பதிவு போட்டு நாலுமாதம் ஆகிவிட்டது.காரணம் பேஸ்புக் கும்மிதான்.இங்கு பதிவு போடவில்லையே என்று ஒரு ஓரத்தில் ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.அதுக்கென்ன போட்டால் போச்சு என்று தினமும் சமாதானம் செய்துக்கொண்டே நாலு மாதம் ஓட்டியாச்சு.போடவிட்டால் இன்வாலிட் ஆகிவிடுமோ என்று ஒரு பயம் வேறு.
என்ன பதிவு போடுவது.....? எல்லாம் கதம்பமான பதிவுதான்.பேஸ்புக்கில் சுடசுடபோட்டுவிடுவதால் இங்கு தோண்ட வேண்டி இருக்கிறது.
என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3
மக்குத்தனமான ரேடியோ FMகள்
இரவில் சில நாட்களில் (10pm-1am) ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு. இதில் ரெயின்போ எஃப் எம்தான் ரொம்ப பிரபலமாகாத பழைய பாடல்களை(60/70/80) ஒலிபரப்புகிறார்கள். மற்ற எஃப் எம்கள் அரைத்தமாவையே அரைக்கிறார்கள். 1970-80-90 பிரபலமாகாத பாடல்களை தேடிக் கண்டுப்பிடித்துபோட வேண்டும் என்று ஒரு துளி கூட ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.வெத்தாக ரேடியோ ஜாக்கிகள் நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்குத்தனமாக மார்க்கெட்டிங்.
ரொம்பவும் மெனக்கட வேண்டாம்.இருக்கவே இருக்கிறது சோஷியல் மீடியா இசை ரசனை குழுமங்கள்.அதில் வலம் வந்தாலே அபூர்வ பாடல்களை தெரிந்துக்கொள்ளலாம்.பாடல் உரிமை பிரச்சனைக் கூட இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் சில பாடல்கள் டிவி மற்றும் யூ டூப்பில் ஒலி/ஓளி பரப்பப்படுகிறது.
இப்போதெல்லாம் இளம் வயதினர்தான் ரேடியோ கேட்பதால் கண்டுக்கொள்ளவில்லையோ?
கிழ் வரும் இசையமைப்பாளர்கள் தமிழ்ப்பட உலகில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
வி.குமார்,கோவர்த்தன்,சங்கர்-கணேஷ்,ஜி.கே.வெங்கடேஷ், டி.ஆர்.பாப்பா,விஜயபாஸ்கர்,வி.தக்ஷிணாமூர்த்தி, ஏஏ ராஜ்,எம்.பி.சீனிவாசன் ஜி.தேவராஜன்.
நந்தா என் நிலா(வி.தக்ஷிணாமூர்த்தி)
என்னோடு என்னன்னவே( வி.குமார்)
வானமெனும் வீதியிலே(ஜி.தேவராஜன்)
அன்பு மேகமே(விஜயபாஸ்கர்)
கங்கை நதியோரம்(கோவர்த்தன்)
இரு மாங்கனி இதழ்(டிஆர் பாப்பா)
தொடுவதென்ன தென்றலோ (ஜி.கே.வெங்கடேஷ்)
பூவே நீ யார் சொல்லி (ஏஏ ராஜ்)
ஏரியிலே ஒரு காஷ்மீர் (எம்.பி.சீனிவாசன்)
என் கண்மணி யார்(சங்கர்-கணேஷ்)
வீட்டுக்கு வீடு,அனுபவிராஜா அனுபவி,கலாட்டா கல்யாணம்,அஞ்சல்பெட்டி520,தேன் மழை,நீலகிரி எக்ஸ்பிரஸ்,உத்தரவின்றி உள்ளே வா,பாமா விஜயம்,பெண் ஒன்று கண்டேன்,அன்னை வேளாங்கன்னி படத்தின் பாடல்களும் கேட்டதாக ஞாபகம் இல்லை.
இளையராஜாவும் ஸ்வப்னமும் பின்னே ஞானும்
ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே சமயம் வருத்தமும் மனதில் இழையோடுகிறது.வைக்க இடம் இல்லாததுதான் பிரச்சனை.பழைய புத்தகங்களை தெரிந்தவர், நூலகம் என்று கொடுத்தாலும் அரை மனதோடுதான் கொடுக்க முடிகிறது.படித்த புத்தகம் என்றாலும் விட்டு பிரிய மனதில்லை. ஏன்?
எதோ ஞாபகத்தில் ஆர்வமாக திடீரென்று அதை எடுத்து படிக்கத்
தோணும்போது அந்தப் புத்தகம் இல்லாமல இருப்பது மனதை பிறாண்டுகிறது. ஏண்டா கொடுத்தோம் என்று வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டு விடுகிறது.

கொடுப்பினை இல்லை
வாழ்க்கையில் எதற்கும் கொடுப்பினை வேண்டும்! எல்லாம் இருக்கு ஆனால் இருந்து என்ன பயன்..! எதையும் அனுபவிக்க முடியவில்லை..! பேரு பெத்த பேரு தாக நீள்ளூ லேது.முதல் அமைச்சர் பதவியில் இருக்கும் திரு ஓ.பன்னீர் செல்வம் நிலை அப்படித்தான்.
முதலமைச்சர் பதவி என்பது சும்மாவா? கோலோச்ச முடியவில்லை.மக்களின் முதல்வர் ஜெயலலிதாவானதால் இவர் தலைமை செயலகத்தில் மட்டும் முதல்வர்.பயந்து பயந்து முதல்வராக இருக்க வேண்டி இருக்கிறது.அடக்கியோ அடக்கி அப்படி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.கப் சிப் தான்.கொடுத்து வச்சது அவ்வளவுதான்.
ஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் குணசித்திர நடிகர்கள் கணக்காக அட்டகாசமாக இருக்கிறார்.மேக்கப் கூட போடவேண்டும் அப்படியே வந்து நடித்தால் போதும்.
என்ன பதிவு போடுவது.....? எல்லாம் கதம்பமான பதிவுதான்.பேஸ்புக்கில் சுடசுடபோட்டுவிடுவதால் இங்கு தோண்ட வேண்டி இருக்கிறது.
என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3
மக்குத்தனமான ரேடியோ FMகள்
இரவில் சில நாட்களில் (10pm-1am) ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு. இதில் ரெயின்போ எஃப் எம்தான் ரொம்ப பிரபலமாகாத பழைய பாடல்களை(60/70/80) ஒலிபரப்புகிறார்கள். மற்ற எஃப் எம்கள் அரைத்தமாவையே அரைக்கிறார்கள். 1970-80-90 பிரபலமாகாத பாடல்களை தேடிக் கண்டுப்பிடித்துபோட வேண்டும் என்று ஒரு துளி கூட ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.வெத்தாக ரேடியோ ஜாக்கிகள் நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்குத்தனமாக மார்க்கெட்டிங்.
ரொம்பவும் மெனக்கட வேண்டாம்.இருக்கவே இருக்கிறது சோஷியல் மீடியா இசை ரசனை குழுமங்கள்.அதில் வலம் வந்தாலே அபூர்வ பாடல்களை தெரிந்துக்கொள்ளலாம்.பாடல் உரிமை பிரச்சனைக் கூட இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் சில பாடல்கள் டிவி மற்றும் யூ டூப்பில் ஒலி/ஓளி பரப்பப்படுகிறது.
இப்போதெல்லாம் இளம் வயதினர்தான் ரேடியோ கேட்பதால் கண்டுக்கொள்ளவில்லையோ?
கிழ் வரும் இசையமைப்பாளர்கள் தமிழ்ப்பட உலகில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
வி.குமார்,கோவர்த்தன்,சங்கர்-கணேஷ்,ஜி.கே.வெங்கடேஷ், டி.ஆர்.பாப்பா,விஜயபாஸ்கர்,வி.தக்ஷிணாமூர்த்தி, ஏஏ ராஜ்,எம்.பி.சீனிவாசன் ஜி.தேவராஜன்.
நந்தா என் நிலா(வி.தக்ஷிணாமூர்த்தி)
என்னோடு என்னன்னவே( வி.குமார்)
வானமெனும் வீதியிலே(ஜி.தேவராஜன்)
அன்பு மேகமே(விஜயபாஸ்கர்)
கங்கை நதியோரம்(கோவர்த்தன்)
இரு மாங்கனி இதழ்(டிஆர் பாப்பா)
தொடுவதென்ன தென்றலோ (ஜி.கே.வெங்கடேஷ்)
பூவே நீ யார் சொல்லி (ஏஏ ராஜ்)
ஏரியிலே ஒரு காஷ்மீர் (எம்.பி.சீனிவாசன்)
என் கண்மணி யார்(சங்கர்-கணேஷ்)
வீட்டுக்கு வீடு,அனுபவிராஜா அனுபவி,கலாட்டா கல்யாணம்,அஞ்சல்பெட்டி520,தேன் மழை,நீலகிரி எக்ஸ்பிரஸ்,உத்தரவின்றி உள்ளே வா,பாமா விஜயம்,பெண் ஒன்று கண்டேன்,அன்னை வேளாங்கன்னி படத்தின் பாடல்களும் கேட்டதாக ஞாபகம் இல்லை.
இளையராஜாவும் ஸ்வப்னமும் பின்னே ஞானும்
இளையராஜா இசையமைத்த பக்தி பாடல்களுக்கு(சினிமா பாடல்கள் அல்ல) பிரபல நடன பெண்மணி கிருத்திகா சுப்ரமணியம் குழுவினர் நடனம் ஆடினார்கள்.95% பாடல்கள் ஏற்கனவே மற்றவர்களால் இயற்றப்பட்டு பல வருடங்களாக இசைக்கப்பட்டு வருகிறது.பின்னணி இசை மட்டும் ராஜா.இளையராஜா ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.சினிமா ராஜாவின் 90% soulful கம்போசிஷனை எல்லாம் திரையில் நடன வடிவில் பார்க்கும்போது ரசனையே இல்லாமல் செய்திருப்பார்கள்.இது வணிகம்.
கிருத்திகா சுப்ரமணியம் |
இந்த நாட்டியம் அப்படி அல்ல.பாடல்களில் இருக்கும் ஆத்மா,பக்தி,இசையை நம் கண் முன்னே நிறுத்துவது. எப்படி? வழக்கமாக ஆடும் பரத நாட்டியம் அல்ல.இது அழகாக அழகுணர்ச்சியுடன் கண் முன்னே காட்சிகளை நிறுத்துவது. மேடை அமைப்பு,மூட் லைட்டிங்.உடைகள்,பின்னணி,
முகபாவங்கள், கவித்துவமான அசைவுகள்,பக்திரசம் இத்யாதி இத்யாதி.
அற்புதமாக நிகழ்த்தினார்கள்.ஆனால் ஒன்று விளங்கவில்லை.இதில் எல்லாம் வழக்கமாக சிவனை மையப்படுத்தி பக்தி பிரவாகமாக இருந்தது. கனவு,பரவச நிலை,மனம்,கனவில் தொடர்ந்து பயணிக்கும் நிலை என்று தொடர்பு படுத்தமுடியவில்லை. ஏன் என்றால் இந்த நடன நிகழ்ச்சியின் விளம்பரம் இப்படி கூறுகிறது.
Swappnam is a fast paced journey into the hypnotic realms of mind.A trance which will leave you refreshed.Dreams connect
people, playing in slow solitude and suddenly populated by all mankind.At once wistful, aware, traces of times bygone
,a peek into the future, a mirror of the mind shattering the facade, pointing
inwards to the essential.Weaving webs, clearing up the clouds,
demystifying the myths of the mind, dreams are the catalyst clarifying the
clouded vision of our perception.
நோ இடம் பார் புக்ஸ் - புத்தகக் கண்காட்சியும் சென்ற வருட புத்தகங்களும்
ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே சமயம் வருத்தமும் மனதில் இழையோடுகிறது.வைக்க இடம் இல்லாததுதான் பிரச்சனை.பழைய புத்தகங்களை தெரிந்தவர், நூலகம் என்று கொடுத்தாலும் அரை மனதோடுதான் கொடுக்க முடிகிறது.படித்த புத்தகம் என்றாலும் விட்டு பிரிய மனதில்லை. ஏன்?
எதோ ஞாபகத்தில் ஆர்வமாக திடீரென்று அதை எடுத்து படிக்கத்
தோணும்போது அந்தப் புத்தகம் இல்லாமல இருப்பது மனதை பிறாண்டுகிறது. ஏண்டா கொடுத்தோம் என்று வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டு விடுகிறது.
என்னுடைய பேஸ் புக் முகவரி
https://www.facebook.com/ravishankar.krishnamurthy.3
கொடுப்பினை இல்லை
முதலமைச்சர் பதவி என்பது சும்மாவா? கோலோச்ச முடியவில்லை.மக்களின் முதல்வர் ஜெயலலிதாவானதால் இவர் தலைமை செயலகத்தில் மட்டும் முதல்வர்.பயந்து பயந்து முதல்வராக இருக்க வேண்டி இருக்கிறது.அடக்கியோ அடக்கி அப்படி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.கப் சிப் தான்.கொடுத்து வச்சது அவ்வளவுதான்.
ஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் குணசித்திர நடிகர்கள் கணக்காக அட்டகாசமாக இருக்கிறார்.மேக்கப் கூட போடவேண்டும் அப்படியே வந்து நடித்தால் போதும்.
நன்றி மனோ சாமிநாதன்
ReplyDeleteஎல்லோருக்கும் நன்றி
ReplyDeletearumai
ReplyDeletehi Sir.
ReplyDelete