Saturday, May 16, 2015

கொம்ப வச்சுக்கிட்டு....எமோஷன்...மோஷன்... பிடிச்சிருக்கு அன்னக்கிளிஆண்டாள் கொண்டை


எங்க தலவிதி(கொம்பு) அவ்வளவுதான்


ஹல்லோ.... டிஸ்கவரி சானல் கொம்புள்ள அனிமல்ஸ்...!என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறீர்கள்.கொடூரமான கொம்ப வச்சுகிட்டு உங்க இனத்தோட சண்டை போட்றீங்க. மரத்துல சொறிஞ்சுகிறீங்க.குட்டி அனிமல்ஸ்ஸ பயமுறுத்திறீங்க. ஆனா ஒவ்வொரு வாட்டியும் உங்களை வேட்டை மிருகங்கள் ஹைஸ்பிடில் துரத்தும்போது சடார் என்று திரும்பி(cricket reverse sweep கணக்கா)கொம்பால கொத்துபரோட்டா போடுவீர்கள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் பொசுக்குன்னு மாட்டிட்டு கையும் காலையும் உதறுவீர்கள்.
கொஞ்சம் கொம்பையும் ஆட்டுவீர்கள். இப்ப ஆட்டி என்ன பிரயோஜனம்.


எல்லாம் பந்தாதான்.

பல கோடி வருட பரிணாம வளர்ச்சில இந்த ஐடியா ஜீன்ல வர சான்ஸ் இல்லையோ?Survival of the fittestக்கு எல்லா தகுதியும்(கொம்பு) இருக்கு. ஆனா.....ஏதோ ஒரு தடவை பல எறுமைகள் சேர்ந்து சிங்கத்த கொன்னத பார்த்தேன்.நீங்க எப்படி?

மோஷன்.... எமோஷன்..... கான்ஸிடிபேஷன் பின்னே கமோஷன்.....

இந்திப் படங்கள் நிறைய மாறி வருகிறது.தமிழ்ப் படங்கள்? ”சூதுகவ்வும்” ஹேங்ஓவரிலேயே இன்னும் இருக்கிறது.

PIKU நம்ம ஊர் கிரா அல்லது புதுமைப்பித்தன் டைப்பான சிறுகதை.”வெளிக்கு” சரியாக போகாத ஒரு “மூலசூடு”அப்பாவை வைத்துக்கொண்டு மகள் குப்பைக் கொட்டுவதுதான் கதை.இதை சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள் PIKU படத்தில்.

கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டால் யார் தன் (மலச்)சிக்கலை கவனிப்பார்கள் என்று She is not a virgin, sexually independent என்று மற்றவர்களிடம் சொல்லி அவள் கல்யாணத்தைப்பற்றி கண்டுக்கொள்வதே இல்லை.அவளும் அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

வழக்கமான ஷோபீஸ்ஸாக வரும் தீபிகா படுகோனுக்கு இது வரப்பிரசாதம்.முதலில் படத்தில் என்னைக் கவர்ந்தவர் இவர்தான். பின்னுகிறார்.அடுத்து இம்பிரஸ் செய்பவர் டிராவல்ஸ் உரிமையாளராக வரும் இர்பான்.இருவரும் அடிக்கடி மோதிக்கொள்வதும் பின்னர் புரிதலும் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அமிதாப் கொடுத்துவைத்தவர்.கிழடு தட்டினாலும் கிழட்டுத்தனத்திற்கு ஏற்றமாதிரி ரோல்கள் வந்து அமைகிறது. செட் ஆகி பின்னுகிறார்.முன்பு ”இளைஞன்” ஹீரோ.இப்போது “கிழட்டு” ஹீரோ.
படத்தில் நிறைய ஆங்கில உரையாடல் வருவதால் படத்தின் போக்கைப் புரிந்துக்கொள்ளலாம்.
இசை அனுபம் ராய் என்ற புதியவராம்.இந்த மாதிரி படத்திற்கென்றே stereotyped சிதார் வைத்திருக்கிறார்கள்.பின்னணியில்”சும்மா”  டொய்ங் டொய்ங்க்னு சிதாரை மீட்டினால் போதுமா? Soul இருக்க வேண்டாமா?.பாடல்கள் ரஹ்மான் சாயல்.

காட்ச் ”பிடி”ச்சிருக்கு

ஐபில் என்பது டிவி சீரியல் கணக்காக வணிக நோக்காக இருந்தாலும் சில சுவராஸ்யங்கள் இருக்கிறது. கடைசி ஓவர்களில் இதயதுடிப்பை எகிற வைக்கிறார்கள். ஒரு மாட்சில் சிஎஸ்கேயை “ஊத்தி மூடிட்டாங்க”  என்று பாதியிலேயே டிவி ஆஃப் பண்ணி படுத்து காலையில் எழுந்தால் சிஎஸ்கே வின் பண்ணிட்டாங்க.
சர்க்கஸ் கணக்காக பல்டி அடித்து வாயைப் பிளக்க வைக்கும் அற்புதமான காட்சுகள் பிடிக்கப்படுகின்றன.Stunned.... awesome.....!இன்னும் கூட பிரமிப்பு அடங்கவில்லை.நேற்று வாட்சன் அடித்த பந்தை சி எஸ்கே டீம் Dwayne Bravo காட்ச் பிடித்த காட்சி. வாட்சன் (ராஜஸ்தன் ராயல்ஸ்)ஆடிபோய்விட்டார்.நகைமுரண் என்னவென்றால் அதே மேட்சில் சாதாரண காட்ச் ஒன்றை சொதப்பி கைவிட்டார் Dwayne Bravo.

ஆண்டாள் கொண்டையுடன் அன்னக்கிளி ஹம்மிங்…..!

அன்னக்கிளி படத்திற்கு (ரிலீஸ் 14-05-1976) 39 வயது ஆகிவிட்டது.இந்தப் படத்தின் மாஸ் ஹிட்டிற்கு இன்னொரு முக்கிய காரணம் சுஜாதாவின் யதார்த்தமான பாத்திரப்படைப்பு.கொஞ்சம் உன்னிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.
”அன்னக்கிளி” படத்தின் முதல் காட்சியில் கிராமத்து பட்டிக்காட்டுப் பெண்ணான அன்னக்கிளி டெண்டு கொட்டகையில் “ஆண்டாள்” படம் பார்க்கிறாள்.காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டில் தன்னை மெய் மறக்கிறாள்.அதில் பத்மினி ஆண்டாளாக மணப்பெண் கோலத்தில் தோழியர்கள் படைசூழ தான் தினமும் பூஜிக்கும் நாராயணனை கைப்பிடிப்பதாக கனாக் கண்டதை மகிழ்ச்சிப் பொங்க பாடுகிறாள்.



”வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து .......………………………..
மைத்துனன் நம்பி மது சூதன் வந்தென்னை கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி நான்”
தன்னுடைய நீண்ட நாள் ஏக்கத்தயே கனவயே ஆண்டாளும் பிரதிபலிப்பதில் தாக்கம் உண்டாகி ரொம்ப உருகிபோகிறாள்.அவளும் ஒரு நாள் ஆண்டாள் மாதிரி தன்னுடைய காதல் கணவனை நினைத்து மெய்மறந்து கிராமத்து இயற்கை சூழ் நிலையில் எந்தவித லஜ்ஜையில்லாமல் சுதந்திர பறவையாக.....
காதலும் காமமும் ஏக்கமும் சோகமும் கலந்து வளைந்து நெளிந்துவரும் ஹம்மிங்கில் அழகாக ஆரம்பித்து…………..(பாட்டில் ஒரு வித சோகம் மைய்ய இழையாக ஓடுகிறது)
”உறங்காத……………………………..
.உறங்காத கண்களுக்கு ஓலைக்கொண்டு கையெழுதி
கலங்காம காத்திருப்பேன் கைப்பிடிக்க வருவாரோ?”
பாடுகிறாள்.தலையலங்காரம் கூட ஆண்டாள் ஸ்டைலில் இருக்கிறது.(கோயமுத்தூர் ஸ்டைல்?)

ஒரு கிராமத்துப் பெண்ணின் காதலை மிகைப்படுத்தாமல் இவ்வளவு இயல்பாக இதுவரை சொல்லவே இல்லை.இதுதான் ரசிகர்களை குறிப்பாக கிராமத்து ஜனங்களை பாதித்திருக்கிறது.அன்னக்கிளி சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.அப்போதைய வழக்கமான கிராமப் படங்களில் இருக்கும் மிகை உணர்ச்சிகள்,அபத்தக்காட்சிகள்,வசனங்கள்,பாடல்கள்,வில்லன்கள் 85% குறைவு.
பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியாக இருப்பதால் மனோரீதியாக தனக்கும் திருமணம் ஆகி காமம்*காதல் வயப்பட்டு சேர்ந்து இது மாதிரி வலி எடுத்து பிரசவிக்க வேண்டும் என்ற ஆசையின் அடைப்படையில் காதலில் கைப்பிடிக்க துடிப்பவளாக இருக்கலாம்..
சிவகுமார் –சுஜாதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அதுவும் இருவரும் மனசுக்குள் இருக்கும் காதல் ரொம்ப அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் பாத்திரம் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாக படைக்கப்பட்டிருக்கிறது.யாரிடமும் வில்லத்தனம் இல்லை

அன்னக்கிளி பாடல் பற்றி இளையராஜா பேசுகிறார்.

எல்லோருக்கும் “ அம்மாடா” பட் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் “அப்பாடா”


Wednesday, January 7, 2015

புத்தகக் கண்காட்சி-ரேடியோ-டான்ஸ்-இளையராஜா- நோ இடம்

பதிவு போட்டு நாலுமாதம் ஆகிவிட்டது.காரணம்  பேஸ்புக் கும்மிதான்.இங்கு பதிவு போடவில்லையே என்று ஒரு ஓரத்தில் ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.அதுக்கென்ன போட்டால் போச்சு என்று தினமும் சமாதானம் செய்துக்கொண்டே நாலு மாதம் ஓட்டியாச்சு.போடவிட்டால்  இன்வாலிட் ஆகிவிடுமோ என்று ஒரு பயம் வேறு.

என்ன பதிவு போடுவது.....? எல்லாம் கதம்பமான பதிவுதான்.பேஸ்புக்கில் சுடசுடபோட்டுவிடுவதால் இங்கு தோண்ட வேண்டி இருக்கிறது.

என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3

மக்குத்தனமான ரேடியோ FMகள்




இரவில் சில நாட்களில் (10pm-1am) ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு. இதில் ரெயின்போ எஃப் எம்தான் ரொம்ப பிரபலமாகாத பழைய பாடல்களை(60/70/80) ஒலிபரப்புகிறார்கள். மற்ற எஃப் எம்கள் அரைத்தமாவையே அரைக்கிறார்கள். 1970-80-90 பிரபலமாகாத பாடல்களை தேடிக் கண்டுப்பிடித்துபோட வேண்டும் என்று ஒரு துளி கூட ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.வெத்தாக ரேடியோ ஜாக்கிகள் நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்குத்தனமாக  மார்க்கெட்டிங்.

ரொம்பவும் மெனக்கட வேண்டாம்.இருக்கவே இருக்கிறது சோஷியல் மீடியா இசை ரசனை குழுமங்கள்.அதில் வலம் வந்தாலே அபூர்வ பாடல்களை தெரிந்துக்கொள்ளலாம்.பாடல் உரிமை பிரச்சனைக் கூட இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் சில பாடல்கள் டிவி மற்றும் யூ டூப்பில் ஒலி/ஓளி பரப்பப்படுகிறது.

இப்போதெல்லாம் இளம் வயதினர்தான் ரேடியோ கேட்பதால் கண்டுக்கொள்ளவில்லையோ?

கிழ் வரும் இசையமைப்பாளர்கள்  தமிழ்ப்பட உலகில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
வி.குமார்,கோவர்த்தன்,சங்கர்-கணேஷ்,ஜி.கே.வெங்கடேஷ், டி.ஆர்.பாப்பா,விஜயபாஸ்கர்,வி.தக்‌ஷிணாமூர்த்தி, ஏஏ ராஜ்,எம்.பி.சீனிவாசன் ஜி.தேவராஜன்.

நந்தா என் நிலா(வி.தக்‌ஷிணாமூர்த்தி)
என்னோடு என்னன்னவே( வி.குமார்)
வானமெனும் வீதியிலே(ஜி.தேவராஜன்)
அன்பு மேகமே(விஜயபாஸ்கர்)
கங்கை நதியோரம்(கோவர்த்தன்)
இரு மாங்கனி இதழ்(டிஆர் பாப்பா)
தொடுவதென்ன தென்றலோ (ஜி.கே.வெங்கடேஷ்)
பூவே நீ யார் சொல்லி (ஏஏ ராஜ்)
ஏரியிலே ஒரு காஷ்மீர் (எம்.பி.சீனிவாசன்)
என் கண்மணி யார்(சங்கர்-கணேஷ்)

வீட்டுக்கு வீடு,அனுபவிராஜா அனுபவி,கலாட்டா கல்யாணம்,அஞ்சல்பெட்டி520,தேன் மழை,நீலகிரி எக்ஸ்பிரஸ்,உத்தரவின்றி உள்ளே வா,பாமா விஜயம்,பெண் ஒன்று கண்டேன்,அன்னை வேளாங்கன்னி படத்தின் பாடல்களும் கேட்டதாக ஞாபகம் இல்லை.


இளையராஜாவும் ஸ்வப்னமும் பின்னே ஞானும்







இளையராஜா இசையமைத்த பக்தி பாடல்களுக்கு(சினிமா பாடல்கள் அல்ல) பிரபல நடன பெண்மணி கிருத்திகா சுப்ரமணியம்  குழுவினர் நடனம் ஆடினார்கள்.95% பாடல்கள் ஏற்கனவே மற்றவர்களால் இயற்றப்பட்டு பல வருடங்களாக இசைக்கப்பட்டு வருகிறது.பின்னணி இசை மட்டும் ராஜா.இளையராஜா ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.சினிமா ராஜாவின் 90% soulful கம்போசிஷனை எல்லாம் திரையில்  நடன வடிவில் பார்க்கும்போது ரசனையே இல்லாமல் செய்திருப்பார்கள்.இது வணிகம்.
கிருத்திகா சுப்ரமணியம்
இந்த நாட்டியம் அப்படி அல்ல.பாடல்களில் இருக்கும் ஆத்மா,பக்தி,இசையை நம் கண் முன்னே நிறுத்துவது. எப்படி? வழக்கமாக ஆடும் பரத நாட்டியம் அல்ல.இது அழகாக அழகுணர்ச்சியுடன் கண் முன்னே காட்சிகளை நிறுத்துவது. மேடை அமைப்பு,மூட் லைட்டிங்.உடைகள்,பின்னணி, முகபாவங்கள், கவித்துவமான அசைவுகள்,பக்திரசம் இத்யாதி இத்யாதி.

அற்புதமாக நிகழ்த்தினார்கள்.ஆனால் ஒன்று விளங்கவில்லை.இதில் எல்லாம் வழக்கமாக சிவனை மையப்படுத்தி  பக்தி பிரவாகமாக இருந்தது. கனவு,பரவச நிலை,மனம்,கனவில் தொடர்ந்து பயணிக்கும் நிலை என்று தொடர்பு படுத்தமுடியவில்லை. ஏன் என்றால் இந்த நடன நிகழ்ச்சியின் விளம்பரம் இப்படி கூறுகிறது.
Swappnam is a fast paced journey into the hypnotic realms of mind.A trance which will leave you refreshed.Dreams connect people, playing in slow solitude and suddenly populated by all mankind.At once wistful, aware, traces of times bygone ,a peek into the future, a mirror of the mind shattering the facade, pointing inwards to the essential.Weaving webs, clearing up the clouds, demystifying the myths of the mind, dreams are the catalyst clarifying the clouded vision of our perception.
நோ இடம் பார் புக்ஸ் - புத்தகக் கண்காட்சியும் சென்ற வருட புத்தகங்களும்



ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே சமயம் வருத்தமும் மனதில் இழையோடுகிறது.வைக்க இடம் இல்லாததுதான் பிரச்சனை.பழைய புத்தகங்களை தெரிந்தவர், நூலகம் என்று கொடுத்தாலும் அரை மனதோடுதான் கொடுக்க முடிகிறது.படித்த புத்தகம் என்றாலும் விட்டு பிரிய மனதில்லை. ஏன்?

எதோ ஞாபகத்தில் ஆர்வமாக திடீரென்று அதை எடுத்து படிக்கத்
தோணும்போது அந்தப் புத்தகம் இல்லாமல இருப்பது  மனதை பிறாண்டுகிறது. ஏண்டா கொடுத்தோம் என்று வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டு விடுகிறது.


என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3


கொடுப்பினை இல்லை



வாழ்க்கையில் எதற்கும் கொடுப்பினை வேண்டும்! எல்லாம் இருக்கு ஆனால் இருந்து என்ன பயன்..! எதையும் அனுபவிக்க முடியவில்லை..! பேரு பெத்த பேரு தாக நீள்ளூ லேது.முதல் அமைச்சர் பதவியில் இருக்கும் திரு ஓ.பன்னீர் செல்வம் நிலை அப்படித்தான்.

முதலமைச்சர் பதவி என்பது சும்மாவா? கோலோச்ச முடியவில்லை.மக்களின் முதல்வர் ஜெயலலிதாவானதால் இவர் தலைமை செயலகத்தில் மட்டும் முதல்வர்.பயந்து பயந்து முதல்வராக இருக்க வேண்டி இருக்கிறது.அடக்கியோ அடக்கி அப்படி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.கப் சிப் தான்.கொடுத்து வச்சது அவ்வளவுதான்.



ஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் குணசித்திர நடிகர்கள் கணக்காக  அட்டகாசமாக இருக்கிறார்.மேக்கப் கூட போடவேண்டும் அப்படியே வந்து நடித்தால் போதும்.

Saturday, August 30, 2014

அம்மா காதல் பாட்டு-உருகும் குழந்தை

பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரொம்ப நெகிழ்ந்துபோன பிரபலமான வீடியோ.பாப்பாவிற்கும் அம்மாவிற்குமான தொப்புள்கொடிசார்ந்த ஹைவோல்டேஜ் எமோஷனல் கொந்தளிப்பு.அம்மா பாடும்பாட்டு நம்ம ஊர் தாலாட்டுப் பாட்டா இல்லை அவர்கள் ஊர் லல்லுபையா? இரண்டுமே இல்லை.

அது கணவன் வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டு மனைவி நம்ம ஊர் சினிமா கதாநாயகிகள் கணக்காக கவித்துமாக  புலம்பும் பாடல்.அம்மாவிற்குப் பிடித்தப்பாடல்?

ஆனால் அம்மா பாடும்போது பாப்பா கட்டுக்கடங்காமல் உணர்ச்சி
வசப்படுகிறது.

அம்மா முழுவதும் பாடவில்லை.”This time I won"t lose control" வரைப் பாடிவிட்டு'”So I let you in knowing" மீண்டும் பாடுகிறார்.ஒன்றை கவனித்தீர்களா? வரிகளைப் பாடும்போது அழுவதும் நிறுத்தியவுடன் சிரிப்பதும் மீண்டும் அழுகை-சிரிப்பு-அழுகை-சிரிப்பு.ஏதோ கண்ட்ரோல் பாயிண்ட் உள்ளுணர்வில் வைத்திருக்கிறது.அம்மா பாடும்போது முகபாவத்தைப் பார்த்து பாப்பா ரியாக்‌ஷன் காட்டுகிறதா?

இதில் இன்னொரு ரசிக்கும்படியான விஷயம் அம்மா குழந்தையோடு ஆரம்பம்  மற்றும் முடிவில் உணர்ச்சிபூர்வமாக உரையாடுவது.வீடியோவின் முடிவில் ‘.ஹனி... பாடல் ரொம்ப வலிக்குதா...!அழக்கூடாது. இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்....இது ஒரு ஜஸ்ட் பாடல்தான்” ஆறுதலாக  கொஞ்சுகிறார்.பாப்பா சிரிக்கிறது.”மம்மி தாங்க்ஸ்” வேறு பாப்பா சார்பாக சொல்லிக்கொள்கிறார்.

 வயது பத்து மாதம்.பெயர்:Mary-Lynne Leroux அம்மா: Amanda

பாடல் வரிகள் கிழே.




பாடல்:

I don't want you to come 'round here no more
I beg you for mercy
You don't know how strong my weakness is
Or how much it hurts me

'Cause when you say it's over with her
I want to believe it's true
So I let you in knowing tomorrow
I'm gonna wake up missing you
Wake up missing you
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control

One look in your blue eyes and suddenly
My heart can't tell you no
I don't want you to call me up no more
Saying you need me
You're crazy if you think just half your love
Could ever please me

But still I want to hold you, touch you
When you look at me that way
There's only one solution I know of
You've got to stay away from me
Stay away from me
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell
No matter how I try to convince myself
This time I won't lose control
One look in your sad eyes and suddenly
My heart can't tell you no, my heart can't tell you no
I don't want you to come 'round here no more
I beg you for mercy

When the one you love's in love
With someone else
Don't you know it's torture
I mean it's a living hell
When the one you love's in love
With someone else

Don't you know it's torture
I mean it's a living hell, living hell
When the one you love's in love
With someone else
Oh, don't you know it's torture
I mean it's a living hell


குழந்தையின் பெற்றோர்
நம்மூர் மாதிரி இந்தக்குழந்தையின் பெற்றோர்களை ஒரு அமெரிக்கா டிவி நேர்காணல் எடுத்தது.இந்தக்குழந்தை இந்தப் பாட்டுக்குதான் அடிமையாம்.அம்மா அதே பாட்டை பாடுகிறார்.குழந்தை கொஞ்சமாக அழுகிறது.நிகழ்ச்சி நடத்துனரும் அழுகிறார்.

குழந்தை ஏன் இவ்வளவு உணர்ச்சியில் பீரிடுகிறது? அதெல்லாம் நமக்கு எதற்கு. பார்க்க நேர்காணல் வீடியோ

http://www.ellentv.com/videos/0-8slkmyjj/


ஒரிஜினல் பாட்டு:

Monday, August 11, 2014

திருட்டு தம் என்னாச்சு?

”சிகரெட் பிடி” (இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை-பனமா,Made for each other-வில்ஸ்) என்று வற்புறுத்தும் விளம்பரங்களால்/ஹீரோக்களால் எப்படி 1960/70/80 தலைமுறை இளைஞர்கள் சீரழிந்தார்களோ அதே  “சிகரெட் பிடிக்காதே” விளம்பரங்களால்/தடைகளால்/ ஹீரோக்களால்  இந்தத் தலைமுறை  இது உடல் நலத்தைக்கெடுக்கும் பழக்கம் என்று நிறையவே விழிப்புணர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஸ்டைலா பிடிக்கனும்னு கத்துக்கிட்டேன் நான்
எப்படி இருந்திருக்கிறோம்... மரமண்டைகளாக.

இதுவும் தூண்டிவிடும் விளம்பரம் பக்கத்தில் பெண் வேறு

1960/70/80 சினிமாவில் எம்ஜியார் தவிர சிவாஜி மற்றும் சிவாஜிராவ்/ரங்கராவ்,எம்ஆர்ராதா,நம்பியார்,அசோகன்,மேஜர் etc., etc., ஊதி ஊதி தள்ளுவார்கள்.இதெல்லாம் ஹாலிவுட் பட பாதிப்பு.இப்போது  ஊதுவது “ஸ்டைல்” பெண்களைக் கவர,கம்பீரம்,ஆண்மை அல்ல  என்பது உணரப்பட்டுள்ளது.இது முக்கியமானது.

(அப்போது பில்டர் சிகரெட் பிடித்தால்  ஸ்டைலோ ஸ்டைல் அண்ட் ஜென்டில்மேன். பெண்கள் டாவடிப்பார்கள்).

555 ,Malbro,Dunhill,Rothmans பாரின் பிராண்ட்  சிகரெட்டுகள் வாழ்நாளில் ஒரு முறையாவது பிடிக்க வேண்டும் அன்று அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம் அப்போது.

இழுக்க இழுக்க இன்பம்  இறுதிவரை (சுடுகாடு வரை)
”திருட்டு தம்” இந்தச் சொல் இப்போது அவ்வளவாக  புழக்கத்தில் இல்லை.குறிப்பாக நகரத்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் விலக்குகிறார்கள்.

அன்புமணி ராமதாஸை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனால்....இப்போது திரவ வடிவத்தில்....


இதற்கு ஹீரோ மட்டுமில்லாமல் காமெடியன்,காமெடியினின் நண்பன், வில்லன், கடுக்கன் போட்ட பாடகர்,ஹீரோயின்  மார்க்கெட் செய்கிறார்கள்.