Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -விமர்சனம்

த்ரில்லர் கதை ஒரு மதத்தின் தத்துவார்த்தங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.”தத்துவார்த்தங்களோடு” படத்தில் வரும் சில குறியீடுகளும் பெயர்களும் ராஜாவின் பின்னணித் தொகுப்பு ஆல்பத்தில் வரும் இசையின் பெயர்களும் படத்தின் டைட்டிலும் இப்படி நம்ப வைக்கின்றன.கடைசி முடிச்சு அவிழ்க்கும்போது அவரின் மீட்சி அல்லது விமோசனம் அல்லது /வருத்தப்பட்டு பாரம் சுமப்பது வெளிப்படுகிறது.

ரொம்ப பொறுத்திப்பார்த்தால் குழப்பம்தான் வருகிறது.

சமீபத்தில் Life of Pi  படம் கூட ஆன்மிகத் தத்துவ பின்னணியோடு வந்தது.கமல் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்று அசட்டுத்தனமாக பாடியபடி ஒரு பாசாங்கு படம் வந்தது.மற்றும் நான் கடவுள், குணா.


மிஷ்கின் சினிமாவின் மொழி தனி.சராசரி படங்கள்போல் உள் வாங்க முடியாது.கதையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் சடாரென்று யதார்தத்திலிருந்து விலகி நிற்பார்கள்.நாமும் விலகி நிற்போம் மீண்டும் சேருவோம்.டிராமா போல் இருக்கும்.அந்தக் கால அடையார் பிலிம் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் த்ரில்லர் படங்களில் இப்படி வேண்டாத டிராமாக்கள் இருக்கும்.இப்படிப்பட்ட டெம்பிளேட்டுகளும் இதில் உண்டு.


படத்திற்கு வருவோம். கதை இரண்டு நாள் இரவில் நடக்கிறது (ஓடுகிறது).இரவு மிஷ்கினுக்குப் பிடித்த கேரக்டர்.அதுவும் மஞ்சள் இரவு.

இரவு.ரோடில் குண்டடிப்பட்டு ஒருவன் விழுந்துக்கிடக்கிறான்.அவன் பெயர் Wolf என்கிற எட்வேர்ட்.அவனை மருத்துவம் படிக்கும் சந்துரு (என்கிற ஆட்டுக்குட்டி?)  சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..! யாரைக் காப்பாற்ற?

அதே சமயத்தில் அவனை வேட்டையாட வேறொரு மிருக  கும்பல் அதே மயிலாப்பூர் மஞ்சள் இரவில் mindless ஆக மண்டையைப்பிய்த்துக்கொண்டு துரத்துகிறது.துரத்தலின் இடையே நிறைய பேர் சாகிறார்கள்.அடிபடுகிறார்கள்.

இதற்கிடையே சந்துருவும் தப்பிக்கிறான்.ஆனால் இப்போது அவன் ஆட்டுக்குட்டியாக  Wolfஐ வேட்டையாட துரத்துகிறான்.

போலீஸ்+Wolf+சந்துரு+கும்பல்.பிரேமுக்கு பிரேம் இப்படி துரத்தல் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.கடைசியில் துரத்தல் நிற்கிறது. முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.படம் நிற்கிறது.காட்டுவாழ்கை உருவகமாக கடைசியில் சொல்லப்படுகிறது.பார்வையாளர்களுக்கு குறியீடு வைத்து க்விஸ் வைக்காமல் கோனார் நோட்ஸ் போட்டு அவரே முடிச்சை அவிழ்க்கிறார்.
Threshold Guardian

அவிழ்க்கும் முடிச்சு யூகிக்கமுடியாதப்படி இருப்பது மிஷ்கினின் திரைக்கதை அமைப்பு.
 
படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தெருவில் துரத்தும் காட்சிகள்.இரவு ,சுடுகாடு, வெறிச்சோடிய ஸ்டேஷன்,தெருக்கள் படத்திற்கு ஆழம் சேர்கிறது. திகில் கூடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹோம்வொர்க் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Grim Reaper-(சாவின் உருவகம்)
 ஸ்ரீ, மிஷ்கின் அசத்துகிறார்கள்.ஷாஜியும் நன்றாக நடித்திருக்கிறார்.கேமரா பாலாஜி ரங்கா இரவை நம் முன் நிறுத்துகிறார்.

எல்லாம் ஓகே.ஏதோ மிஸ்ஸிங் என்கிற பீலிங் வருகிறது.கடைசியில் அவிழ்க்கப்படும் முடிச்சை நோக்கித்தான் கதை துரத்தப்படுகிறது.படத்தின் நாயகன் அதற்காகத்தான் பாரங்களை சுமந்தப்படி மீட்சிக்காக ஓடுகிறான். பார்வையாளர்களும் அதே அனுதாபத்தோடு ஓட வேண்டாமா?அதன் பிளாஷ்பாக் காட்டினால சாதாரண மசாலா படம் ஆகிவிடும் அல்லது துரத்தலில் விறுவிறுப்பு இருக்காது என்றுதான தவிர்த்திருக்கிறார்களோ?

ஆனால் படத்தின் பின்னணி இசை   Wolfக்குள் இருக்கும்  விமோசனத் தேடலை ஆழமாக வெளிக்கொணர்கிறது.

வீணப்போன கருப்பு மெண்டல் காமெடிப்படங்களுக்கு இந்தப்படம் 1000 மடங்கு மேல்.

இளையராஜா
இந்தத் த்ரில்லர் கதைக்கு இவரை விட்டால் இந்தியாவில் யாரும் கிடையாது. காரணம் தத்துவார்த்த(??) பின்னணியோடு கதை ஓடுகிறது.இவருக்கு இந்தத் தத்துவார்த்தம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. காரணம் அவர் இசையில் வழக்கமாகவே இருக்கும் ஆத்மா(soul).மற்றும் இதில் வேறு ஒரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.


அது இதில் இசைக்கப்படும் இசையின் இழைகள்.இதுவரை இசைக்கப்படவில்லை.வழக்கமான தமிழ்ப்பட உணர்ச்சிகள் இல்லை.இல்லாமல் இன்னும் ஆழமாக போகிறது.பழக்கப்பட்டுப்போன ஜானகியோ எஸ்பிபியோ ஷ்ரேயாலோ கார்த்திக்கோ ராஜாவோ இல்லாமல் கருவிகள் நம்மை சிலிர்க்க வைப்பது புதுமைதான்.அதற்காக அன்னியமாகவில்லை. இன்னும் ஆழமாக்குகிறது.குறிப்பாக Walking through life and death இசை படத்தின் ஆன்மாவை  துளைக்கிறது..

திகிலுக்கும் பரபரப்புக்கும் தத்துவார்த்திற்கும் இடையே சர்வ சாதாரணமாக எதையும் கலைக்காமல் மாறி மாறி இசைக்கிறார்.தனி genre ஆகவே இருக்கிறது.

எவ்வளவோ படத்தின் இறுதிக் காட்சிகள் கட்டடத்தின் பேஸ்மெண்டில் தீவிரமாக இயங்கும்.ஹாலிவுட் படங்களும் இதில் அடங்கும். இதில் வரும் பேஸ்மெண்ட் காட்சியில்  ராஜா புகுந்து விளையாடியிருக்கிறார்.

இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.



7 comments:

  1. //இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.// நச்சுனு ஒரு வார்த்தை ...!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்.ராஜாவுக்கும் மிஷ்கின்க்கும் hats off...........
    ராஜாவின் இசை மிகவும் நேர்மையாக பயன்படுத்தி இருப்பது அருமை அவரின் இசை அற்புதங்கள் அறிந்த கொள்ள இது போன்ற நல்ல படைப்புகள் உருவாக வேண்டும் .

    ReplyDelete
  4. இளையராஜா இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.

    அருமை!

    ReplyDelete
  5. மிகவும் அருமையான விமர்சனம் ரவி சார்

    ReplyDelete
  6. http://www.pichaikaaran.com/2013/10/blog-post.html?spref=fb naanga etha namburathu..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!