Thursday, July 19, 2012

மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு

70களில் யாராவது ஒரு இளைஞன் ரொம்ப ஸ்டைல் காட்டினால் “மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு” என்று கலாய்ப்பார்கள்.அந்த அளவிற்கு ஹிந்தி நடிகர் ராஜேஷ்கன்னா தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார்.

இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.

அந்தக் காலத்தில் சென்னை தி.நகர்  ஹோட்டல்  ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.

இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.

நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????

இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.

இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai  (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.

Kishore
ஹிந்தியில் சுத்தமாக ஒரு அட்சரம் கூட தெரியாமால் "Daag" என்ற படம் மூன்று முறை பார்த்தேன். காரணம் அதில்”Mere Dil Mein Aaj Kya Hai" வரும் இனிமையான பாடல்.”ரூப்பு தேரா மஸ்தானா”(ஆராதனா) தமிழ் நாட்டில் சூப்பர் ஹிட்.


படங்களில் மல்டி ஸ்டார் ஆக்டிங் டிரெண்ட் வந்ததும் இவருக்கு கொஞ்சம் மவுசு குறைய ஆரம்பித்தது. இவர் கொஞ்சம் தனிதன்மை கொண்டவரால் இவர் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இவருக்கு இன்னொரு சிறப்பு உண்டு “A" எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் நிறைய உண்டு.Aaradhana,Aap Ki Kasam,Anand,Amar Deep,Ajnabee,Adhikaar,Avishkar,Aanchal.

இவரின் பாடல்களைக் கேட்க:

http://www.saavn.com/s/#!/play/featured/hindi/Tribute+to+Kaka

சின்ன வயதில் எப்போவோ ஒரு மத்தியான வேளையில் பொட்டிக்கடை டிரான்ஸிஸ்டரில் கேட்ட “Kora Kagaz Tha Yeh Man Mera” ஆராதனா படப் பாடல் நினைவில் அலையடிக்கிறது.


11 comments:

  1. // இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.//

    ராஜேஷ் கன்னாவின் மறைவுக்கு வருத்தங்கள்.

    ஒருவர் மறைந்த பின்னர் பாராட்டுவது சகஜமே.ஆனால் இந்தி /இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ் கபூர் அப்புறம் தான் எல்லாமே.

    முன்னர் இந்தியா டுடேயில் என நினைக்கிறேன் , ராஜ் கபூர் முதல் சூப்பர் ஸ்டார், அமிதாப் கடைசி சூப்பர் ஸ்டார் இனிமேல் எல்லாம் சூப்பர் ஸ்டார் என நிரந்தர இடம் இல்லைனு எழுதி இருந்தாங்க.

    ராஜேஷ் கன்னா காதல் மன்னன் வகை ஹீரோ, நம்ம ஊரு ஜெமினி போல. எனவே அவருக்கு தனி டிரெண்ட். முதல் சூப்பர் ராஜ் கபூர் என்பதில் எனக்கும் உடன்ப்பாடே,அவருக்கு பக்கமா தேவ் ஆனந்த் சொல்லலாம்.

    ReplyDelete
  2. on those days I remember girls praising their boyfriends saying you look like Rajesh Kanna.he was very popular among the school girls also.I dont think rajkapoor or dev ananad was popular like this among the femine audiences.

    ReplyDelete
  3. சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தை பதமே ராஜேஷ் கன்னாவை குறிப்பிடத்தான் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன் யாரும் ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படவில்லை . ராஜ் கபூர், தேவ் ஆனந்த் போன்றவர்கள் பெரிய நடிகர்களாக இருந்தாலும் இந்த அடைமொழி சொல் ராஜேஷ் கண்ணாவுக்கு மட்டுமே முதன் முதலில் சொல்லப்பட்டது. எனவே ராஜேஷ் கண்ணா இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்பது உண்மையே.

    ReplyDelete
  4. நன்றி திண்டுக்கல் தனபாலன்
    நன்றி வவ்வால்

    ReplyDelete
  5. வவ்வால்: எனக்குத் தெரிந்து ராஜேஷ்கன்னாவைத்தான் சூப்பர் ஸ்டார் என்று அழைத்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  6. Shiva:
    //.I dont think rajkapoor or dev ananad was popular like this among the femine audiences//
    Yes right.I agree with you.

    Thanks

    ReplyDelete
  7. உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். நன்றி.

    ReplyDelete
  8. அய்யாமார்களே! 1936ல எம்.கே.டி வந்தார். அவர் தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். அவர மாதிரி பிரபல மான நடிகர் கிடையாது. கிருக்குப் பிடிச்ச பொம்பளை கூட எம்.கே.டி னா நின்னு திரும்பி பாப்பா! அவர் நடிச்ச படம் மொத்தம் 14. அவரை மாதிரி பிரபல மானவங்க யாருமே கிடையாது. ஸ்டுடியோ சிஸ்டம் முடிந்து ஸ்டார் சிஸ்டத்தை திரையுலகில் ஆரம்பமாக காரணமாயிருந்தவர் எம்.கே தியாகராஜ பாகவதர்.!---காஸ்பன்.

    ReplyDelete
  9. காஷ்யபன்

    நீங்கள் சொல்றதும் சரிதான்.நிறைய படித்திருக்கிறேன். அவருக்காக ரயில் நிறுத்தப்பட்டது,அவரின் ஒரு முடியை ஒரு ரசிகன் பத்திரப்படுத்தியது,சீப்பை எடுத்துக்கொண்டு ஓடியது,கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் ரசிகர்கள் தினமும் கூட்டியது எல்லாம் நடந்தது.

    எப்போதும் வடக்கு வாழும் தெற்கு தேயும்.

    ஆல் இந்தியா லெவலில் அவரின் ஸ்டார் அந்தஸ்து இல்லை என்றுதான் சொல்லுவேன்.

    ReplyDelete
  10. ரவி ஷங்கர் அவர்களே! பாகவதர் படங்களே புனெவிலும் ஷொலாபூரில்ம்தான் எடுக்கப்பட்டன! " "சிந்தாமணியில்"நடித்த சாந்தா ஆப்தே மராட்டிய நடிகை! முமபை திரையுலகம் வளராதகாலம்! கல்கத்தாவிற்கு படம்பிடிக்கபோவார்கள்! தமிழ்,தெலுங்கு,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிப்படங்கள் சென்னையில் மட்டுமே தயாராகின.இந்திய திரைப்படத்தின் கேந்திரமாக சென்னைதான் இருந்தது!. ஸ்டார் சிஸ்டம் என்றால் என்ன? ஸ்டூடியோ சிஸ்டமென்றால் என்ன? என்று தனியாக இடுகை எழுதியிருந்தேன்!---காஸ்யபன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!