Tuesday, June 15, 2010

விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை

பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். பள்ளியில் படிக்கும் (9ஆம் வகுப்பு))என் மகனை அழைத்துவர பள்ளி வாசலில் காத்திருந்தேன். பள்ளி முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்.இவனை மட்டும் காணவில்லை.

கொஞ்சம் நேரம் கழித்து வந்தான். ஆனால் முகத்தில் மூக்குக் கண்ணாடி இல்லை. வருத்தமாக இருந்தான்.மூக்குக்கண்ணாடி வகுப்பின் ஷன் ஷேடில் விழுந்துவிட்டதாகவும் அதை எடுக்க முடியாது என்றும் இந்நேரம் உடைந்திருக்கும் என்றும் சோகமாகச் சொன்னான். மேலும் அவன் கண்ணாடி இல்லாமலேயே மூன்று பிரிவு பாடங்கள் கேட்டிருக்கிறான். நானும் வருத்தமானேன்.

அந்தக் கண்ணாடியின் விலை ரூபாய் 2000/-இவன் தான் போட்டிருப்பான் என்று யூகித்தேன்.விளையாட்டுத்தனம் உள்ளவன். அவனை அழைத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் உள்ள இவன் வகுப்பறைக்குச் சென்றேன்.அங்கு படிப்பில் குறைந்த திறன் உள்ள மாணவ மாணவிகளுக்கான வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு ஆசிரியைகள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நான் உள்ள நுழைந்ததுதான் தாமதம் “ சார்...இவன் ரொம்ப வாலு. ஜன்னல் கிட்டபோய் மூக்குகண்ணாடியை தூக்கிப்போட்டுட்டான் சார் “என்று அவன் வகுப்பு ஆசிரியை புகார் படித்தார்.தொடர்ந்து  ஐந்து நிமிடம் இவருடன்  மற்றொரு டீச்சரும் சேர்ந்துக்கொண்டு ”இவன் தான்.... இவன்தான்...” என்று அவனை சிலுவையில் அறைந்தார்கள்.அப்படி ஒன்றும் பெரிய குற்றம் இல்லை அது.

”அப்பறம் பேசலாம்..முதலில் அதை எடுக்க முயற்சிக்கலாம்.மேடம் அது ரூபாய் 2000 !” என்றதும் ”அது அவனுக்கு தெரிய வேண்டாமா?” என்றார் ஆசிரியை. நான் என் கோபத்தை அடக்கிக்கொண்டு,பின்னால் பேசலாம் முதலில் விழுந்த இடத்தைக் காட்ட சொன்னேன்.
காட்டினார்கள். சரியாகத் தெரியவில்லை.


பக்கத்து பில்டிங்கிலிருந்து பார்த்தேன்.இரண்டு தடவை படிகளில் ஏறி இறங்கி்னோம்.வகுப்பு ஆசிரியையும் பொறுப்பாக எங்களுடன் ஏறி (ஒரு முறை) இறங்கினார்.பள்ளி பணியாளர் ஒருவரை தன் செல்லில் கூப்பிட்டு உடனே எடுக்கச் செய்தார்.

கண்ணாடியைப் பார்த்ததும் மகனுக்கும் எனக்கும் அளவு கடந்த மகழ்ச்சி.நல்லவேளை உடையவில்லை.(இவன் நண்பர்களோடு சேர்ந்துக்கொண்டு விளையாட்டுத்தனமாக போட்டிருக்கிறான்.அதை எடுக்கவும் பாமரத்தனமாக முயற்ச்சித்திருக்கிறார்கள்.)

அதற்குப் பிறகு வகுப்பு ஆசிரியையிடம் சற்று கோபமாக கிழ் கண்ட விஷயங்களைப் பற்றிப் பேசினேன்.(முதலில் நானும் என் பையனும் வருத்தம் தெரிவித்துவிட்டு...)

1.கொலைக் குற்றம்  செய்த மாதிரி,குழந்தைத் தனமாக  அவனைப் பற்றி புகார் பட்டியல் படித்தது
2.புகார் பட்டியல் படித்த அளவுக்கு கண்ணாடியை எடுத்துத் தருவதற்கு கடுகளவு முயற்சி கூட எடுக்காதது
3.கண்ணாடி இல்லாமல் எப்படி அடுத்த மூன்று பிரியடுகள் படிப்பான் என்று கிஞ்சித்தும் வருத்தம் இல்லாதது.
4.ஆசிரியைக்கு உண்டான அடிப்படைப் பொறுப்புணர்ச்சி இல்லாதது
5.பென்சில்,பேனா,மூடி,எரேசர்,ஸ்கேல் போன்றவைகளோடு கண்ணாடியையும்  சேர்த்து விட்டது(இதெல்லாம் குழந்தைகளால் அடிக்கடி அங்கு  விழுவது) ...பரவாயில்ல...! வேற வாங்கிக்கலாம்..!
6.Look beyond what you see



ஆசிரியை ரொம்பவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கண்ணாடியை எடுத்துதுத்தந்ததற்கு  பாராட்டிவிட்டு கிளம்பினேன்.பேச்சினிடையே ஆசிரியைகளின் , மாணவி/மாணவர்களை மேய்ப்பதின் கஷ்ட நஷ்டங்களையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

எனக்கு,  மகனுக்கு அந்த இரண்டு ஆசிரியைகளுக்கும் மறக்க முடியாத அனுபவம்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அனுபவம்

முக்கியமானது: இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது பெற்றோர்கள் சோம்பேறித்தனப்படாமல் “என்ன ஏதுவென்று” தீர விசாரித்து அறிந்துக்கொள்வது மிகவும் நல்லது.


வீட்டிற்கு வந்தவுடன் பையனுக்கு அறிவுரை செய்தேன்.

ஆனால்......

கண்ணாடி இல்லாமல் பின் வந்த மூன்று வகுப்புகளில் அவன் பட்ட அவஸ்தை அவனுக்கு வண்டி வண்டியாகப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டது.

4 comments:

  1. மூணு பிரிவுகள் குழந்தை கண்ணாடி இல்லாமல் அவஸ்தை படும்ன்னு கூட மிஸ் யோசிக்கலையா? ரொம்பவும் மோசம் தான். என்னதான் வால்தனம் பண்ணினாலும் கண்ணாடியை, அது விழுந்தப்போவே எடுக்க முயற்சி எடுத்திருக்க வேண்டாமா?

    ரொம்பவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. நன்றி அநன்யா மஹாதேவன்

    ReplyDelete
  3. நன்றி ILA(@)இளா

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை.. தலைப்பு ஏ ஒன்...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!