Wednesday, August 3, 2011

09.10.57ல் நின்ற பிரபஞ்சம்


டிக்... டிக்... டிக்... டிக்...
அலாரம் டைம்பீஸின்
பிரபஞ்ச இயக்கத்தைக்
கேட்ட குழந்தை
பேட்டரிகளைக்  கழட்டி
09.10.57 ல் பிரபஞ்சத்தை நிறுத்திவிடுகிறது

மீண்டும் பாட்டரி பொருத்தியும்
டிக்... டிக்... டிக்... டிக்...இயக்கம் இல்லை
பிரபஞ்சத்தின் கைகள்
09.10.57 ல்லை விட்டு அசையவில்லை

அப்படியும் இப்படியும்
குலுக்கிப் பார்த்தும்
பிரபஞ்சம் அசையவில்லை

பிரபஞ்சத்தை அப்படியே
வைத்துவிட்டு அடுத்த
விளையாட்டுக்குப் போய்விடுகிறது
குழந்தை

பிரபஞ்சத்தின்
கோடானு கோடி கோடி கோடி ஜீவராசிகள்
கட்டிலுக்கடியில்   உருண்டுபோய்
கிடக்கும் இன்னொரு பாட்டரியின்
மேல் கண்கள் குத்திட்டு
உறைந்து நிற்கின்றன

4 comments:

  1. நன்றி சித்ரா.

    ReplyDelete
  2. ரியல்லி சூப்பர் சார். பெரிய லெவல்ல ஆரம்பிச்சு, குழந்தையாய் முடிகிறது கவிதை....:)

    ReplyDelete
  3. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!