Monday, May 4, 2009

நடிகர் தயாரிப்பாளர் கே.பாலாஜி - என்னை பாதித்தவர்

நடிகர், தயாரிப்பாளர் பாலாஜி என்னை பாதித்தவர்.காரணங்கள்,
கருப்பு வெள்ளை படங்கள் காலத்தில் இவரின் படங்கள் 
கலர்தான்.இவர் அந்த காலத்து ஐங்கரன் இன்டர் நேஷனல் 
அல்லது பிரமிட் சாய்மீரா.பணத்தை தண்ணீராக வாரியிரைப்பார்.
முக்கால்வாசி ஆகஷன் படங்கள்தான்.படத்தில் ரொம்ப richness 
இருக்கும்.வில்லன்கள் ஸ்டார் ஹோட்டலிதான் 
நடமாடுவார்கள்.நாயகி நாயகர்கள் உடை டிரெண்டியாக 
இருக்கும் கதைகள் எல்லாம் நகரம் சார்ந்ததாக இருக்கும்.
கவர்ச்சியான வில்லிகள் வருவார்கள் .இவர் படத்தில் வரும் 
கார்கள் தினுசு தினுசாக இருக்கும்.


இவரின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஜிகினா லோகோவுடன் 
அதிரடியாக பட டைட்டில் பட்டையை கிளப்பியபடி 
ஆரம்பிக்கும்.விசில் பறக்கும்.இப்போது வரும் படங்களில்
கம்புயூட்டர் கிராபிக்ஸ் டைட்டிலின் “உஷ்....புஷ்......
கிஷ்கிஷ்” எப்படியோ அப்படி அந்த காலத்து சவுண்ட்.

ஏன் எப்போதுமே இந்தி மொழி படங்களையே தழுவி 
எடுக்கிறீகள் என்றதற்கு “தழுவலில்தானே இன்பம் “ 
என்றார்.இந்தியில் ஓடிய வெற்றி படங்களை தழுவி 
அப்படியே தமிழ் படுத்துவார்.ஈயடிச்சான் காப்பி 
என்றால் இவர் படங்களை சொல்லாம்.இந்தி பதிப்பில்
 ஒரு சீனில் “ஈ” இருந்தால் தமிழ் படத்திலும் அந்த 
சீனில் “ஈ” இருக்கும் என்று சொல்லுவார்கள். பக்கா 
கமர்ஷியல் சினிமா பிசினஸ்மேன் என்று சொல்லலாம். 

”The Hindu"(Friday, Mar 30, 2007)வில் வந்த பேட்டி:

Any plans to remake Shah Rukh Khan's `Don'?

I am yet to see it. But we do have a plan to remake 

the original Don' (`Billa') sometime.

On not making TV serials...

People wanted me to spend money and get sponsors 

for which I was not ready.Now, some people are 

approaching me themselves. We shall see.

Why was MGR not cast in any of your films?

He was a darling of workers, but his attitude towards 

producers and mine were poles apart. He was a 

good friend and I did not want to strain that relationship.


You had a secret code on prints of your `Vidudhalai' 

to check piracy. Do you plan anything like that right now?

Piracy is like a disease and nothing much can be done. 

But people will flock to theatres if a film is really good. 

I am sure the industry will more than survive 

competition from TV serials and threat of piracy.

இதே பேட்டியில் “தழுவல் படங்களை எடுப்பதால்.. புது 
சிந்தனைகள்(creativity) வளராமல் போய் விடுமே “ என்று
கேட்டதற்கு “ இந்தி படத்தில் ஆண் காரக்டராக இருந்ததை
தமிழ் மொழி மாற்றத்தின் போது பெண்ணாக மாற்றினோம்”
என்றார்.



இவரின் சில படங்களில் வரும் கார் சேஸ் காட்சிகள் 
இந்தி பதிப்பலிருந்து cut & paste என்பது அப்பட்டமாகத் 
தெரியும்.


பல படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா.கதாநாயகி 
பெயர் ராதா.பெயர் ராசி.சில டைரக்டரகள் முதல் காட்சி
செண்டிமெண்டாக இருக்க வசனத்தை “வெற்றி ..
வெற்றி ”என்று ஆரம்பிப்பார்கள். இவருக்கு கெட்ட 
வார்த்தை ராசி. கதாநாயகனோ வில்லனோ எல்லா 
படத்திலும் “பாஸ்டர்ட்”(bastard)  என்ற சொல்லை 
கண்டிப்பாக ஏதாவது ஒரு இடத்தில் சொல்லுவான். 
ராசியாகி படம் ஓடும் என்று நம்பிக்கை.

தன் பெயரை கூட Balaji  என்பதிலிருந்து Balajee  என்று 
மாற்றிக்கொண்டார்.

நல்ல நடிகரும் கூட.நல்ல உயரம். ஆர்மி ஜெனரல் 
போல் வாட்டசாட்டமான உடம்பு. A gigantic personality. 
அந்த காலத்துப் படங்களில் ரொம்ப இளமையாக 
அழகாக இருப்பார்.”பொன் ஒன்று கண்டேன் “(படித்தால்
மட்டும் போதுமா)”ஆண்டொன்று போனால்”(போலீஸ்
காரன் மகள்) " இனிமையான பாடல் காட்சிகளில் 
தோன்றியவர்.


இவருக்கென்றே ரெடிமேடாக ஒரு ரோல் இவர் படத்தில் 
இருக்கும்.ஒரு வில்லத்தனமான பார்வை. கண்ணில் 
ஒருநயவஞ்சகத்தனம்.நண்பர் அல்லது வில்லன் இரண்டு 
வேடத்திலும் வருவார்.

எனக்கு பிடித்த படங்கள் ராஜா,எங்கிருந்தோ வந்தாள், 
நீதி,பில்லா.என் தம்பி போன்ற படங்கள்.

இவர் கடைசியாக அஜித்தின் “கீரிடம்” படம் எடுத்தார் 
என்று ஞாபகம்.

நேற்று காலமானர்.இவருக்கு வய்து 74..அவருக்கு 
ஒருமகன் சுரேஷ் பாலாஜி,சுஜாதா,சுசித்ரா இரு மகள்கள். 
மனைவி ஆனந்தவல்லி பல ஆண்டுகளுக்கு 
இறந்து விட்டார்.ம்லையாள நடிகர் மோகன்லால 
இவரது மருமகன்...

இவரின் இறப்பு பற்றி கேள்விபட்டதும் முதலில் ஞாபகம் 
வந்தது டைட்டிலில் முதலில் தோன்றும் இவரின் சுஜாதா
சினி ஆர்ட்ஸ் ஜிகினா லோகோவும்அதனுடன் வரும் 
ஒரு அதிரடி இசையும்தான்.
 

16 comments:

  1. இவர் நடித்து தயாரித்த பில்லா எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்..!

    ReplyDelete
  2. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

    ReplyDelete
  3. பலே பாண்டியா படத்தில் இவரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்

    ReplyDelete
  4. நன்றி டகளஸ்.

    ReplyDelete
  5. பாலாஜியை பதிவின் மூலம் நினைவுபடுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. தமிழ்பட தயாரிப்பாளர் வரிசையில் ஒரு ட்ரென்ட்செட் தயாரிப்பாளர்தான் பாலாஜி.

    ReplyDelete
  7. நன்றி மண்குதிரை.

    //viththiyasamaa irukku ungkal anjasali//

    அது ஏங்க என் பதிவுல மட்டும் ஆங்கிலத்துல மறு மொழி.ஏதாவது காரணம் இருக்கா?

    ReplyDelete
  8. முரளிகண்ணன் said...

    //பலே பாண்டியா படத்தில் இவரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்//

    வாங்க முரளிகண்ணன்.கருத்துக்கு நன்றி.பதிவு பெரிசாகி
    விடும்னு நிறைய விட்டுட்டேன்.

    ReplyDelete
  9. ராஜ நடராஜன் said...

    //பாலாஜியை பதிவின் மூலம் நினைவுபடுத்தியுள்ளீர்கள்//

    //தமிழ்பட தயாரிப்பாளர் வரிசையில் ஒரு ட்ரென்ட்செட் தயாரிப்பாளர்தான் பாலாஜி//

    ஆமாம் இவர் ஒரு டிரெண்ட் செட்டர்தான்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. கயல்விழி நடனம் said...

    //Billa thaan yenakku nyabakam varuthu..//

    நன்றி.

    ReplyDelete
  11. ரவி,

    நல்ல பதிவு!

    உங்கள் பதிவுகளை முன்னாள் படித்திருந்தாலும் இப்போதுதான் நீங்கள் யாரென்று சரியாக புரிகிறது. :-))

    ReplyDelete
  12. //உங்கள் பதிவுகளை முன்னாள் படித்திருந்தாலும் இப்போதுதான் நீங்கள் யாரென்று சரியாக புரிகிறது//

    நன்றி சார்!

    //இப்போதுதான் நீங்கள் யாரென்று சரியாக புரிகிறது//

    சார் சற்று விளக்குங்களேன்.

    ReplyDelete
  13. லேட்டஸ்ட் அப்பேட்டுடன் படித்தேன். நன்றி ரவி..

    ReplyDelete
  14. நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!