Thursday, October 29, 2015

கவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்














கவிதை

பெய்த மழையை

தலையில் வாங்கிய
மரங்களும் செடிகளும்
இன்னும் அழகாக
மழையைப்
பெய்துக்கொண்டிருக்கின்றன
______________________________________

சமீபத்தில் ஒரு உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர் வீட்டில் தங்க நேர்ந்துவிட்டது.எனக்கு படுக்க ஒரு இடம் கொடுத்து என்னைப் படுக்கச் சொன்னார்.அவர் எங்கே படுப்பார் என்று யோசித்தேன். ஏன் என்றால அவர் படுக்கும் கட்டிலில் வேறு ஒரு தூரத்து உறவினர் பகிர்ந்துக்கொண்டுப் படுக்க வேண்டும்.

நாலடி கட்டிலில் இரண்டு பேர் விஸ்தாரமாக தூங்க முடியாது.” தூங்க முடியும்.சித்தப்பா (உறவினர்) படுக்கும் ஸ்டைலை  அவரு தூங்கின பிறகு பாருங்க காட்றேன்”.சித்தப்பா சீக்கிரமே படுக்கும் பழக்கம் உள்ளவர். நாங்கள் பேசிவிட்டு தூங்கும் நேரம் வந்தது. அவர் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றர்.குறட்டைச் சத்தம்.

சித்தப்பா தூங்கும் போஸைப் பார்த்து திடுக்கிட்டேன். எந்த சமயத்திலும் கிழே விழுந்துவிடுவார் போல் இருந்தது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கட்டிலின் விளிம்பின் நேர்கோடாக ஒருக்களித்துவாறு சுவற்றை பார்த்தவாறு.ஆனால் அவரின் இடது காலின் பாதம் தரையை தொட்டவாறு.அவர் நாலடிக் கட்டிலில் யில் முக்கால் அடிதான் ஆக்ரமித்திருந்தார்.

“உங்களுக்காக இப்படி படுத்திருக்காரா?”

“ நோ... நோ.. இவரோட ஸ்டைலே இப்படித்தான். இப்படி படுத்தால்தான் இவருக்கு தூக்கம் வரும்.30 வருட பழக்கம்.கிழே எல்லாம் விழ மாட்டார். இடது காலுக்கு  ஏதாவது பிரச்சனை வரும் என்று   டாக்டரிடம் காட்டினால் டாக்டர் நார்மல் என்று சொல்லிவிட்டராம்”

அடுத்து சொன்னதுதான் டாப்.

ஏதோ ஒரு வயதில் ஒரு வெயில் காலத்தில் படுக்கையின் சூடு தாங்காமல் ஒருகளித்துப் படுத்து  இடது காலை மொசைக் தரையின் குளிர்ச்சிக்காக வைத்து  அதில் சுகம்(?) கண்டு அதற்கு அடிமை ஆகி விட்டராம்.மாற்றவே முடியவில்லையாம்.


தூக்கம் மனிதனுக்கு அவசியம் எப்படி தூங்கினால் என்ன?படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்குபவன் கொடுத்து வைத்தவன்.

__________________________________

இளையராஜா காதல் உணர்ச்சிகளை எப்படி வாரியிறைக்கிறார்.எவ்வளவு மெட்டுக்கள். காட்சியை முடிக்கும் போது வரும் இசை அருமை. மெஜெஸ்டிக் அண்ட் ஸ்டைல்.




________________________________

எந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அதில் லயித்து (பிடித்து) செய்யவும்.இது ஒரு பொன்மொழி.ஜென்  தத்துவம் ஒரு படி மேலே போய் அதுவாகவே இரு என்கிறது.

விஜய சூப்பர் சிங்கரில்  தோல்வியோடு வெளியேறும் சில பேருக்கு பல காரணங்கள் இருக்கலாம்.வெளியேறிய இரண்டு மூன்று பேர்கள் மேலே சொன்னதை செய்யவில்லை.




1 comment:

  1. ராஜா இசை ஒரு தவச்சாலை இங்கே பலருக்கு புரியாத புதிர்!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!