70களில் யாராவது ஒரு இளைஞன் ரொம்ப ஸ்டைல் காட்டினால் “மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு” என்று கலாய்ப்பார்கள்.அந்த அளவிற்கு ஹிந்தி நடிகர் ராஜேஷ்கன்னா தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார்.
இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.
அந்தக் காலத்தில் சென்னை தி.நகர் ஹோட்டல் ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.
இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.
நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????
இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.
இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.
ஹிந்தியில் சுத்தமாக ஒரு அட்சரம் கூட
தெரியாமால் "Daag" என்ற படம் மூன்று முறை பார்த்தேன். காரணம் அதில்”Mere
Dil Mein Aaj Kya Hai" வரும் இனிமையான பாடல்.”ரூப்பு தேரா மஸ்தானா”(ஆராதனா) தமிழ் நாட்டில் சூப்பர் ஹிட்.
படங்களில் மல்டி ஸ்டார் ஆக்டிங் டிரெண்ட் வந்ததும் இவருக்கு கொஞ்சம் மவுசு குறைய ஆரம்பித்தது. இவர் கொஞ்சம் தனிதன்மை கொண்டவரால் இவர் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இவருக்கு இன்னொரு சிறப்பு உண்டு “A" எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் நிறைய உண்டு.Aaradhana,Aap Ki Kasam,Anand,Amar Deep,Ajnabee,Adhikaar,Avishkar,Aanchal.
இவரின் பாடல்களைக் கேட்க:
http://www.saavn.com/s/#!/play/featured/hindi/Tribute+to+Kaka
சின்ன வயதில் எப்போவோ ஒரு மத்தியான வேளையில் பொட்டிக்கடை டிரான்ஸிஸ்டரில் கேட்ட “Kora Kagaz Tha Yeh Man Mera” ஆராதனா படப் பாடல் நினைவில் அலையடிக்கிறது.
இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.
அந்தக் காலத்தில் சென்னை தி.நகர் ஹோட்டல் ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.
இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.
நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????
இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.
இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.
Kishore |