யார் யாரோ மினி டெம்போவில் கழுத்தைச் சுற்றி கலர் துணியுடன் இறங்கி வீடுவீடாக படியேறி கைக்கூப்பி ஓட்டு கேட்கிறார்கள்.பொத்தம் பொதுவாக ஏரியா பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் தெருக்களில் காதைப்
பிளக்கிறது.கைவிசிறி,fan,விளக்கு, முறம்,சைக்கிள்,பம்பரம்,நாற்காலி,கொடை,ஸ்டவ் என்று வீட்டு தட்டுமுட்டு சாமான்கள் சின்னமாக போஸ்டரில் தெரிகிறது.நகரம் ஆனாதால் யாரும் காலில் விழுவதில்லை.நகரத்தில் தன்னுடைய வார்டு மெம்பர் யார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.
குப்பைக் கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள் இவைகளிடையேதான் இந்தப் பிரசாரம் நடக்கிறது.
கவுன்சிலர்கள் வேலை செய்யாமல் இல்லை. ஏதோ செய்கிறார்கள் ஆனால் மீண்டும் குப்பை கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள்..........
கட்சி சாராத வேட்பாளர்கள் கும்பல் கும்பலாக நிற்கிறார்கள்.”பொன்னான” வாக்குகளை “சிந்தாமல் சிதறாமல்” போடச்சொல்லி "பணிவன்புடன்”
கேட்டுக்கொள்கிறார்கள்.
கட்சி சாராத வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முன் திட்டமோ,strategy,சிட்டிங் கவுன்சிலரின் குறைகளை உயர்த்திக் காட்டுதல்(highlight),வாக்களர்களை முன்னமே தெரிந்து வைத்துக்கொள்ளுதல் போன்றவைகள் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது.சுத்தமாக சிரத்தை இல்லை.
திருந்துங்கடா டேய்!
___________________________________________________________
வீட்டில் சுவற்றில் சாதாரண ஒரு பல்ப் ஹோல்டர் போடுவதற்கு கட்டணம் 65 ரூபாயாம்.காரணம் டிரில்லிங் மெஷின் வாடகை 30 ரூபாயாம்.90ன் இறுதியிலேயே டிரில்லிங் மெஷின் வந்துவிட்டது.”வெட்ரூம்பு” காலம் மலையேறி விட்டது.மார்வலிக்க”வெட்ரூம்பு” வைத்து சுவற்றில் அடித்து ஓட்டைப்போட்ட எலக்ட்ரிஷியன்கள் பாவம் கிழவனாகி விட்டார்கள்.
என் எலக்ட்ரிஷியன் அவருடைய சொந்த மெஷினயே வாடகையாக காட்டி என் வேலையை முடித்தார்.சரி என்ஜாய் என்று விட்டுவிட்டேன்.
இப்போதெல்லாம் எலக்ட்ரிஷியன்(சென்னை) என்றாலே அவரின் அடிப்படை ஆயுதம் டிரில்லிங் மெஷின்.

”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நமது திறமையே செல்வம்” என்று ஒரு சொலவடை உண்டு. என் பேண்டின் zip வேலை செய்யாததால் ஒரு டெய்லரிடம் கொடுத்து(காலை 9 மணி) மாற்றச்சொன்னேன். கூலி 40 ரூபாய் என்று சொல்லி மதியம் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.
ஆனால் சொன்னபடி தயார் ஆகவில்லை. மீண்டும் நாளை வரச்சொன்னார்.இப்படியே மூன்று நாள் ஆகிவிட்டது.கோபத்தில் திருப்பிக் கொடுத்துவிடும்படி சொன்னேன்.கொடுக்கும்போது “ பழைய துணி எடுத்தால் இதுதான் பிரச்சனை” என்று முணகியபடியே கொடுத்தார்.ஆனால் பேண்ட் இடுப்பில் எல்லா தையல்களும் பிரித்துப் போட்டபடி இருந்தது.ஒன்றும் சொல்லாமல் வாங்கி வந்துவிட்டேன்.
ஏன் இந்த சோம்பேறித்தனம்/அசிரத்தை?
1. பழைய துணி எடுக்க மாட்டோம் என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.(கூட்டம் அதிகம் கிடையாது)
2.பழைய துணி என்றால் ஒரு அகெளரவம்
3.அகெளரவத்தால் அலட்சியம்
4.அலட்சியத்தால் அசிரத்தை/சோம்பேறித்தனம்/
5.அதனால் டெலிவரி லேட்/வேலை அரைகுறை
6.இவரிடம் வேலை செய்யும் கூலி டெய்லர்கள் ஓனரை மதிக்காமை(பழைய துணி எடுத்ததால்).ஒனர் இதில் தெளிவாக இல்லை.

மூன்றாவதை நானும் அனுபவித்திருக்கிறேன்.... இவங்கல்லாம் திருந்திட்டாலும்..
ReplyDelete:))) ரொம்ப கோபமா இருக்கீங்க போலயே...:)))
ReplyDeleteதிருந்தினால் உலகின் அடுத்த அதிசயம்!
ReplyDeleteமக்கள் திருந்துனா நாடு என்ன ஆகறது. போங்க சார்..
ReplyDeleteதிருந்துங்க
ReplyDeleteகுடிமகன்/தமிழ்ப்பறவை,மிடில்கிளாஸ்மாதவி,ராஜன்,
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி
பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும் நன்றி.