Thursday, September 30, 2010

என்னைப் பேய்கள் படுத்திய பாடு..!

பேய் என்பதும் ஒரு பர்ஸ்னாலிட்டிதான்.அதுவும் மூக்கும் முழியுமாக இருக்கும்.ஆனால் கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஆளுமை.வீடு?சுடுகாடு,பாழடைந்த இடங்கள்,
பாழடைந்த கிணறு (அது கடைசியாக உயிரை விட்ட இடம்),புளிய மரம்,இத்யாதி இத்யாதி.ரேஷன கார்டு எல்லாம் கிடையாது.

மனிதன் படைத்த திகிலான அதிசயங்களில் ஒன்று.

ஏன் இந்த பர்ஸ்னாலிட்டி?நிறைவேறாத ஆசையால் இந்த ”பேய்” ரோல்.நிறைவேறி இருந்தால்?அல்ப ஆயுசில் இறந்தால் கூட முக்கால்வாசி பேய்தான்.

உடை? இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே காஸ்ட்யூம்தான் இந்த ஆளுமைக்கு. அது வெள்ளை நிறம்.காஸ்ட்யூம்  என்றாலே யார் வெள்ளை உடை கொடுத்தார்கள் என்று யூகிக்கலாம். சினிமாகாரர்கள்தான்.இதன் பின்னால் வரும் புகையும் வெள்ளைதான்.


தமிழ்ப்பட பேய்

புழங்கும் நேரம் இரவில் 12 முறை அடித்து ஓய்ந்து ரெண்டு முள்ளும்  12.00 மணியில் ஒட்டிக்கொண்டு நின்ற பிறகு.புழங்கும் முக்கால்வாசி பெண் பேய்க்குப்  பின்னால் ஒளிந்து (மரத்துக்கு மரம்)  தொடர்ந்தால திடீர் திடீர் என்று மறையும் தோன்றும். சிவரஞசனி ராகத்தில் soul stirring ஆக பாடிக்கொண்டே செல்லும். பாட்டிற்கு முன்  கட்டாயமாக கொலுசு சத்தம் கேட்கும்.


இந்திப்பட பேய்

இப்படி வரும் பேய்களை மென்மையாக சொன்னால் ”ஆவி”.ஆவி என்று சொன்னால கொஞ்சம்தான் பயம் வருகிறது.

இப்படித்தான் என் தலைமுறையில் ”பேய்”யைப் படம் வரைந்து பாகங்களை குறித்தார்கள்.ஒரு முறை கூட நேரில் பார்த்தது கிடையாது.

முதன் முதலாக ”பேய்” அறிமுகமானது ஒரு துடப்பக்கட்டையின் மூலம்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் என் அக்கா கைக்குழந்தையின் தூளியின் கிழே ஒரு துடப்பக்கட்டையை போட்டு வைத்திருந்தார்கள். எதற்கு என்று கேட்டதற்கு “பேய்/பூதம்” அண்டாமல் இருப்பதற்கு என்றார்கள்.

அப்போது பேய் எப்படி இருக்கும் யோசித்தேன்.அதுதான் உண்மையான கலப்படம் இல்லாத  முதல் யோசிப்பு. இருட்டுதான் யோசனையில் இருந்தது.

பிறகு இந்த பேய் அடிக்கடி வர ஆரம்பித்து அதன் மேல் ஒரு bird”s eyeview கிடைத்தது.

அப்போது டிவி இல்லாத அந்த காலம்.கிரிக்கெட் விளையாடிவிட்டு மணலில் உட்கார்ந்து talks போடுவோம்.முடிவில் பேய் பேச்சு வரும்.இது இல்லாமல் முடியாது.பேச ஆரம்பித்தவுடன் ரொம்ப நெருங்கி வருவோம்.அப்போது பின்னணியில் மயான அமைதி மற்றும் ஒளி டிம் ஆகிவிடும்.ஒரு மாதிரி ஜிவ்வென்று இருக்கும்.

பேசிவிட்டு  தனியாக வீடு திரும்பும்போது  பேய் கூடவே வரும்.நிழல் என் கூட வரக்கூடாது என்று ஏமாற்றி நடந்தால கூடவே திகிலாக வரும்.
 
பேச்சில்  தற்கொலை செய்துக்கொண்டவர்கள் வருவார்கள்.கிரிக்கெட் பீல்டிங்கில் deep extra cover  அல்லது   long leg இருக்கும் இடங்கள் ஒரு வெறிச்சோடிப்போன மரம் மற்றும் பாழைடைந்த கிணறு.அங்குதான் நிறைய தற்கொலை மரணங்கள் நிகழும். அங்கு கைகால் உதறிக்கொண்டே பீல்டு செய்ய வேண்டும். அதை நோக்கி வேணுமென்றே பந்தை அடிப்பார்கள்.

ஒரு தடவை அந்தப் பாழும் கிணற்றில் விழுந்தப் பந்தை எடுக்க எட்டிப் நடுக்கத்தோடு பார்த்தேன்.அலறினேன். பேய்?  உள்ளே  ஒரு பெண்ணைப் பார்த்து.முதன் முறையாக பேய் பார்க்கவிட்டாலும்  ஆய் போய்க்கொண்டிருந்த பெண்ணின் பிருஷ்டத்தைப் பார்த்து.என்ன சொல்லுவதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்துவிட்டு ஓடிவிட்டேன்.

அடுத்து பேச்சில் வருவது சுடுகாடு மற்றும் எரியும் பிணங்கள். என் பள்ளிக்கு (குரோம்பேட்டை)அருகே ஏரி. பக்கத்தில் மயானம்.எரியும் புகை பள்ளியை சுழ்ந்து சதை வேகும் நாற்றம் குடலைப் புடுங்கும்.”எரியும் போது கை கால்கள் எழும்” என்பதுதான் மைய பேச்சு.

அது எழுந்துப் போய் பேய் ஆகிவிடாமல் இருக்க வெட்டியான் அதை அடிப்பார் என்று கதைப்போம்.
 
அடுத்து வந்த வருடங்களில் ”பீஸ் சால் பாத்” “ஒரு விரல்”” யார் நீ” ”கும் நாம்””படகோட்டியும் பதிமூன்று பேய்களும்” ”சைக்கோ”" மூலம் பல பேய்கள் அறிமுகமாகி பயமுறுத்த ஆரம்பித்தது. பேய்யைப் பற்றிய முழு உருவம் கிடைத்தது.

நாய் நடு இரவில் ஊளையிட்டால் பேய் உலாத்துகிறது என்று சொல்லி பயமுறுத்தினார்கள்.

ஒரு  அருமையான ”பேய்”பாட்டு.பாடுபவர் வாணி ஜெயராம்.படம் “துணிவே துணை”.இசை எம் எஸ் வி.
 


பேய்யை நம்ப மறுத்து அடித்து பேசும் நாராயணனை “ டேய் .. இவ்வளவு பேசரயே,... நைட் ஷோ  ”யார் நீ”(டெண்ட் கொட்டகையில்) பாத்துட்டு வரவழில இருக்கிற  சுடுகாடு  (அப்போ பொணம் எரிஞ்சிட்டு இருக்கணம்) மரத்துல சாக்ஸ்பீசால  பெயர எழுதிட்டு காலைல அந்த டிக்கெட் காட்டுவயா?’ என்போம்

இப்போ அந்த சவாலை ஏற்க நான் தயார்.ஆனால் பகல் நேரத்தில்.ஏன் வெட்டியானை இந்த நைட்ஷோ பேய்கள் ஒன்றும் செய்வதில்லை. யாருமே அப்போது யோசித்ததில்லை.

அடுத்து கட்டுக் கதைகள். பீடி பற்ற வைக்க ”பொட்டி இருக்கா” கேட்ட பேய், 1000 பாத்திரங்களை துலக்கிய  பேய்,லவ்வரை இரவில் கொஞ்சும் பேய், வண்டிகளை நிறுத்தும் பேய்,பேய் பிடித்த நபர்கள்,மொட்டை மாடியில் கொலுசு சத்தம் பேய்கள்.யாரும் வாங்காத haunted house பேய்கள், ஆங்கில ஹாலிவுட் பேய்கள்....பக்கத்துணையுடன் பி.டி.சாமியின் பேய் கதைகள்.

மிக முக்கியமான இரவு 12 மணிக்கு தண்டவாளத்தைக் கிராஸ் செய்யும் முனியம்மா பேய்.

 டெயில் பீஸ்:

எழுத்தாளர் புதுமைப்பித்தனை ““பேய் .. இருக்கிறதா ? இல்லையா” என்று கேட்டதற்கு அவர்  பதில்:

 “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, அது மட்டும் உண்மை” என்று கூறினார்.

11 comments:

  1. //அடுத்து வந்த வருடங்களில் ”பீஸ் சால் பாத்” “ஒரு விரல்”” யார் நீ” ”கும் நாம்””படகோட்டியும் பதிமூன்று பேய்களும்” ”சைக்கோ”" மூலம் பல பேய்கள் அறிமுகமாகி பயமுறுத்த ஆரம்பித்தது. பேய்யைப் பற்றிய முழு உருவம் கிடைத்தது.//

    இப்போது டிவி, மொபைல், தண்ணீர் ஈரம் என்று ஆவிகளுக்கு வேறு ஒரு உருவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (யாவரும் நலம், ஈரம்)

    நான் முன்பொருமுறை எழுதிய பேய்ப்பதிவு இங்கே. நேரமிருக்கும்போது படித்துப்பாருங்கள்.

    http://chithran.blogspot.com/2004/06/blog-post_24.html

    ReplyDelete
  2. நன்றி சித்ரன்.

    உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  3. நண்பர்களின் அரட்டையில் கண்டிப்பாகப் பேய்கள் கதை உண்டு. நீங்கள் சொன்னது சரிதான்.ஒவ்வொருத்தர் கதைக்கும் கண், காது, மூக்கு ஏராளம். எங்கள் சொந்தக் காரர் ஒருவர் மிலிட்டிரியிலிருந்து வருவார்.மிலிட்டிரியைப் பற்றி அவர் சொல்வதை விட சரக்கைப் பற்றியும், பேய்களைப் பற்றியுமே அவர் பேச்சு சுற்றும்.
    நான் ‘நூறாவது நாள்’(8ம் வகுப்பு) படிக்கையில் தியேட்டரை விட்டே வந்து விட்டேன்(நளினி பேயாய்த் தோன்றும் பாடலில்).
    ‘பூவிழி வாசலிலே’- சத்யராஜ் வில்லன்(பாபு ஆண்டனி) ஓவியம் வரைகையில் வரும் ராஜாவின் திடுக்கிடும் இசைக்கு, சில சாமியார்கள் ஆடிக் கொண்டு வருவார்கள். அதைக் கண்டு பயந்திருக்கி
    றேன்.
    நான் இப்போதும் பயப்படுவது, தூக்கத்தில் வரும் ‘அமுக்கான்’ தான் . :-)

    ReplyDelete
  4. எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு பேய் உண்டு. அது கட்டுக் கதையின் மூலம் நம்மளைப் பிடித்துவிடுகிறது.

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  5. கொஞ்சம் மொக்ஸ்.. ஹிஹி. ஏன் இந்த ஆராய்ச்சி இப்போ?

    ReplyDelete
  6. என் ஆளு என்னை பிசாசு-ன்னு அடிக்கடி கூப்புடுறா.
    பிசாசு-ன்னா என்னா சொல்லுங்கோ...?

    எனக்கு பின்னாடி வருகின்ற அன்பு மக்களே...
    எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  7. ஆதிமூலகிருஷ்ணன் said...

    // கொஞ்சம் மொக்ஸ்.. ஹிஹி. ஏன் இந்த ஆராய்ச்சி இப்போ?//

    பழைய நினைவுகள். நன்றி ஆதி.

    ReplyDelete
  8. மோனி said...

    // என் ஆளு என்னை பிசாசு-ன்னு அடிக்கடி கூப்புடுறா. பிசாசு-ன்னா என்னா சொல்லுங்கோ...?//

    பேய் குடும்பத்தில் ஒன்றுதான்.வேறு ஒன்றும் தெரியாது. நேரில் பார்த்ததில்லை.

    நன்றி.

    ReplyDelete
  9. பேய்த்தனமா எழுதியிருக்கீங்களே!!! :)

    ReplyDelete
  10. ஊர்சுற்றி said...

    // பேய்த்தனமா எழுதியிருக்கீங்களே!!! :)//

    ஹா ஹா ஹா...ரொம்ப நன்றி.

    ReplyDelete
  11. பேய் பேய் மோகினி பேய் கையில் குழந்தையுடன் இதுவும் ஒன்று 😂😂😂👌👌👌👌

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!