இசைஞானி இளையராஜா,இந்த ஒண்ணரை அல்லது ரெண்டு அடி புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் காற்றுத்துளைகளின் வழியாக மயக்கும் இசைத் துளிகளை தன் பாடல்களில் விதவிதமாக வழிய விடுகிறார் .
மேஸ்ட்ரோவின் இசையில் எப்போதுமே “classical touch" & "classic" இருக்கும்.No artificial flavour.No additives,No preservatives.
மேஸ்ட்ரோ தவிர மற்றவர் 95% பாடல்களில் புல்லாங்குழல் நேரடியாக வாசிக்கப்பட்டு பாடல் அமைந்திருக்கும்.அதாவது மேஸ்ட்ரோ மாதிரி பாடல்களின் குறுக்கும் நெடுக்குமாக புல்லாங்குழல் இசைக்கப்பட்டு ஒப்பனைச் செய்யப்பட்டிருக்காது.
சின்ன கண்ணன் அழைக்கிறான் -1977 - கவிக்குயில்
ஆரம்பத்தில் ரீதகெளள ராக நாதம் இனிமை.இதில் நேரடியாக பாடல் முழுவதும் வாசிக்கப்பட்டிருக்கும்.அதிக ஒப்பனைகள் கிடையாது.ஆனால் நாதங்கள் இனிமை.
பொன்மானே கோபம் - 1985 -ஒரு கைதியின் டைரி
”சின்னகண்ணன்” புல்லாங்குழல் இதில் பார்ட்டைம் தான். ”பொன்மானே””கோபம்” “ஏனோ” என்ற வரிகளுக்கு சுட்டித்தனமாக ரெஸ்பான்ஸ் அளித்துவிட்டு மறையும்.உமா ரமணன் கடைசிப் பல்லவியில் இதன் வேலையைப் பறித்துக்கொள்கிறார்.(பொன்மானே!கோபம் எங்கே?)
ராஜாபார்வை வயலின் BGM - 1981
காதல் மயக்கம் - 1984 - புதுமைப் பெண்
மிகவும் காதல்படுத்தப்பட்ட பாட்டு.இதில் 4.14 - 4.25 புல்லாங்குழல் கானத்தில் கண்ணாமூச்சி விளையாடும்.
தாலாட்டும் பூங்காற்று -1991 - கோபுரவாசலிலே
மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ் புல்லாங்குழல் புல்லரிப்புகள்.

ஜானகியின் ஹம்மிங் முடிந்து ஜிகு ஜிகு புல்லாங்குழலின் குஷிதான்.
ஹெட் போனில் கேட்கவேண்டும்.”நள்ளிரவில் நான் கண் விழிக்க” இடது காதில் மென்மையான வருடல். “உன் நினைவில் மெய் சிலிர்க்க” வலது காதில் மென்மையான வருடல். வலது இடது புல்லாங்குழலின் ஸ்வரம் மாறும்.இது மாதிரி இரண்டு தடவை.
“எப்பொழுதும் சொப்பனங்கள்” இப்போது முதல் வருடல் வலது.”எப்போழுதும் உன் கற்பனைகள்”பிறகு இடது.
3.00 -3.20 மென்மையான புல்லாங்குழல் உரையாடல்.ஜானகி அட்டகாசம்.
ஆனந்த ராகம் -1981 - பன்னீர் புஷ்பங்கள்
இந்தப் பாட்டைத் தொட்டால் சில இடங்கள் சுடும்.
ஆரம்ப உக்கிரமான western classical வயலின் /செல்லோ தீற்றல்களுக்கு நடுவே நம்ம ஊர் Indian Classical சிம்மேந்திர மத்யமம் ராக ”கலங்கும்” புல்லாங்குழல் அருமை.அட்டகாசமான வெஸ்டர்ன்+இண்டியன் Fusion."ஆயிரம் ....” “ஆசைகள்” இந்த வரிகளுக்கு ரெஸ்பான்ஸாக கிணற்றுக்குரலில் வித்தியாசமான புல்லாங்குழல்ஆச்சர்யம். பாட்டின் முடிவிலும் கொசுறாக சூப்பர்.
குறுக்கும் நெடுக்கும் போகும் western classical வயலின் சிக்கலுக்கிடையே நம்ம ஊர் இந்திய ஷெனாயின் கதறலைக் கேளுங்கள்.அம்மாடியோவ்!
Maestro went full blast! Hats off Maestro!
”தாலாட்டும் பூங்காற்று”ம் சிம்மேந்திர மத்யமம். அது மென்மை.இது முரடு.எப்படி ராஜா? அதான் ராஜா.
தென்றல் காற்றே - 1991 - ஈரமான ரோஜாவே
புல்லாங்குழலில் மதுர கானம்தான். சோகம்(ஏக்கம்?) கானம் இசைக்குமா? இதில் சோக கானம் 01.19 -01.30 முக்கியமாக 03.28 -03.30 மற்றொரு வாத்தியங்களுடன் சேர்ந்து சோகம் பாடிவிட்டு மீண்டும் தனியாக 03.31-03.33 சோகம்.
வா வா அன்பே
அதே படத்தில் இன்னோரு பாடல்.அதே மெட்டு.ஆனால் புல்லாங்குழல் முதலில் கொஞ்சம் சோகம் ஆனால் 01.25-1.52 வரை துடிப்புடன் நிரம்பி வழியும்.வயலினுடன் உரையாடிக்கொண்டே வரும்.
மதுர மரிக்கொழுந்து - 1987 -எங்க ஊரு பாட்டுக்காரன்
”பச்சரிசி மாவு இடிச்சு..சக்கரையில் பாவு(கு) வச்சு...சுக்கிடிச்சு.மிளகிடிச்சு..
..................அம்மனவ எங்களயும் காக்க வேணும்.....0.27-0.41 மதுர மரிக்கொழுந்து வாசம் வீசும் புல்லாங்குழல் தெய்வீக கானம்.கிராமிய மணம் கமிழும்.Stunning Maestro!
"தல..!சின்ன ஹார்மோனியத்துல மெட்டுப்புடிக்கிறீங்க.ஆனா அத அழகுப்படுத்த எத்தன விதமான இசைக்கருவிகள்...!
பூங்கதவே தாழ் - 1980 -நிழல்கள்
வீணையுடன் புல்லாங்குழல் காதல் 0.33-0.42 அருமை.டால்பின் போல் துள்ளும் துடிப்பான வாசிப்பு 1.44-1.49.புத்திசாலித்தனமான அதே சமயத்தில் பாட்டோடு ஒட்டி வரும் கானம்.
கண்ணா வருவாயா... - 1987 -மனதில் உறுதி வேண்டும்
மீரா-கண்ணன் சம்பந்தப்பட்ட பாட்டு. 5.31 நிமிட பாட்டில் 1.50-1.57 புல்லாங்குழல் கண்ணில்(காதில்?) காட்டுவார்.5.04-5.05 மருந்துக்கு சிணுங்கிவிட்டுப் போகும். மேஸ்ட்ரோ இது நியாமா? ”சின்ன கண்ணன் அழைக்கிறான” பாட்டுக்கு எல்லாம் வாசிச்சாச்சுப் போல..!
சிறு பொன்மணி அசையும் - 1980 -கல்லுக்குள் ஈரம்
பாரதிராஜாவுக்குன்னு தனி உழைப்பு உண்டு.இந்தப்பாட்டில் 0.15 - 0.24ல் நேரடியாக வரும் கிராமிய புல்லாங்குழல் கானம் 0.25-0.28 ல் வயலினுடன் எப்படி கொஞ்சுகிறது பாருங்கள். தல..! பின்னிட்டீங்க!
பின்னால் வரும் அலைபுரண்டு வரும் கானமும் அருமை.
சின்ன சின்ன - 1986 -மெளனராகம்
0.27-0.39 ,1.04-1.10ட் ஆணி அடிக்கிற மாதிரி புல்லாங்குழல் கானத்தை ஊதி ஊதி அடித்துக்கொண்டே வருவார்.அட்டகாசம்.வித்தியாசமான கானம்
இன்னும் நிறைய இருக்கு.பின்னால் பார்க்கலாம்.
படிக்க:
இளையராஜா The King of Beats
இளையராஜாவின் -நாத உரையாடல்கள்

மெய்சிலிர்க்கும் ஆரம்பம். 0.57ல் வயலினோடு தபலா அழகாக சேர்ந்துக்கொள்ளும்.1.09ல் ஒரு புல்லாங்குழல் மொட்டவிழ்ந்து மலரும்.1.16ல் இன்னொரு புல்லாங்குழல் மலரும்.மெய்சிலிர்க்கும்.