இளையராஜாவின் இசையில் மற்றொரு முக்கியமான அங்கம் பாடல்களின் இடையே (filler) இசைக்கப்படும் குரல்கள்.
இவை வித்தியாசமான இரட்டைக் கிளவி அல்லது அடுக்குத் தொடர், அர்த்தம் பொருந்திய/பொருந்தாத ஜதிகள் அல்லது சொற்கள் அல்லது/வார்த்தைகள் என்று சொல்லலாம். இவை பற்றிப் பார்ப்போம் இப்பதிவில்.
இம்மாதிரியான குரலிசைகள் ஜாலி,குழந்தைகள் குஷி,கடல்/ஆறு,கிராமம்,நடனம்,ஆதிவாசி,கோரஸ் சம்பந்தப்பட்டுப் பெரும்பாலும் இசைக்கப்படுகிறது.
(சிக்குமங்கு சிக்குமங்கு செக்கபப்பா... நாங்களும் இது மாதிரி சவுண்ட் விட்டோம் அந்தக் காலத்துல)
இது ஹம்மிங்கிலிருந்து வேறுபடுகிறது.
நாம் நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகளைக் கொஞ்சும்போது செல்லமாக அர்த்தமில்லாத வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சுவோம்.குழந்தை சொற்களின்
/வார்த்தைகளின் ஓசையின் அங்கதத்தைக் கேட்டுச் சிரிக்கும்.
மேஸ்ட்ரோ இம்மாதிரி குரல்களைப் பாட்டின் இடையே தொடுத்து அழகுப்படுத்துகிறார்.இதையும் ஒரு கலையம்சத்தோடுச் செய்கிறார்.களிமண் அடைப்பதுபோல் அடைப்பதில்லை.அதற்கும் ஒரு பரிமாணம் கொடுக்கிறார்.
முக்கியமாக ஸ்டைல் இருக்கிறது. ஆத்மா இருக்கிறது.
பாடலின் சூழ்நிலையைப் பொருத்து குரல்கள் அமைக்கப்படுகிறது.
நான்கு பாடல்களில் கடல் மற்றும் ஆறு சம்பந்தப்பட்ட காட்சி வருகிறது.அதற்கு நான்கு விதமான துடுப்புப் போடும் குரல்கள்.
1.காவிரியே கலைக்குயிலே 2.தாலாட்டுதே வானம்
3.கடலோரம் கடலோரம் 4.வெற்றி வெற்றி
வழக்கமான ”ஏலேலோ அய்லசா...ஏலேலோ அய்லசா”வை கொடுக்கவில்லை மேஸ்ட்ரோ.மாத்தி யோசி!
பருவ காலங்களின் கனவு-மூடுபனி-1980
”தகதகதாங்கு தகதக தாங்கு”(இரட்டைக் கிளவி?)ஜானகி சூப்பர். 0.10 கிடார் ஒரு அப்பு அப்பிவிட்டு ஷணத்தில் மறைகிறது.
Voice Moodupani-Paruva.mp3
சோளம் வெதக்கையிலே - 16 வயதினிலே-1978
VoiceSolamvedhakkaiyile.mp3
காவிரியே கவிக்குயிலே - அடுத்தவாரிசு-1983
கப்பல் டூயட்.இதில் வரும் குரல் வித்தியாசமானது. அட்டகாசம்.
VoiceAduthavaarisu-Kaveriye.mp3
ஜின்ஞ்னாக்டி ஜிங்கலங்கடி -வண்ண வண்ண பூக்கள்-1992
VoiceVannaVannaPangunikapuram.mp3
மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984
(நதியா-மோகன் நடித்த படம் அல்ல.இதே பெயரில் வேறு படம் (பிரபு-சுலக்ஷணா)பூஜைப்போடப்பட்டு நின்ற படம்)
VoiceUyireUnakkagaMaargazhiPaarvai.mp3
வானெங்கும் தங்க விண்மீன்கள்-மூன்றாம் பிறை-1982
இந்த “தத்துத்துத்துத்” படத்துல ஒரு
திருப்புமுனை. இவர்தான் “தத்துத்துத்” சொல்ல ஆரம்பிச்சு பின்னால் காரில் வரும் ஸ்ரீதேவி குஷியாகி திரும்பிப்பார்த்து லாரி மோதி......கடைசில கமல் பிளாட்பாரத்துல குட்டிக்கரணம் அடிச்சு...படம் முடிகிறது.
“தத்துத்துத்துத்”சொல்லாம இருந்திருந்தா?
VoiceMoonPiraiVaanengum.mp3
தூரி தூரி தும்மக்க - தென்றல் சுடும்-1989
குழந்தைகளின் மழலைச் சிரிப்பு கொள்ளை அழகு.
VoiceDhooriThendralSudum.mp3
இளம் மனதினில் - மஞ்சள் நிலா-1982
VoiceIlamanathinil-ManjalNila.mp3
சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்-1978
VoiceSattam En Kaiyil-SorgamMathu.mp3
தாத்தா தாத்தா கை -அன்புள்ள ரஜனிகாந்த்-1984
VoiceAnbulla Rajinikanth.mp3
சுக ராகமே சுப போகமே - கன்னிராசி-1985
VoiceSuga Raagameykannirasi.mp3
வெற்றி வெற்றி - கட்டுமரக்காரன்-1995
வேகமாக வரும் தாளக்கட்டு 0.43ல் மாறி மெதுவாகி பாட்டு ஆரம்பித்து “முத்தம்மா”க்கு பிறகு வரும் heavenly ஹம்மிங் அட்டகாசம்!
Only Maestro can do it! 0.(40-0.42 இல் ஒரு வித்தியாசமான நாதம் கேட்கிறது.Soulful music bit!)
VoiceVetriVetri-Kattumararakaran.mp3
தோப்பிலொரு நாடகம் நடக்குது -கல்லுக்குள் ஈரம் -1980
VoiceThoopiloru Nadagam.mp3
சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன்-1986
VoiceSingalathuchinna.mp3
டிங்கு டாங்கு - வள்ளி-1993
சூப்பர் ஸ்டார் இல்லக்கிழத்தி லதாரஜினிகாந்த் பாடறாங்க.
VoiceValli-DinguDaangu.mp3
தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்-1981
VoiceKadalMeengalThalaa.mp3
புதுச்சேரி கச்சேரி - சிங்காரவேலன்-1992
VoicePuthucheri.mp3
எங்கேயோ திக்குதெச - மகாநதி-1994
VoiceMahanadhi-(bengali)Engeyo.mp3
காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்-1990
VoiceIndranChandranKadhalRaga.mp3
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்-1978
ஜென்சியின் எட்டுப்பட்டிக்கும் கேட்கும் வீர்யமான இனிமையான குரல.
”லாலாலல லாலலால”வை குறுக்கிடும் துந்தனா அழகுப்படுத்துகிறது.பழைய நினைவு கதாநாயகிக்கு?
VoiceIdhayampoguthey.mp3
இது ஒரு நிலா காலம் - டிக் டிக் டிக்-1981
Voice Idhuoru Nila-Tik.mp3
எங்கும் நிறைந்த இயற்கை - இது எப்படி இருக்கு-1978
VoiceEngumNiraintha.mp3
இதழ் எனும் மடலிலே - காவலுக்குக் கெட்டிக்காரன்-1990
VoiceKaavalukkuKetti-Idhazhenum.mp3
தேவனின் கோவில் - அறுவடை நாள்-1986
Voice Devanin Koil-Aruvadai Naal.mp3
மீன் கொடி தேரில் - கரும்பு வில்-1980
VoiceMeenkodiTheril.mp3
கடலோரம் கடலோரம் - ஆனந்தராகம்-1982
VoiceAnantha RaagamKadaloram.mp3
தேவதைபோலொரு - கோபுரவாசலிலே-1991
VoiceGopura VasalileDevathai.mp3
மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு-1979
சுசிலா மேடம்தான் ரயில் விடறாங்க.ஜெயசந்திரன் சார் ஏன் விடல?
VoiceManjalNilavukku.mp3
ராமன் ஆண்டாலும் - முள்ளும் மலரும் -1978