Friday, November 3, 2017
Wednesday, July 27, 2016
குரல்கள் -ரஜினி அங்கிள் " அதிர்ச்சி”-பார்க்கிங் இம்சை-முகங்கள்
சமீபத்தில் அப்பா படத்தில் நடித்த சிறுமியின் டிவி பேட்டியைக் கேட்டேன். நன்றாக ஒரு வித பக்குவமாக பேசினாள்.
இந்தத் தலைமுறை சிறுமி சிறுவர்களுக்கு தங்களுடைய திறமையைக் காட்ட
தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்ல பலவித ஊடகங்கள் இருக்கிறது ஏதோ ஒரு துறையில். போன தலைமுறையை விட கொடுத்து வைத்தவர்கள். ஆனால் அதே சமயம் புகழ் வெளிச்சம் ஓவராக விழுந்து பொய்யான உலகத்தில் மிதக்க ஆரம்பிக்கிறார்கள்.ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்குகின்றன.
கருத்துக்களை வெளியிடும் போதும் மிகைப்படுத்தல் அதிகமாக இருக்கிறது.இது உலகம் தெரியாமை.

___________________________________________________________
”டமால் டூமில்.....டப் டப் டப் டுப் டமார்....டிஷ்க் டிஷ்க்......டியுங் டியுங்...டமால் டூமில் டப் டப் டப் படார்......”
ரஜினீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....... அங்கிள் கைல இருக்கிற காம்போ ஆஃபர் பாப்கார்ன்லாம் எல்லாம் சைடும் செதறது. ”ஏ” ன்னு போட்டிருக்கிலாம்ல. நாங்க வந்திருக்க மாட்டோம்ல. பேரெண்ட்ஸும் பீல் பண்றாங்க...”
டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..
“அதிர்ச்சி” அங்கிள்
____________________________________________________________________
இது ஒரு இம்சை(வன்முறை) பல வருடமாக நடக்கிறது.
தியேட்டரில் படம் முடிந்ததும்(எல்லா) வாகனப் பார்க்கிங் டிக்கெட்டை கவனமாக வாயில் கவ்விக்கொண்டோ கையில் இடிக்கிக்கொண்டோ பாண்ட்பாக்கெட்டில் வைத்துக்கொண்டோ வண்டியில் சொருகிக்கொண்டோ
ஊர்ந்து ஊர்ந்து ட்ராபிக் ஜாமாகி பார்கிங் attendantடிடம்
காட்டிவிட்டு குறுகிய வாசல் வழியாக வெளியேறுவது.
ஊர்ந்து ஊர்ந்து ட்ராபிக் ஜாமாகி பார்கிங் attendantடிடம்
காட்டிவிட்டு குறுகிய வாசல் வழியாக வெளியேறுவது.
இதற்கு காரணங்கள் இருக்கலாம்.
1. வண்டி திருடுவது(நிர்வாகம் பொறுப்பா?)
2.தேதி இல்லாத வெறும் கலர் டிக்கெட்
3.டிக்கெட் எடுக்காமல் பார்க் செய்வது
2.தேதி இல்லாத வெறும் கலர் டிக்கெட்
3.டிக்கெட் எடுக்காமல் பார்க் செய்வது

திருப்பதி தரிசன வரிசையை மேம்படுத்த ஒரு வித விஞ்ஞான பூர்வ அல்லது
நடைமுறை அணுகுமுறையை பின்பற்றியது போல் இங்கும் செய்ய வேண்டும்.
__________________________________________________________________
சொன்னா கேட்டாதானே?
நண்பர் ஒருவர் அடிக்கடி கூகுளில் வியாதிகள்...... மருந்துகள்.... என்று ”பொது அறிவு” மற்றும் ”விழுப்புணர்ச்சி”க்காக தேடித் தேடி பார்ப்பதுண்டு.
அப்புறம் திகில் அடித்து ஒரே வாரத்தில் தெளிந்தார்.
அப்புறம் திகில் அடித்து ஒரே வாரத்தில் தெளிந்தார்.
”சாதாரண ஜூரம் வந்தாலே கூகுள்ள சொல்லப்படும் எல்லா வியாதியும் எனக்கே இருக்கறா மாதிரி ஒரு பீலிங்.படங்கள், மருந்துகள் அதன் பக்க விளைவுகள் ... ஒரே திகிலா இருக்கு.கொடுத்த மருந்த சீட்ட பத்துவாட்டி படிச்சு அந்த மருந்தா இந்த மருந்தான்னு ஒவ்வொரு வாட்டியும் திங்கிங் போகுது. வேண்டாத வேல எதுக்கு
Ignorance is blissப்பா. பெஸ்ட் நம்ம பேமிலி டாக்டர்தான்”.
Ignorance is blissப்பா. பெஸ்ட் நம்ம பேமிலி டாக்டர்தான்”.
சொன்னா கேட்டாதானே? நாங்களும் மூணு வருஷம் முன்னாடி திகில் அடிச்சு வெளில வந்தோம்.

____________________________________________________________
பல வித முகங்கள்

Thursday, October 29, 2015
கவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்
கவிதை
பெய்த மழையை
தலையில் வாங்கிய
மரங்களும் செடிகளும்
இன்னும் அழகாக
மழையைப்
பெய்துக்கொண்டிருக்கின்றன
______________________________________
சமீபத்தில் ஒரு உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர் வீட்டில் தங்க நேர்ந்துவிட்டது.எனக்கு படுக்க ஒரு இடம் கொடுத்து என்னைப் படுக்கச் சொன்னார்.அவர் எங்கே படுப்பார் என்று யோசித்தேன். ஏன் என்றால அவர் படுக்கும் கட்டிலில் வேறு ஒரு தூரத்து உறவினர் பகிர்ந்துக்கொண்டுப் படுக்க வேண்டும்.
நாலடி கட்டிலில் இரண்டு பேர் விஸ்தாரமாக தூங்க முடியாது.” தூங்க முடியும்.சித்தப்பா (உறவினர்) படுக்கும் ஸ்டைலை அவரு தூங்கின பிறகு பாருங்க காட்றேன்”.சித்தப்பா சீக்கிரமே படுக்கும் பழக்கம் உள்ளவர். நாங்கள் பேசிவிட்டு தூங்கும் நேரம் வந்தது. அவர் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றர்.குறட்டைச் சத்தம்.
சித்தப்பா தூங்கும் போஸைப் பார்த்து திடுக்கிட்டேன். எந்த சமயத்திலும் கிழே விழுந்துவிடுவார் போல் இருந்தது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கட்டிலின் விளிம்பின் நேர்கோடாக ஒருக்களித்துவாறு சுவற்றை பார்த்தவாறு.ஆனால் அவரின் இடது காலின் பாதம் தரையை தொட்டவாறு.அவர் நாலடிக் கட்டிலில் யில் முக்கால் அடிதான் ஆக்ரமித்திருந்தார்.
“உங்களுக்காக இப்படி படுத்திருக்காரா?”
“ நோ... நோ.. இவரோட ஸ்டைலே இப்படித்தான். இப்படி படுத்தால்தான் இவருக்கு தூக்கம் வரும்.30 வருட பழக்கம்.கிழே எல்லாம் விழ மாட்டார். இடது காலுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று டாக்டரிடம் காட்டினால் டாக்டர் நார்மல் என்று சொல்லிவிட்டராம்”
அடுத்து சொன்னதுதான் டாப்.
ஏதோ ஒரு வயதில் ஒரு வெயில் காலத்தில் படுக்கையின் சூடு தாங்காமல் ஒருகளித்துப் படுத்து இடது காலை மொசைக் தரையின் குளிர்ச்சிக்காக வைத்து அதில் சுகம்(?) கண்டு அதற்கு அடிமை ஆகி விட்டராம்.மாற்றவே முடியவில்லையாம்.
தூக்கம் மனிதனுக்கு அவசியம் எப்படி தூங்கினால் என்ன?படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்குபவன் கொடுத்து வைத்தவன்.
__________________________________
இளையராஜா காதல் உணர்ச்சிகளை எப்படி வாரியிறைக்கிறார்.எவ்வளவு மெட்டுக்கள். காட்சியை முடிக்கும் போது வரும் இசை அருமை. மெஜெஸ்டிக் அண்ட் ஸ்டைல்.
________________________________
எந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அதில் லயித்து (பிடித்து) செய்யவும்.இது ஒரு பொன்மொழி.ஜென் தத்துவம் ஒரு படி மேலே போய் அதுவாகவே இரு என்கிறது.
விஜய சூப்பர் சிங்கரில் தோல்வியோடு வெளியேறும் சில பேருக்கு பல காரணங்கள் இருக்கலாம்.வெளியேறிய இரண்டு மூன்று பேர்கள் மேலே சொன்னதை செய்யவில்லை.
Tuesday, October 20, 2015
மோனோலிசா புன்னகை உண்டு ஆனால் இல்லை
உலகபுகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா .இதில் மோனோலிசாவின் புன்னகை மர்மம் மிகுந்தது. உண்மையிலேயே புன்னகை இருக்கும் ஆனா இருக்காது டைப் மர்மம்.புன்னகைப்பது போல் தோன்றும் ஆனால் தோன்றாது. எனக்கு ஒரு வயது வரை “உம்” என்று மூஞ்சியை கொஞ்சமாக தூக்கி வைத்துக்கொண்டார்போல் இருந்தது. அப்புறம் புன்னகைப்பது அல்லது நமட்டு சிரிப்பு மாறி மாறி வரும்.
மனசுக்கேற்றார் போல் புன்னகை மாறும் மேஜிக் இது
ஏன் இப்படி என்று இந்தப் புன்னகையை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.தூரத்திலிருந்து பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி ரொம்ப சாமர்த்தியமாக இப்படி தோன்றுவதற்காகவே வாய் அருகில் சில கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இதே ஸ்டைலில் இவரின் சின்ன வயது ஓவியம் இருக்கிறதாம்.அதன் பெயர் ஐசெல்வொர்த் மோனோலிசா.


ஓவியத்த ஒருவாட்டி பாருங்க அம்மணி புன்னகைக்கிறாங்களா இல்லையா.
Subscribe to:
Posts (Atom)