Monday, October 24, 2011

இளையராஜா டப்பிங்- ராஜ் டிவிக்கு 10 தலை- மட சாம்பிராணி

ராஜ் டிவி தேன் குடித்த நரி மாதிரி ஆகிவிட்டது. அதற்கும் “இந்தியத் தொலைகாட்சிகளிலேயே” ஜுரம் வந்து பத்து தலை முளைத்துவிட்டது.தீபாவளி அன்று ராஜ்ஜில் “ராவணன்” படம்.டப்பா படம்.ஒரு மாதமாக விளம்பரம் போட்டுத் தாக்குகிறது.தலை(பத்து?) தாங்க
முடியவில்லை.


இந்த வருடம் தீபாவளிக்கு நிறைய சேனல்களில் “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே” ஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் வருடங்கள் எல்லாம் ”ஹிட்” படங்களை சன் டிவி ஆக்கிரமித்து ”அட்டு” படங்களை மற்ற சேனல்கள் போடும். காட்சி மாறிவிட்டது.

When Cat is away(out!) Rats are happyயா! அல்லது வேறா?


மட சாம்பிராணி

இதைப் பற்ற வைக்க ரொம்ப நேரம் பிடிக்கும். அது மாதிரி சொல்வதைப் புரிந்துக்கொள்ளாது முழிக்கும் மனிதர்களை “ சரியான மட சாம்பிராணி” என்று சொல்லும் வழக்கம் உண்டு.டியூப் லைட்?

தலையில் பச்சைத் துணிக்கட்டு,தாடி,கையில் ஒரு தட்டு அதில் சாம்பிராணி தூப ஸ்டாண்ட்,மறு கையில் மயில் பீலியுடன் கடை கடையாக ஏறி சாம்பிராணி புகை போடும் முஸ்லீம் அன்பர்களைப் பார்த்திருக்கலாம்.
பில்லிசூனியம்,திருஷ்டி,ஜலதோஷம்,பூச்சி,ஐஸ்வர்யம் போன்றவைகளுக்கு போடப்படுகிறது.

மேலும் இதில் “தெய்வீக மணம்” வீசுவதால் எந்த மதத்தவரும் எதிர்ப்பதில்லை.


        
நன்றி: பாரத்ஸ்டூடண்ட்.காம்
        
ரொம்ப வருடம் முன்பு நடந்தது.

ஒரு துணிக்கடைக்கு வழக்கமாக ஒரு முஸ்லீம் பெரியவர்(வீடியோவில் வருபவர் அல்ல) மூன்று நாளுக்கு ஒரு முறை வருவார்.ஒரு நாள் (பெரிய கடை) இருக்கும்போது இவரிடம் கேட்டேன் “நீங்க ஒரு நாளைக்கு நிறைய ஏரியா உங்க பசங்களோடு போய் பிரிச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாமே. ஏன் நீங்க மட்டும்தான் அதுவும் கொஞ்ச ஏரியாத்தான் போறீங்க?”
        
”எனக்கு வர்ற காசு போதும். பிசினஸ்ஸா பண்ணல.புகைப் போடும்போது இவங்க நல்லா இருக்கனம்னுதான் போடறேன்.என்ன மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்க.தம்பி, நீங்க ”சம்பாதிக்கலாமே”ன்னு கேட்கும்போதே மதிப்பு போயிடுது.என் குணத்தப் பாத்துதான் என்னோட இரண்டு பசங்க இதே ஏரியாவுல் துணி கடைல சூப்பர்வைஸ்ஸரா இருக்காங்க.அடுத்தவங்க நல்லா இருக்க புகைப்போட்டது நமக்கு நல்லது நடக்க வச்சுட்டாரு அல்லா”

கேட்டவுடன் எனக்கு மந்திரித்துவிட்டார் போல் இருந்தது.
        
ஸ்ரீ ராம ராஜ்யம் சினிமா


தெலுங்கில் ரிலீசாகப்போகும் படம். பாலகிருஷ்ணா நயந்தாரா நடிக்கிறார்கள்.இசை இசைஞானிஇளையராஜா.பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆந்திராவில்.இதற்கு ரீரிகார்டிங்கிற்கு ராஜா ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொள்வதாக செய்திக்குறிப்புகள் கூறுகிறது. அது:

// Ilayaraja usually does re-recording with two keyboards. But for this film, he opted to use live instruments, with 70 musicians. He refused to go down the beaten track set by previous mythology based movies, and did something new & unique, almost like he re-did the screenplay with his rerecording. Producer says IR did the rerecording as if he was doing research in music.//


படங்கள்:









4 comments:

  1. ஸ்ரீ ராம ராஜ்யம் சினிமா
    பாடல் எல்லாம் அருமையிலும் அருமை
    இசை இசைஞானிஇளையராஜா அல்ல
    இசை "பழைய இளையராஜா"

    ReplyDelete
  2. தல ராஜ் டிவி இந்த படத்தை டிவியில போடுறாங்கன்னு போஸ்டர் கூட அடிச்சி ஒட்டுறாங்க ;)

    மணிரத்தினம் இனிமேல் ஆச்சும் நல்ல படம் எடுக்கனும் ;-)

    தெய்வம் பற்றிய செய்தியும் படங்களும் அருமை ;-)

    ReplyDelete
  3. ஸ்ரீஇராமராஜ்யம் பாடல்களை கேட்கும் போதே
    படம் பார்க்கும் ஆவல் வந்தது. Re-recording
    பற்றி வரும் நீங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் இன்னும் ஆவலை கூட்டுகிறது. நன்றி

    ReplyDelete
  4. நன்றி மனசாலி/கோபிநாத்/மின்மலர்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!