Friday, February 24, 2012

வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்

வழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக
போஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.

சேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.
ஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.

யோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா?

அடுத்த விஷயம்.....
எந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு
தடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது
எழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.

கடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா?

4 comments:

  1. மக்களை கொன்ற தீவிரவாதிகளாக இருந்தால் இப்படி அதிர்ச்சி வந்திருக்காது ,பணக் கொள்ளையர்களை கொன்றதால்,பல கேள்விகள் எழுகின்றன,ஏன் ஒருவனை கூட
    உயிருடன் பிடிக்க முடியவில்லை?,இதில அப்பாவி சிக்கியிருக்க வாய்ப்பு இருக்கிறதே.உண்மை வெளியாக ஏதாவது சான்ஸ் உள்ளதா?.

    ReplyDelete
  2. இதில அப்பாவி சிக்கியிருக்க வாய்ப்பு இருக்கிறதே!!வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி !!!!

    ReplyDelete
  3. நீண்ட நாட்களாகிவிட்டது உங்கள் வலைப்பூவுக்கு வந்து...

    என்ன என்ன நாடகமோ....எதுதான் உண்மையோ..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!