்டெப் கட்டிங்” வைத்திருப்போம்.நுங்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சித் பியூட்டி பார்லரில் ரூ25 (சாதா கட்டிங் 3.00 குரோம்பேட்டையில்) கொடுத்து செய்துக்கொள்வோம்.
ஹிந்தி ஹீரோக்களின் பாதிப்பு.

அப்போது மெட்ராஸில் மல்லிகைப்பூ விற்பவர்கள்  நிறைய பேர் தென்படுவார்கள்.பெரும்பாலும் பெண்கள்.இப்போது குறைந்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலக  பெண்கள் மல்லிப்பூ சூடுவது குறைந்துவிட்டது. காரணம் உடை?
பின்னால் ஷோகேசில் இருக்கும் பெண்களுக்கு மல்லிப்பூ செட் ஆகுமா?



மாம்பலம் ஸ்டேஷனில் “இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்துவிட்டீர்களா” நீல கலர் இரும்புபோர்டு இருக்கும்.

இப்போது  இது உயிருடன் இல்லை





 காலத்தின் ஓட்டத்தில் பழையன எல்லாம் கழிந்து புதியன புகுந்து விட்டது. பழையன நினைவில் ஏக்கத்தோடு அவ்வப்போது நிழலாடும்.பெருமகிழ்ச்சி என்னவென்றால் நாம் இழந்ததை எல்லாம் நெட்டில் பொக்கிஷமாக கொட்டிவைத்து  நினைவுகளில் சர்ஃப் செய்ய வைக்கிறார்கள்.

Wednesday, August 21, 2013

கனகா/சேரன் பெட்ரூம்/ஜார்ஜியானா/சப்பாத்தி சில்வர் ஜூப்ளி

சமீபத்தில் படித்த சில செய்திகளைக் கடந்து போகும்போது ஏன் இப்படி என்று ரொமப யோசிக்கவே செய்தது.அறிவுக்கு அடங்காமல்  செய்திகளின் மையம் பிராண்டியது.செய்திகளின் நாயகர்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாக அணுகிறார்கள்.இது சரியா தவறா?


இவைகள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் சற்று திகிலாகவும் இருக்கிறது.எல்லா செய்திகளும் ஜீனியர் விகடனில் படித்தது.

செய்தி - 1

செல்வி ஜார்ஜியான தாம்சன்( வயது 19) படிப்பில் கெட்டிக்காரி.மிகவும் துறுதுறுப்பான பெண்.பதினாறு வயதில் அமெரிக்கா நாசாவால் அழைக்கப்பட்டார்.அவருடைய கனவு விண்வெளி ஆராய்ச்சி,ராக்கெட் விஞ்ஞானம் இவற்றில் கொடிகட்டி பறப்பது.இதையொட்டி விண்வெளி படிப்புக்காக லண்டன் சென்றவர் அங்கு ஹாஸ்டலில்  தூக்கி மாட்டி இறந்துபோனார்.கொலையா தற்கொலையா விசாரணையில் இருக்கிறது.

அப்பா... ப்ளீஸ் சாரிப்பா...!


இனி செய்தியின் மையம்:
தன் பெண்ணின் கனவு நிறைவேறுவதற்கு அப்பா தாம்சன் இவரின் படிப்பு விஷயமாக செய்த ஒரு செயலை சொல்கிறார்....

“12ம் வகுப்பு தேர்வு நடக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள்.அந்தச்சாவு என் மகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மனைவியின் இறந்த உடலை வீட்டுக்கு எடுத்துவராமல் தனியார் குளிரூட்டும் நிலையத்தில் நான்கு நாட்கள் வைத்திருந்தேன்.தேர்வு முடிந்த பிறகுதான் அஞ்சலி செய்து அடக்கம் செய்தேன்”

செய்தி -2

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரத்தில் தன் பெண் காதலனுடன் செல்போனில் பேசுவதைப்பற்றி  குறிப்பிடும்போது ....

“ நிறைய பணக்காரங்க வீட்டில மகள்,அப்பா,அம்மா எல்லோருக்கும் தனித்தனியா பெட்ரூம் இருக்கும்.ஆனா எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து நான், மனைவி, என் ரெண்டு மகள் நாலு பேருக்கும் ஒரே பெட்ரூம்தான்”



செய்தி -3
நடிகை கனகா இறந்ததாக வதந்தியும் அதன் பிறகு நடந்த பரபரப்பான நிகழ்ச்சி ஒன்று... 

தட கள போட்டிமுடிவு. வின்னர் இஸ் ..........
 ”(கனகா வீடு)வீட்டுக்குள் நுழைய முடியாதபடி கேட்டில் இரண்டு பூட்டுக்கள்.தட்டிப்பார்த்துத் திறக்கப்படாததால் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரும் கேட்டைத் திறக்குமாறு சத்தம் போட்டனர்.வீட்டுக்குள் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.கேட்டை தாண்டிக்குதித்து போலீஸார் உள்ளே செல்ல,அவர்களோடு மீடியாக்களும் சென்றன.........

வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால்,பின்பக்கம் சென்று பார்த்தனர்.பின்பக்க கதவும் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கவே, கதவை உடைத்துத் திறந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலீசார்”

செய்தி(கொஞ்சம் பழசு)-4

நீயா நானாவில்  ஒரு பெண்மணியின் பேச்சு:  
ஏய் சப்பாத்தி ....நீயா நானா ஒரு கை பாத்திடலாம்
 
கணவன்: இருபது வருஷமா சப்பாத்தி சரியா பண்ணதே இல்ல இவங்க

மனைவி: என்னமோ தெரியல நானும் டிரை பண்றேன்.ஒண்ணு தண்ணி கூடிடுது.அதுக்கப்பறம் எடுத்து தேய்ச்சா வரமாட்டேங்குது.நானும் மாவத்தொட்டு தொட்டு தேய்ச்சுப் பாக்கறேன் வரவே மாட்டேங்குது.இந்த ஜூலை வந்தா 25 வருஷம் ஆகப்போகுது.

பெண்ணின் பேச்சு 8.11 - 8.50



செய்தி(ரொம்ப பழசு)-4
முல்லைக்கு தேர் கொடுத்தான் மன்னன் பாரிவள்ளல்.


time being கொடுத்திருப்பாரோ?

_______________________________________


நீயா நானாவில் நான் ரொம்ப ரசிப்பது பங்கேற்பவர்களின் முகபாவங்கள்.விஜய் டிவி இதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து க்ளோஸ்-அப்பில் நிறைய முகங்களை காட்டுவார்கள்.இதில் கணவனோ மனைவியோ தங்களின் அன்றாட வாழ்வின் லூசுத்தனமான அல்லது காமெடியான நடவடிக்கைகளை சொல்லும்போது  மற்றவர் sadistic pleasureஓடு ரசித்தவாறே சிரிப்பது.

உண்மையான கலாய்த்தல்(கணவனை புலம்ப விட்டுட்டு ரசிப்பது)
மற்றவகை முகபாவங்கள்:


ரொம்ப ஓட்டாதிங்கடி




என்ன பண்றது இந்தக் காஸ்ட்யூம்க்கு இப்படித்தான் நளினமா சிரிக்கனும்



வெரி நைஸ்...