Wednesday, November 30, 2011

குப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ரயில்

வைகை மற்றும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விட்ட புதிதில் அதைப் பார்க்க ரயில்வே லைன் ஓரங்களில் மக்கள் காத்திருப்பார்கள்.”படக் படக் படக்..”புழுதி பறக்கக் கடக்கும் நம்மை.
மெட்ரோ ரயிலும் ”படக் படக் படக்” என்று புழுதி இல்லாமல் சென்னை வாசிகளை கடக்கப்போகிறது.

முதல் தடவையாக சிட்டிக்குள் பாம்பு மாதிரி ஊர்ந்து போகப்போகிறது பூமிக்கு மேலும் கிழும்.நிச்சியமாக அண்டர் கிரவுண்ட் ஓட்டத்தை ஆர்வமாக (பிரயாணம் செய்துக்கொண்டே(ஒரு “மண்ணாங்கட்டியும்”தெரியாது) பார்ப்பார்கள்.பூமிக்கு கிழே சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம்,அண்ணாசாலை,எல்.ஐ.சி,சென்ட்ரல் வழியாக வண்ணரப்பேட்டைக்கு ஒரு ரூட்டு போகிறது,

இரண்டு வருடமாக சென்னையில் அங்கங்கு மெட்ரோ
ரயிலுக்கு வேலைகள் ஜரூராக வேலை நடக்கிறது.போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
ஜவஹர்லால் ரோடு(100 feet Rd)

அது என்ன சென்னை மெட்ரோ ரயில்?

பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் காலத்திற்கு ஏற்றார்போல்(fast,reliable,convenient,economical,efficient and modern transport) விரைவான,சிக்கன,நம்பகமான,புகை இல்லாத,திறன் வாய்ந்த, வசதியான,நவீன வாகனம்தான் மெட்ரோ. அடுத்து இது மற்ற போக்குவரத்துக்களுடன் சார்ந்து மக்களுக்கு பயன் அளிக்கவேண்டும்.

இதுதான் இதன் லட்சியம்.விஷன்.
கொல்கொத்தா மெட்ரோ
மெட்ரோவின் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்:-
  1. மற்ற போக்குவரத்துக்களை ஒப்பிடும்போது இதற்கு பயணிகள் ஐந்தில் ஒரு பங்கு எனர்ஜி செலவிட்டால் போதும்
  2. சாலைகளை அவ்வளவாக ஆக்கிரமிப்பதில்லை
  3. பயண நேரத்தை குறைக்கிறது
  4. புகை, இரைச்சல் இல்லை
  5. பாதுகாப்பானது,நம்பகமானது
முக்கியமாக இந்தச் சென்னை மெட்ரோ அண்ணாசாலை,ஜவஹர்லால் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை மூன்றையும் இணைக்கிறது.

எங்கிருந்து எங்கு போகிறது? இரண்டு ரூட்கள்.
  1. முதல் ரூட் (corridor -1) வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்(23km)
  2. இரண்டாவது ரூட் ( corridor -2) செண்ட்ரல் - செயிண்ட்தாமஸ் மவுண்ட்(22km)
  3. இதில் 24km பூமிக்கு அடியிலும் மீதி மேலும் செல்கிறது
படத்தைப் பார்க்க.
  1. ரூட் -1 வண்ணாரப்பேட்டை -சைதை வரை பூமிக்கு அடியில் பிறகு மேல்
  2. ரூட் -2 செண்ட்ரல் - திருமங்கலம்(அண்ணா நகர்) பூமிக்கு அடியில் பிறகு  மேல்
கிழிருந்து மேல்,மேலிருந்து கிழ் நெருங்கும் பகுதிகளை எப்படி ஜெர்க் இல்லாமல் சரி(அலைன்) செய்வார்கள்?

மற்ற திட்டங்கள்:
  • 2-27 கிமீக்கு ரூ8 - 23 வரை வசூலிக்கப்படலாம்(தோராயமாக)
  • 30கிமீ வேகம்.ஆனால் 80கிமீ போவதற்குத் திறன் உள்ளது
  • 45 நிமிட பயணம் முதல் ரூட்டிற்கு 
  • 30 வினாடிகள் நின்று புறப்படும்
  • 5 நிமிடத்திற்கு ஒரு முறை நெருக்கடி நேரத்தில் மற்ற நேரத்தில் 15 நிமிடம் ஸ்டேஷனுக்கு வரும்
  • பேப்பர் இல்லாத டிக்கெட் மற்றும் தானியங்கி ஏறுதல்/இறங்குதல்
  • இதனால் 16 பேரூந்துகளும்,300 நான்கு சக்கர மற்றும் 600 இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் குறையும்.ஆட்டோ?
  • ரூட் -1 அன்ட் 2 தலா, 17 ஸ்டேஷன்கள் 
  • தண்டவாள நடுவில் அதிக வோல்ட் மின்சாரம்.அதைத் தேய்த்துக்கொண்ட்டுதான் மெட்ரோ போகும்.தொட்டால் கரிக்கட்டைதான்.வாட்டர் பாட்டில் விழுந்தால் எடுக்காதீர்கள்
  • ஸ்டேஷனிலிருந்து இறங்கியவுடன் வேறு இடத்திற்குச் செல்ல feeder service உண்டு (????)
  • முதல் கட்டமாக ஒரு பகுதி (பூமிக்கு மேல்) 2015ல் பயணத்திற்கு விடப்படும்
  • அவசரத்திற்கு டிரைவரை தொடர்பு கொள்ள அழுத்த விசைகள் உண்டு
  • ஒரே சமயத்தில் 1200-1500 பிரயாணிகள் பிரயாணம் செய்யலாம்
  • ”பாஸ் டைம்” வேர்கடலை,கர்சீப்,ஊசி,பாக்கெட் காலண்ட்ர்,நெய் பிஸ்கட் இத்யாதிகள் தொல்லை இருக்காது
முதலீடு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது.அதை 30 வருடங்களில் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

மறக்காம குடுத்துடங்க கடன் அன்பை முறிக்கும்.

பயணிகள் கவனத்திற்கு ...அடுத்த மெட்ரோ இன்னும் சில நிமிடங்களில் .....திருமங்கலம்(அண்ணா நகருக்கு)



13 comments:

  1. தில்லியில் மெட்ரோ ரயில் திட்டம் நல்ல வெற்றி பெற்றுள்ளது. பயணிகளுக்கும் உதவியாகவே உள்ளது. பெங்களூருவிலும் நன்றாக இருப்பதாகவே கூறுகிறார்கள். மக்களுக்கு இதனால், தினசரி பயணம், சற்று சிரமத்தைக் குறைக்கலாம். ஆனால், சென்னையின் மிக முக்கிய பிரச்சனை அதன் குறுகிய சாலைகளும் அதன் பராமரிப்பும் தான். இவை மிகவும் முக்கியமாகச் செய்யப்பட வேண்டியவை.

    அருமையான தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  2. நன்றி வேங்கட் ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  3. //.தொட்டால் கரிக்கட்டைதான்.வாட்டர் பாட்டில் விழுந்தால் எடுக்காதீர்கள்//

    மெட்ரோ ரயில் பற்றிய தகவல்கள் அருமை. சென்னைவாசிகளுக்கு யோகம் தான்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ரவி ஆதித்யா.

    'மெட்ரோ ரயில்' சென்னையின் புதிய அடயாளமாக மாறப்போகிறது. நம் மக்கள் எச்சில் துப்பி, குப்பை கொட்டாமல் இருந்தால் சரி!

    நானும் இதேபோன்று ஒரு பதிவிட்டுள்ளேன்.... http://www.tamilanveethi.blogspot.com/2011/11/chennai-metro-train.html

    ReplyDelete
  5. மம்மி வந்ததும் இதிலும் ஏதேதோ சில மாற்றங்கள் - வழக்கம்போல் நல்லவையல்ல அவை என்று சில கூக்குரல்கள் எழுந்தன - கொண்டுவருவதாகச் சொன்னது என்னாயிற்று?

    ReplyDelete
  6. நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

    நன்றி தோழன் மபா.பார்த்தேன்.நன்று. புகைப்படங்கள் அருமை.

    தருமி: அது மோனோ ரெயில் கொண்டு வருவதாக.

    நன்றி தருமி.

    ReplyDelete
  7. மோனோ ரெயில் / மெட்ரோ ரயில் எது வருகிறது? மோனோ வரவில்லையே?

    ReplyDelete
  8. நீங்க கே.ரவிஷங்கரா .. இல்ல ரவி ஆதித்யாவா?

    ReplyDelete
  9. //மோனோ ரெயில் / மெட்ரோ ரயில் எது வருகிறது? மோனோ வரவில்லையே?//

    மெட்ரோ ரயில் வேலைத்தொடங்கிய இடங்களில் கிடையாது.மோனோ((ஜெவின் விருப்பம்) வேறு இடங்களில் வரலாம்.இது என் யூகம்.

    //நீங்க கே.ரவிஷங்கரா .. இல்ல ரவி ஆதித்யாவா?//

    பெயர் கே.ரவிஷங்கர். வலையின் பெயர் ரவிஆதித்யா.பிளாக்ஸ்பாட்.காம்.

    நன்றி தருமி.

    ReplyDelete
  10. நன்றி அருள்.

    ReplyDelete
  11. இன்னொரு பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்காக இங்கே தருகிறேன்.

    ReplyDelete
  12. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விளக்கமான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி .. ரவி ஆதித்யா... கஜகஸ்தானின் அல்மாதி மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.. 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் தான் வெறும் 8 கி.மீ. தொலைவில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.. மத்திய ஆசியாவில் உஸ்பெகிஸ்தான் மெட்ரோவை அடுத்து இதுவே இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம்.. இதையெல்லாம் பார்க்கும்போது இங்கு டெல்லியிலும், பெங்களூருவிலும் அடுத்ததாக சென்னையிலும் குப் குப் குப் என மெட்ரோ ரயில்கள் ஒடுவதும் ஓடவிருப்பதும் ... சொல்ல வார்த்தைகள் இல்லை.. ஏனென்றால் எனது தமிழ் சொல்வளம் மிகக்குறைவு !

    ReplyDelete
  13. நன்றி நந்தன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!