வைப்பது ஒன்று கூப்பிடுவது வேறு
சின்ன வயதில் என் பாட்டியை யாராவது சுலோச்(சி)சு அல்லது ரங்கி(சுலோச்சனா ரங்கநாயகி)என்று சுருக்கிக் கூப்பிட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருமாம்.முழுப் பெயரோடுதான் கூப்பிட வேண்டும் என்று ஒரு standing instruction இருந்ததாக என் அம்மா சொல்லுவாள். செல்லமா கூப்பிட்டு அம்பாள நொண்டியாக்கிடாதங்கடி என்று கத்துவாளாம்.
பெயர்களை ஏன் சுருக்கி கூப்பிட்டு சிதைக்கக்கூடாது என்று பாட்டி சொல்லி அம்மாவிடம் கேட்டு எழுதினது.
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு அர்த்தம் தொனிக்க இந்து மதத்தில் பெயர்வைக்கும் வழக்கம் உண்டு. 1.மங்களகரம் 2.கடவுள் பெயர் 3.காதுக்கு ரம்யம் 4.முன்னோர்கள் ஞாபகம் 5.வீர்யம் 6.குல தெய்வம் 7.தேசத்தலைவர்கள்8.நியூமராலஜி என காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் கூப்பிடும்போதுகீது(கீதா),அச்சு(அர்ச்சனா)கெளச்சி(கெளசிகா)சீனு(ஸ்ரீனிவாசன்) தீனு (தீனதயாளன்)என்று நாய்க்குட்டியை கூப்பிடுவது போல் சிதைக்கிறோம்.அதன் உண்மையான வீர்யம் அல்லது மங்களகரம் இழந்து போய் முடமாகிவிடுகிறது. பெயர் வைக்கும் பலன நீர்த்துப்போய் விடுகிறது என்பது முன்னோர்கள் வாக்கு. புராண்ங்களில் கூட கதா பாத்திரங்கள் பெயர்களை விளிக்கும்போது சுருக்குவதில்லை.கடவுள் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதோ ஒரு பலனுக்காக நம் பெயரை பல தடவை எழுதிப் பார்ப்பதும் உண்டு.
“முழுச கூப்பிட என்ன வெட்கம்? வக்கும் போது உலகத்தயே பொரட்டி ஒரு பேரத் தேடறோம். இது என்ன சினிமா பேர ..ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது(பாட்டி அப்போது இருந்தார்) சார்ட் பண்றத்துக்கு.” என்று பாட்டி கொதிப்பாளாம்.
“இவுங்க கோயில்ல போய் ”அச்சு” பன்னுங்கன்னு சொல்றாங்க..இல்லையே அர்ச்சனை பண்ணுஙகன்னுதான்னே சொல்றாங்க.கோவில் குருக்கள் “ஐஸூ(ஐஸ்வர்ய்ய)நமக,காமு(காமாட்சி) நமக, சுப்பு (சுப்ரமண்ய) நமகன்னு சொல்லி பூவ போட்ட எப்படியிருக்கும். முகத்த சுளிக்க மாட்டமாக்கும்.நிறைய பேர் அவங்கள அறியாம பண்றாங்க.” என்று ஒரு போடு போடுவாளாம்.
(அன்றிலிந்து பாட்டியை தொடர்ந்து அம்மாவும் நாங்களும் பெயர்களை சிதைப்பதில்லை. உண்மையிலேயே முழுப் பெயர் கூப்பிட்டால் ரம்யமாகத்தான் இருக்கிறது.(அலர் மேல் வள்ளி?)
சிதைக்கப்படும் பெயர் பட்டியல்:-
பத்மா-பத்து, லலிதா(லல்லி), ஜானகி(ஜானு), சரஸ்வதி(சச்சு/சரசு),தீபா(தீபூ), பவானி(பவ்வு), வைஷ்ணவி(வைஷி) ஐஸ்வர்யா(Ash)(Ash.....இது ரொமப கொடுமை சரவணன். இந்த காலத்தை விட பாட்டி காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது. உம்: ருக்மணி(ருக்கு) ,காமாட்சி(காமு).
பார்த்தசாரதி (பாச்சா), கிருஷ்ணமூர்த்தி(கிச்சு/கிட்டு) வெங்கட்(வெங்கு)
நரசிம்மன்(நச்சு)இங்கும் தாத்தா காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது.
அபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா,
ஜானவி அரவிந்த்,etc., etc., போன்ற(அபார்ட்மெண்ட்)லேட்டஸ்டு பெயர்கள் சிதைக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை.
இரண்டு எழுத்துப்பெயர்களையே சுருக்குவது (அத விட இது ரொமப கொடுமை சரவணன்)
மாலா(மாலு) etc., etc.,
பெயரை சிதைக்காமலும் வைத்த பெயரை பயன்படுத்தாமலும் வேறு சில செல்ல பெயர்கள் உண்டு. அவை: ஜில்லு,பேபி,அச்சு,மல்லு,சம்பு,பப்பு,சன்னு,பப்பி,குட்டி,டால்லி,பிங்கி.
நமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல” என்று சொன்னாராம்.
நம்து முழு பெயரையும் காது குளிர கேட்கும் இடங்கள் சில:-
1.ஆஸ்பத்திரி 2.ரேஷன் ஆபிஸ் 3.பேங்க் கவுண்டர்.4.நீதிமன்றம்
(கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ஒரு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ரெண்டு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி.. மூணு தரம்)etc., etc.,