Wednesday, February 23, 2011

உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்


உதிர்ந்த இலையும் பஞ்சபூதங்களும்
பெயர் தெரியாத பறவை ஒன்று
கிளையை விட்டு
ரகசியமாய் ஒரு இலை உதிர்த்து
விருட்டென்று பறக்கையில்
சிறகின் படபடப்பில்
பஞ்சபூதம் விழித்தெழுந்து
ரெளத்ரம் கொள்கிறது

சாட்சியான நான்
பெயர் தெரிந்தப் பறவையை
பெயர் தெரியாதப் பறவை என்று
கவிதையின் முதல் வரியில்
மாற்றி எழுதி தப்பித்து விடுகிறேன்
___________________________

பட்டர்ஃப்ளை எஃப்க்ட் அல்லது கேயாஸ் தியரி
ஒரு ஒழுங்கில்லாத
புற நகர் மொட்டை மாடியும்
நடு வானத்தில்  'V" வடிவத்தில்
பறக்கும் பறவைகளும்
ஒரு குழந்தையின் அழுகையும்
தேவைப்படுகிறது
எப்பவோ மறந்துப் போன
ஒரு பாட்டின் முதல் அடியை
பிடிப்பதற்கு

4 comments:

  1. வாழ்க்கைத் தத்துவத்தைத் தேடும் கவிதை..

    அழகு!!!!

    ReplyDelete
  2. அழகான கவிதைகள்1

    ReplyDelete
  3. கலக்கல் சார்...எனக்கு ரொம்பப் பிடிச்சது முதல் கவிதை...

    ReplyDelete
  4. நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!